ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.

  zijtw7gl  ‘‘Keystone’’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொடங்கி வைத்ததே இந்த ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்’. ‘Keystone’ தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நீலகிரி பயோஸ்பியரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

    ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவன லிமிடட்’ டைச் சட்டப்படியான முறையில் நிறுவனமாகப் பதிவு செய்து வனங்களிலிருந்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பொருட்கள், பழங்குடியினருக்குக் கைத்தொழிலாக மதிப்புக் கூட்டல், விற்பனை… போன்றவைகளைச் செய்து வருகிறோம் என்கிறார் ‘தலைமை நிர்வாக அதிகாரியான’ திரு.அருண் ராமசந்திரம் அவர்கள்.

அந்த வரிசையில், இந்த மாதம் இரண்டுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்…

1. கசப்புச் சுவையுடைய தேன்
    ‘நாவல்’ மர மதுரத்திலிருந்து எடுக்கப்பட்ட தேனைச் சேகரிப்பதால் இச்சுவையில் கிடைக்கின்றது. இளஞ்சிவப்பு நிறத்திலும், மெல்லிய திரவப் பதத்திலும் உள்ளது. நீர் சதவிகிதம் சுமார் 21 % முதல் 26 % வரை காணப்படும். சில நேரங்களில் இவ்வகைத் தேன் காரமாகவோ அல்லது கசப்புச் சுவையுடனோ இருக்கும். நாவல் மரம் மருத்துவ குணமுடையது, பழங்குடியினர் இவ்வகைத் தேனை வயிற்று வலி / கோளாறு, பல் வலி… போன்றவைகளை களைவதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்குச் சிறப்பானதொரு இடமுண்டு.

250 மற்றும் 500 கிராம் பாட்டில்களில் கிடைக்கின்றது.

2. உதட்டுக் களிம்பு ( Honey Lip Balm )
    தேன், தேன்மெழுகு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலமாகும். நிறம், தரம், சுவை போன்ற எந்தஒரு சேர்வையுறுப்புக்களுக்கும் இரசாயன பொருட்களைக் பயன்படுத்துவதில்லை. வனப்பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது.

10 கிராம் கண்ணாடி புட்டியில் சந்தைப் படுத்தப்படுகின்றது.

மேலும் தொடர்புக்கு,

Aadhimalai Pazhangudiyinar Producer Company Ltd.
41 / 111 – E, Groves Hill Road, Kotagiri – 643 217,
The Nilgiris, Tamil Nadu.
94893 58422.
contact@aadhimalai.in

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →