அசையூண் வயிற்றுப் பிராணியின் (மாடுகளின்) அளவில்லாப் பயன்கள்

cow“ மாடு இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது புதுமொழி. மாடு மற்றும் எருமைகள் பால், சாணம், கோமியம் போன்றவை உயிரோடு இருக்கும் பொழுதும், இறைச்சி தோல் போன்ற பல வகையான உப பொருள்களை இறந்த பின்பும் கொடுக்கிறது.  உப பொருள்களை கொண்டு பல வகையான உபயோகப் பொருள்களைஉற்பத்தி செய்கின்றனர்.  அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

மாட்டு இறைச்சி:

பொதுவாக மாட்டு இறைச்சி என்பது புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த தசைப் பகுதிகளே என எண்ணுகிறோம்.  ஆனால் கல்லீரல், இதயம், நாக்கு, சிறுநீரகம் மற்றும் கணையம் போன்றவை சுவையை அதிகப்படுத்த வெளிநாட்டு உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கப்படுகின்றன.  இதுமட்டுமில்லாமல் மாட்டின் எலும்புகளில் இருந்து பெறப்படும் ஜெலாடின் எனப்படும் பசைப்பொருளைக் கொண்டு ஐஸ்கீரிம் மற்றும் இனிப்பு தயிர் போன்றவற்றை தயாரிக்கின்றனர்.

மாட்டு இறைச்சியில் உண்ணத் தகுந்த உப பொருள்கள்:

1.  நாண் தசையிலிருந்து இறைச்சி குழலப்பம்
2.இரத்தத்திலிருந்து இரத்தக் குழலப்பம், புரத செறிவுப் பொருள்.
3.கொழுப்பு அமிலத்திலிருந்து ஒலியோ மார்கேரைன், ஒலியோ சார்டனிங் போன்றவை.
4.ஜெலாடின் பசைபொருளிலிருந்து ஐஸ்கீரிம், இனிப்பு தயிர், கற்கண்டு, நறுமண சுவைப் பொருள் மற்றும் மார்ஷ்மேலோஸ்.
5.பிளாஸ்மா புரதத்திலிருந்து பாஸ்டா, கேக் வகைகள் மற்றும் கடல் உணவு மாதிரிகள்.

மாட்டு இறைச்சியில் உண்ண தகாத பகுதிகள் மற்ற விலங்குகளுக்கு உணவுப் பொருளாகப் பயன்படுறது. கொழுப்பு, புரதம் மற்றும் எலும்புத்தூள் போன்றவை கோழி, பன்றி மற்றும் மீன்களுக்கு
உணவாக அளிக்கப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள்

மாட்டு இறைச்சியின் உண்ணத் தகாத உபப் பொருள்கள் வீட்டு உபயோகப் பொருட்களாகவும்
பயன்படுகிறது.  உதாரணமாக நாம் கைகள் கழுவ பயன்படுத்தும் சோப்புகள், படுக்கை விரிப்புகள் போன்றவை அடங்கும்.

கொழுப்பு /  கொழுப்பு அமிலம் / புரதத்திலிருந்து

மெழுகுவர்த்திகள்                           வண்ணப் பூச்சுகள்
செராமிக்ஸ்                                     பிளாஸ்டிக்
வண்ண சுண்ணம்                           காலனி பூச்சுகள்
வாசனை திரவியங்கள்                   சவரப்பூச்சுகள்
பூச்சிக் கொல்லிகள்                        சோப்புகள்
லினோலியம்                                  தரைப் பூச்சுகள்
ஒட்டும் பசைபொருள்கள்               நெசவுப் பொருட்கள்
செல்லப்பிராணி உணவுகள்           குதிரை மற்றும் கால்நடை உணவுப் பொருட்கள்

தோலிலிருந்து

பதனிடப்பட்ட தோல் பொருட்கள்
பயனப் பொருட்கள்
காலனி மற்றும் புதைமதி

நாண்தசை புரதத்திலிருந்து

சுவரொட்டிகள்
படுக்கை விரிப்புகள்
சாணைக்கல் பலகைகள்
பிசின் (பசை)

குழம்பு மற்றும் கொம்புகளிலிருந்து

ஓடு
சீப்புகள்
தந்த மாதிரிகள்
பியானோ பொத்தான்கள்

முடியிலிருந்து வண்ணப் பூச்சுக்கான தூரிகைகள் மற்றும் ஜெலாட்டின் புரதத்திலிருந்து புகைப்பட சுருள், புகைப்பட பதிவுகள் போன்றவற்றை தயாரிக்கின்றனர்.

மருந்தகப் பொருட்கள்

அகையூண் வயிற்றுப் பிராணியின் உடலின் கரிம வேதியியல் அமைப்பானது மனிதர்களின் கரிம வேதியியல் அமைப்புடன் ஒத்துக் காணப்படுகிறது.  எனவே நமது உடலானது மிக எளிதாக இவ்விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுக் கொள்கிறது.

கணையத்திலிருந்து

இன்சுலின்                                      – நீரிழிவு நோயினை குணப்படுத்த
பேன்கிரியாட்டின்                            – செரிமானத்தை அதிகப்படுத்த
குளுக்கோகான்                             – இரத்த குளுக்கோஸ் குறைபாட்டை சரி செய்ய

இரத்த பிளாஸ்மாவிலிருந்து

காரணி 1                                         – காய குருதிப்பெருக்கத்தை கட்டுப்படுத்த
காரணி2                                        – வைரஸ்களை அழிப்பதற்கு
இரத்த கரு புரதம்                          – ஆர்.எச்.காரணி
த்ராம்பின்                                     – இரத்தம் உறைய வைக்க
இரும்பு                                         – .இரத்த சோகையை குணப்படுத்த

எலும்புகளிலிருந்து

எலும்பு மஞ்சை                               – இரத்த குறைப்பாட்டு நோய்களை சரிசெய்ய
மென் குருத்தெலும்பு                      – பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு
எலும்புத் தூள்                                 – கால்´யம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாட்டை சரிசெய்வதற்கு
தண்டுவடத்திலிருந்து                      – கொலஸ்டிரால் மூலம் ஹார்மோன்களை உற்பத்தி
செய்வதற்கு

பிட்யூட்ரி சுரப்பிலிருந்து

புலோலேக்டின்                              – பால் உற்பத்தி அதிகப்படுத்த
.இரத்த நாள இயக்கு நீர்              – இரத்த அழுத்தத்தை சீர் படுத்த மற்றும் சிறுநீரகம்  மற்றும்
குடலின் வேலைகளை கட்டுப்படுத்த
மேல் சிறுநீரக இ.யக்குநீர்          – மூட்டு வீக்கம் மற்றும் அலர்ஜியை கட்டுப்படுத்த

கல்லீரலின் மூலம் 

யஹப்பாரின்                                 – இரத்த உரைதலை தடுப்பதற்கு
கல்லீரல் செறிவுப் பொருள்          – குடல் மற்றம் சிறுநீரக வேலைகளை கட்டுப்படுத்த
வைட்டமின் பி 12                          – வைட்டமின் பி சத்து குறைப்பாட்டை சரிசெய்ய

போன்றவை பிரித்தெடுத்து பல வகையான நோய்களை சரிசெய்வதற்கு மருந்துகளை
தயாரிக்கின்றனர்.

இயந்திரப் பொருட்கள்

மாட்டு இறைச்சியின் உண்ண தகாத உப பொருள்களான கொழுப்பு அமிலம் மற்றும் புரதங்களிலிருந்து பல வகையான நீர்மங்கள் மற்றும் உணவிடு பொருட்கள் தயாரிக்கின்றனர். அது மட்டுமல்லாமல்

1. கார்களில் உரை தடுப்பான்
2. கார் டயர்களில் உள்ள ஸ்டீரிக் அமிலமானது உராய்வின் போது டயர்களின் உருவ அமைப்பை சீர்படுத்துகிறது.
3. புரதத்திலிருந்து பெறப்படும் பிசின் பல வகையான பொறி வண்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.
4. நீராற்றாலில் இயங்கும் எந்திரங்களில் தடை நீர்மம் தயாரிக்கப் பயன்படுகிறது.
5. ஆகாய விமானங்களில் உயவிடு பொருட்கள்.
6. பலவகையான இயந்திர எண்ணெய் மற்றும் நீர்மங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
7. கார்களுக்குத் தேவையான மெருகேற்றிகள் தயாரிக்கவும் உப பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
8. கார்களில் பயன்படுத்தப்படும் தளவாடச் சாமான்கள்

இவ்வாறாக மாடுகளிலிருந்து உண்ணத் தகுந்த உபபொருட்கள் மற்றும் உண்ணத் தகாத உப பொருட்கள் மனிதனின் அன்றாட வாழ்வில் பல வகையான முறைகளில் பயன்படுகின்றன.

மாடு இறந்தாலும் நமக்கு பயனளிக்கும் என்பது சரிதானே.

ரா.பவித்ரா, வே.ரமேஷ்சரவணக்குமார், ஜெ.முரளிதரன் மற்றும்  து.கண்ணன் கால்நடை
உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 637 002

About ரமேஷ் சரவணக்குமார்.வே.

View all posts by ரமேஷ் சரவணக்குமார்.வே. →