ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.– மதிப்புக்கூட்டுப் பொருட்கள்.

kl39ju5a‘KEYSTONE’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொடங்கி வைத்ததே இந்த ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.’ ‘Keystone’ தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நீலகிரி பயோஸ்பியரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன் 3 நபர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும். நீலகிரி பயோஸ்பியரில் – கூடலூர், சிகூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குறும்பாடி, பில்லூர், செம்மனனேரி, பங்கல்பாடிகை… போன்ற இடங்களில் ‘Keystone’ சென்டர்கள் உள்ளன.

    பழங்குடி மக்கள் தேனெடுத்து விற்பது ஒர் வருவாயை ஈட்டித்தந்தது. வனப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டு வரும் தேனினை வணிகர்களின் குறுக்கீடால் உரிய விலைக்கு விற்பதில் பிரச்சனை இருந்தது. இதுபோன்ற குறுக்கீட்டிலிருந்து உரிய விலை கிடைத்திடவும் மற்ற தானியப் பயிர்களையும், உற்பத்திப் பொருட்களையும் மதிப்புக் கூட்டி விற்க வேண்டியும் ‘Keystone’ அமைப்பு ‘ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனத்தை’த் தொடங்கியது. பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.

    ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவன லிமிடட்’ டைச் சட்டப்படியான முறையில் பதிவு செய்து,  உற்பத்தி, பழங்குடியினருக்குக் கைத்தொழில், மதிப்புக்கூட்டல், விற்பனை… போன்றவைகளைச் செய்து வருகிறோம் என்றார் ‘தலைமை நிர்வாக அதிகாரியான’ திரு.அருண் ராமசந்திரன் அவர்கள். கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்தில் சுமார் 1609 பங்குதாரர்கள் உள்ளனர் என்றார்.

    ஆதிமலை நிறுவனம் மதிப்புக்கூட்டும் பொருட்கள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கக்கூடியவை. அதாவது NTFP (Non Timber Forest Product) ஆகும், வனத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, மதிப்பூட்டி விற்பனை செய்து வருகிறோம்.  பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அளித்திட வேண்டி இயந்திரம் கொண்டு எதையும் பேக் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    அந்த வரிசையில் இந்த மாதம் இரண்டு பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்…

1.இனிப்புச் சுவையுடைய தேன்
    ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம்’ பழங்குடியினரிடமிருந்து மட்டுமே தேனைச் சேகரித்து விற்பனை செய்கிறது. பாறைகளில் இருக்கும் தேனீ குடும்பங்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகின்றது. இந்தத் தேனீக் குடும்பங்கள் வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியதாகும். ஏப்ரல் முதல் ஜூலை வரை தேன் சேகரிப்புப் பணி நடைபெறுகிறது.

    தேன் சேகரிப்பில் ஈடுபடத் தனிக் குழு உள்ளது. இந்தத் தேனீல் பாரம்பரியமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆகவேதான் ஆயுர்வேதா, சித்தா போன்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    250 மற்றும் 500 கிராம் பாட்டில்களில் கிடைக்கின்றது. 25 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் உள்ள தேனை சேகரிப்பதில்லை. தேனை 3 பிரிவுகளாக வடிகட்டிய பின்பே சந்தைக்குக் கொண்டு வருகிறோம்.

2. சீகக்காய் சோப்
    வனப்பகுதியிலிருந்து கிடைக்ககூடிய சீகக்காயைக் காய வைத்து தேனீயின் மெழுகைப் பயன்படுத்தி சோப் தயாரிக்கப்படுகின்றது. இந்த சோப்கள் அனைத்தும் (பயிற்சி எடுத்த பழங்குடியினரின்) மனித சக்தி கொண்டே தயாரிக்கப்படுகிறது. தேனீயின் மெழுகைப் பயன்படுத்துவது சோப்பின் பக்குவநிலைக்கு கொண்டுவரவும், சீகக்காய் உடலில் உள்ள அழுக்கைப் போக்கவும் சேர்க்கப்படுகின்றன.

    50 மற்றும் 75 கிராம்களில் கிடைக்கின்றது. தேனை எடுத்த பின்பு கிடைக்கும் மெழுகைப் பயன்படுத்துகிறோம். சோப் தயாரிக்கப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் தரமானவையாகும்.

மேலும் தொடர்புக்கு
Aadhimalai Pazhangudiyinar Producer Company Ltd.
41 / 111 – E, Groves Hill Road, Kotagiri – 643 217,
The Nilgiris, Tamil Nadu.
94893 58422.
contact@aadhimalai.in

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →