அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ.75 – 80 வரை நிலவும்

chiliஉலகளவில் இந்தியா “மசாலா கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது. 2012-13 ஆம் ஆண்டில் மிளகாய் 7.93 இலட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 13 இலட்சம் டன்கள் உற்பத்திச் செய்யப்பட்டது. உலக அளவில் மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36 சகவீதம்) முதன்மை நாடாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து சீனா (11 சதவீதம்), பங்களாதேஷ் (8 சதவீதம்), பெரு (8 சகவீதம்) மற்றும் பாகிஸ்தான் ( 6 சதவீதம்) ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது. இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 85-90 சதவீதம் உள்நாட்டு உபயோகத்திற்குப் போக மீதமுள்ள 10-15 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய்ப் பசை ஆகியவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வற்றல் மிளகாய் இலங்கை, அமெரிக்கா, நேபாளம், மெக்ஸிகோ, மலேசியா, வங்க தேசம், ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன.

2011-12 ல் தமிழ்நாட்டில் மிளகாய் வற்றலானது, 56,442 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 24,640 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் (முண்டு), விருதுநகர் (சம்பா), தூத்துக்குடி (முண்டு), சிவகங்கை (சம்பா) மற்றும் திருநெல்வேலி (சம்பா, முண்டு) ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கிய பிறகே (அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதிவரை) மிளகாய் விதைக்கப்படுகிறது. இந்தியாவில் மிளகாய் வரத்தானது நவம்பரில் தொடங்கி மே இறுதிவரை நீடிக்கும். இதில் முதல் வரத்து மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நவம்பர் மாதத்தில் தொடங்கும். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வரத்து நீடிக்கும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய்; விருதுநகர், கோவில்ப்பட்டி, சாத்தூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், கமுதி மற்றும் முத்துகுளத்தூர் சந்தைக்குப் பிப்ரவரி முதல் மே வரை அறுவடைக்கு வரும்.

அனைத்து மாநிலங்களின் உற்பத்தி, குறிப்பாக ஆந்திரா மாநிலத்தின் உற்பத்தி, தேவை மற்றும் ஏற்றுமதியை பொருத்தே மிளகாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வற்றல் குவிண்டாலுக்கு ரூ.6500 – 8000 வரை விற்பனை செயய்ப்படுகிறது. தமிழகத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள், நடப்புப் பருவத்தில் மிளகாய் பயிரிடலாமா? அல்லது வேறு பயிர்கள் பயிரிடலாமா என்ற முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகமானது, கடந்த 18 ஆண்டுகளாக விருதுநகர் சந்தையில் நிலவிய விலையை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், பிப்ரவரி Š மே 2015 மாதங்களில் அறுவடை செய்து சந்தைக்குப் புதிதாக வரும் மிளகாய் வற்றல் கிலோவிற்கு ரூ.75-80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் மிளகாய் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் – 641 003. தொலைபேசி – 0422-2431405
மேலும் தொழில்நுட்ப விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வாசனை மற்றும் நறுமணப் பொருட்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,