ஆன்லைன் மருந்து விற்பனை

96f4f0v9மக்கள் தொகை பெருகி, நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையும் மாறி நம்மில் பலர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான் எதார்த்தம். மருத்துவரிடம் செல்லும் போது அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அங்கோ அல்லது அருகில் உள்ள மருந்துக்கடைகளிலோ வாங்குவது வழக்கம். அதில் தற்போது 8%,10% என்று பல சதவீதம் தள்ளுபடி வழங்கி வருவது தற்பேதைய வழக்கம்.  சமீபகாலத்தில் மருந்துகள் இணையதளம் வழியாக வாங்கவும் பல நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கியுள்ளதாகச் செய்திகள் உள்ளன. தமிழகத்தில் இப்போது ஒன்றும் பெரிதாக உள்ளதாக தெரியவில்லை. இவை மட்டுமே உள்ளன.  செய்திகளில் சனாப்டீல் போன்றவர்கள் விற்பனை செய்த மருந்துகள் சர்ச்சையை எழுப்பிய கதையை நாம் படித்திருப்போம்.  அந்த மருந்து ‘Schedule H’ மருந்து என்று தகவல்கள் உள்ளன.  அப்படி என்றால் மருத்துவரின் சீட்டு இல்லாமல் தரக்கூடாது.  மேலும் ‘Schedule X ’ என்றும் ஒர் வகை மருந்துகள் உள்ளன.  இவை மன ரீதியான நோய்களுக்கு வழங்கும் மருந்துகள்.  இந்த மருந்துகளை மருத்துவரின் சீட்டு இல்லாமல் கொடுத்தால் தண்டனைகள் மிகவும் கடினம்.  ஆகவே, மருந்து விற்பனை சற்று கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று எனத் தெளிவாகிறது.  ஆகையினால், மருந்துக் கடையை அமைக்கும் போது ஒரு சில விதி முறைகள் உண்டு. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுதான் செயல்பட வேண்டும்.  குறிப்பாக மாநில அரசுகள்தான் இந்த விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் அதிகம் விதித்து வரிகளும் வசூலிப்பது உண்டு.  அதாவது இந்த கடையை நடத்தும் போது ஃபார்மா படிப்பு மற்றும் 2ஆண்டு அனுபவம் உள்ளவர்களை வைத்துத்தான் துவங்க முடியும். அங்கு, குளிர்சாதன வசதி மற்றும் குறிப்பிட்ட இடவசதியும் இருத்தல் அவசியம்.  முக்கியமாக விண்ணப்பம் செய்பவர் குற்றச் செயல்கள் எதுவும் செய்யாமல் இருத்தல் மிக அவசியம்.  அரசு விதிமுறைகளின்படி கேட்டுக் கொண்டுள்ள படிவங்கள், மற்ற தகவல்களை அளித்த பின்னர்தான் அனுமதி வழங்கப்படுகிறது.

அந்தக் கடையை வழிநடத்தி சட்டத்தின் விதிமுறைக்குள் நடந்து கொள்ளவே Drugs and cosmetics Act 1940, drugs and cosmetics rules 1945, pharmacy Act 1948, and indian medical Act 1956, சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது.  இந்தச் சட்டம் எல்லாமே பல ஆண்டுகளாக மாற்றங்கள் காணமல் தான் உள்ளன.  இந்த உண்மை மற்ற பல சட்டங்களுக்குப் பொருந்தும்.  ஒருவர் கூறுகையில்“ கணினி, மற்றும் இணையதளம் வருவதற்கு முன்பு தோன்றிய சட்டங்கள் இவை.  ஆகவே, அதில் இந்த நவீனமயமான காலத்தில் உள்ள வியாபார மாற்றங்களுக்கு இதை மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.  இந்தியாவில் Information Technology Act 2000 நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் e-mail மற்றும் scanned ஆவணங்கள் இன்னும் தடயமாக (evidence) ஏற்றுக் கொள்வதில்லை என்ற கருத்தும் உண்டு.  இதுவே, நம் சட்டங்களில் உள்ள முரணை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

மருந்துக்கடைகள் இணையதளம் இல்லாமல் செயல்படுவதில் பல வகைகள் உண்டு.  அவை

1. மருந்துவமனைகளிலே உள்ள மருந்துக் கடைகள்
2. தனித்து, செயல்படக்கூடிய மருந்துக் கடைகள்
3. பல இடங்களில் ( ஒரே ஊரில் பல இடங்களிலும், பல நகரங்களிலும்) செயல்படும் மருந்துக் கடைகள் (chain shop)
4. ஓர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மருந்துக் கடைகள் (town ship)

மேற்கண்டவைகளைப் பார்த்தால் தனித்துச் செயல்பட்ட மருந்துக்கடைகள், மற்றும் மருத்துவ மனையில் மட்டுமே உள்ள மருந்துக்கடைகள் என்ற நிலை மாறி தற்போது (chain shop) township shop என உருவாகியுள்ளன.   இதைக் கட்டுப்படுத்த போதிய சட்டங்கள் இல்லை என்பதே உண்மை.  ஆகையினால் சட்ட திருத்தம் மிகவும் அவசியமாகிறது.

இணையதள விற்பனை

Flipkart, snapdeal, மற்றும் Amazon போன்ற நிறுவனங்கள் புத்தகம் மற்றும் வீட்டு மனைப் பொருட்களைப் பெரும்பாலும் விற்கின்றனர்.  ஆரம்பத்தில் நமது வங்கித் தகவல்கள்,(Banking  password) போன்றவற்றை இணையதளம் வாயிலாகத் தந்து கொள்முதல் செய்வதை விரும்பாத மக்கள் நாட் போக்கில் அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்ததாலும் அதை நன்கு வரவேற்று இணையதள விற்பனையில் ஈடுபடுகின்றனர்.  பொருட்களைக் குறித்த நேரத்தில் நம் வீட்டிற்கு டெலிவரி செய்வதுதான் முக்கிய அம்சம்  அதே போன்று குறைந்த விலையும் முக்கிய அம்சம் வகிக்கிறது.  வாடிக்கையாளர் மனதில் இது போன்று, மருந்துகள் மட்டும் ஏன் விற்பனை செயய்யக்கூடாது எனப் பல மாநிலங்களில் பல நிறுவனங்கள் துவங்கியுள்ளன. மாநில அரசுகள் அதிக கட்டுபாடு விதிக்கும் தொழிலான மருந்துக்கடைகள் ஒரு மாநிலத்தில் கம்பெனி அமைத்து வேறு மாநிலங்களில் தொழில் செய்யும் போது அந்தந்த மாநிலச் சட்டத்தின் கீழ் செயல்படுவது அவசியம்.  மாநில அரசுத் துறையினருக்கு இது போன்ற நிறுவனங்கள் நிர்வாகம் செய்வதற்குக் கூடுதல் நேரமும உழைப்பும் தேவைப்படுகிறது.  முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விசயம் என்வென்றால்  Schedule H‘ மற்றும் Schedule X மருந்துகள் மருத்துவரின் சீட்டின் பெயரில் தான் விற்பனை செய்ய வேண்டும்.  Scan செய்த ஆவணங்களின் பெயரில் தான் அந்த மருந்துகள் வழஙகப்பட வேண்டும்.

IT Act 2000 யின் பெயரில் Scan செய்த சீட்டே போதும் என்றாலும் அதை Drugs and cosmetics Act 1940, ஏற்றுக் கொள்கிறதா என்று உறுதியில்லை இணையதளம் மூலம் கொள் முதல் செய்பவர்கள் எந்த விதத்தில் மாறுப்பட்டு உள்ளனர் என்று ஆராய்ந்தால், பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை என்றுதான் தெரிகிறது.  கடந்த சில மாதங்களாக இணையதள வழியாக விற்பனை செய்யப் பலர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.  அந்த எதிர்ப்பு என்னவென்றால்.

1.போலி மருந்துகள் கொடுக்கலாம்.
2.தரமற்ற மருந்துகள் கொடுக்கலாம்.
3.தடை செய்யப்பட்ட மருந்துகளையும் கொடுக்கலாம்
4. வெளிநாட்டு மருந்துகள் கொடுக்கலாம்.
5. காலாவதியான மருந்துகள் கொடுக்கலாம்.
6.Schedule H மற்றும்  Schedule X மருத்துவரின் சீட் இல்லாமல் நடக்கலாம்
7. வரி ஏய்ப்பு நடக்கலாம்

என்றும் பல எதிர்ப்புகள் உள்ளன  அதற்கு பல செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.  இருப்பினும், இணையதள விற்பனை நிறுவனங்கள் அவை அனைத்தும் இணையம் இல்லாத வியாபாரத்திற்கும் பொருந்தும் என்கிறார்கள் சிலர்.  இணையதள விற்பனை நிறுவனங்களுக்கு விலை உயர்ந்த வாடகையோ அல்லது சொந்தமான இடத்தை நகர்ப் புறத்தில் வைத்தாக வேண்டும் என்று அவசியமோ இல்லை.  வெளிப்படையாக எல்லா வியாபாரத்தையும் கணினியிலிருந்து வரி மற்றும் அரசு அதிகாரிகள் பெறலாம்.  தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் அவரவர்க்கு ஏற்றே செய்கின்றனர். ஆகையினால் எல்லோருக்கும் உள்ள விலையில் தள்ளுபடி அளித்து, குறைந்த விலையில் அளிக்க முடிந்தது என்றும் அந்த மருந்தைப் பற்றிய பல விவரங்கள் அங்கேயே வெளிப்படையாகக் கூறவும் முடிகிறது என்றார் ஓருவர்.  தவறு செய்பவர்கள் எல்லாத் தொழிலும் உள்ளனர் என்ற ஓர் பரவலான கருத்து நிலைப்பட்டாலும், அவர்கள் மீது வழக்கு தொடர்வது சற்று கடினம் என்பது உண்மை தான்.  அன்றாட தேவைக்காக வாங்குவோர் இணையதளம் மூலம் வாங்கிப் பயன் அடைவதை விரும்புவார்கள் என்றும், நோய்வாய்ப்பட்டு எடுக்க வேண்டிய மருந்துகளை மருந்துக்கடைகள் அணுகித்தான் வாங்குவார்கள் என்பதும் நாம் உணர்ந்தது தான் .  வெளிநாடுகளில் இணையம் மூலம் விற்பனை என்பது எளிது மேலும், அதைக் கண்காணிக்க மத்திய அரசே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்றது.  ஆனால் இந்தியாவில் இந்தப் பெரிய பங்கு மாநில அரசுகளிடம் உள்ளதால், அதை முறைப்படுத்த GST சட்டம் வந்தால் இந்த துறைக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மருத்துவரின் சீட்டை பெற்று பெறவுள்ள மருந்துகளை இணையத்தில் மென்பொருள் வழியாக சரிபாVத்தும், மருத்துவரைத் தொடர்பு கொண்டும் சரியாக விற்கலாம்.

மருந்துகள் தேவைப்படுவர்கள் பொதுவாக ஒரு 30 வயதுக்கு மேல் உள்ளவர்களே.  60வயதுக்கு மேல் அதிகம் தேவைப்படுகிறது, 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிகம் வெளியே செல்ல விரும்புவதில்லை.  ஆனால் அவர்களின் தேவை அதிகம்.  30 வயது – 60 வயது உள்ளவர்கள் வெளியே செல்ல வாய்ப்புகள் அதிகம், ஆனால் அவர்கள் இணையதளம் நன்றாகப் பயன்படுத்தக் கூடியவர்கள்.  சிறிய குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் தாய்மார்கள் என்றும் ஒரு பகுதியான மக்கள் உள்ளனர்.  இனி வரும் காலத்தில் வணிகம்,தேவை, இணையப் பயன்பாடு அதிகமாகும் போது கிடைக்கும் சேமிப்புதான் பிரதானம் என்று பார்த்து எதில் விலை குறைவோ, சேவை அதிகமோ, மற்றும் நேர்மை உள்ளதோ, அதைத்தான் ஆதரிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

முடிவாக நேரில் என்றாலும், இணையம் வழியாக வாங்கி வந்தாலும் உள்ள சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.  சட்டம் அமல் படுத்தவும் அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்பது மிகவம் அவசியமாகிறது.  ஆகவே இரண்டும் வேண்டும். (Traditional and Online) மக்கள் தங்களுக்குப் பிடித்தவாறு தங்களது தேவையைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.