அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் – உச்ச நீதிமன்றம் கருத்து

20266668.cmsஅரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் –
உச்ச நீதிமன்றம் கருத்து அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது மிகப் பெரிய பிரச்சினை.  இது நாட்டின் வளர்ச்சியைப்  பாதிக்கச் செய்கிறது என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் சம்பு தயாள் நகர். கடந்த 1996 ம் ஆண்டு பதான் சிங் என்பரின் சகோதரியைச் சிலர் தாக்கினர்.  இது பற்றி பதான் சிங் போலீஸில் புகார் செய்தார்.  பதான் சிங்கின் சகோதரியைத் தாக்கியவர்களைக் கைது செய்ய சம்பு தயாள் ரூ.3500/- லஞ்சம் கேட்டார்.  இந்த வழக்கில் எதிரித் தரப்பினரும் புகார் அளித்துள்ளதால், பதான்சிங் மற்றும் அவரது சகோதரரையும் கைது செய்வேன் என்று சம்பு தயாள் மிரட்டினார்.
சம்பு தயாள் மீது புகார் வந்ததையடுத்து அவர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பிடித்தனர்.  இந்த வழக்கை விசாரனை செய்து கீழ் நீதிமன்றம், சம்பு தயாளுக்கு ஒரு வருடம் சிறை மற்றும் ரூ.500/- அபராதம் விதித்தது. கீழ் நீதிமன்றம் விதித்த தண்டணையை எதிர்த்து மத்தியப்பிரதேச உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் சம்பு தயாளை விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் டி.பண்டாரி ஆகியோர் அடங்கிய டிவி­ன் பெஞ்ச் இம்மனுவை விசாரித்தது.  நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: –

“ ஊழல் என்பது புற்று நோய் போன்றது.  இது நாட்டின் அரசியல் சமூக அமைப்பு போன்ற முக்கிய பாகங்களை வேகமாக அழித்து விடுகிறது.  ஊழலால் நாட்டின் வளர்ச்சி கெடுகிறது மேலும் நேர்மையான அதிகாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஸ்வதந்தர் மற்றும் அரியானா அரசுக்கு இடையிலான வழக்கில் அரசு ஊழியர்கள் தங்கள் பதவிக்குரிய பணியை நேர்மையாகச் செய்தால்த்தான் அரசுத் துறை சிறப்படையும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.  உயர் நீதிமன்றத்தீர்ப்பை அங்கீகரித்து, தண்டனையில் கருணை காட்டுமாறு சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்கிறோம்“  இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →