இந்திய தொழில் மற்றும் வர்த்தகச் சபை – கோவை…..

dp85hvd81929 ம் வருடம் திருR.Kசண்முகம் செட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் 84 ஆண்டுகளாக கோவையின் தொழில் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வருகிறது. எகிப்தியர்களின் பருத்தியைப் பெற்று கோவை பகுதியின் விலையுயர்ந்த கற்களைப் பரிமாற்றம் செய்த கோவையின் வர்த்தக பாரம்பரியத்தை காத்தும் அதை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது.கோவையில் திருச்சி, சென்னையைப் போல பெரிய அ1929 ம் வருடம் திரு.R.K.சண்முகம் செட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட இந்நிறுவனம்84 ஆண்டுகளாக கோவையின் தொழில் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வருகிறது. எகிப்தியர்களின் பருத்தியைப் பெற்று கோவை பகுதியின் விலையுயர்ந்த கற்களைப் பரிமாற்றம் செய்த கோவையின் வர்த்தக பாரம்பரியத்தை காத்தும் அதை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது.கோவையில் திருச்சி, சென்னையைப் போல பெரிய அரசு நிறுவனங்கள் இல்லை.  இங்கு அனைத்தும் தனியார் நிறுவனங்கள், எல்லோரும் தனது தனிப்பட்ட உழைப்பால் உருவாக்கியது தான்.  நமது கோவையை எத்தனைப் பேருக்குத் தெரியும்.  மாருதி கார்களுக்கும், டாடா மோட்டார்ஸ்க்கும் தங்களின் உதிரிபாகங்களின் தேவைகளில் 30 %  கோவை பகுதியிலிருந்தே தயார் ஆகிறது  என்பதை அறிந்த சில பண்நாட்டு நிறுவனங்கள் மற்றும் பலர் இங்கு தங்களது கால்களை பதித்துள்ளனர்.  இந்த சபையில் சுமார் 1600 உறுப்பினர்கள் கொண்டும் அதில் 93 சங்கங்கள் உள்ளன. இவை தொழில், (உற்பத்தி மற்றும் சேவை), விவசாயம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளனர். தொழில் துறையினரின் இடையூறுகளை எடுத்து அரசிடம் எடுத்துரைத்து அதற்குத் தீர்வு காண உதவுகிறது இச்சபை. மேலும் பல பயிற்சிகளும் அளித்துத் தொழில் மேம்படச் செய்கிறது.கடந்த ஆகஸ்ட் 19 ம் தேதி தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.தலைவர் திரு R.R.பாலசுந்தரம் முன்னிலையில் இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெரும்பங்கு தொழில் துறைக்கு அரசு என்ன செய்ய கோரிக்கை விடுக்கவுள்ளது என்பது தான். அவற்றை சற்று விரிவாக பார்போம்.

நேர்முக வரி குறியீடு (DIRCET TAX CODE)
குறைந்தப்பட்ச மாற்று வரி  (MINIMUM ALTERNATE TAX ) சதவீகிதத்தை 18.5 % லிருந்து முன் இருந்த 10 % மாக குறைக்க வேண்டும்.கைவசமுள்ள சொத்தின் மதிப்பிற்கு 2% வரியை அறிமுகப்படுத்த உள்ளதை விளக்கவேண்டும்.  வருவாய் இல்லாதவர்கள் பெரிதும் நஷ்டம் அடைவார்கள்.இலாபப் பங்குத் தொகையை பங்குதாரர்களுக்கு அளிப்பதற்குண்டான  வரியை தகர்க்க வேண்டும்.2014 ஏப்ரலிருந்து அறிமுகம் செய்தால் தொழில் இணக்கம் அதிகரித்து வரிவசூல் அதிகரிக்கும்.

தொழிலாளர்  சட்டங்கள்.
ESI ACT1948  – ESI
காப்பகத்திற்காக அடிப்படைச் சம்பளம் + கிராஞ்சுவிட்டி மட்டுமே எடுத்துக் கொண்டு உச்சவரம்பைரூ15,000/- ஆகவே வைப்பதன் மூலமாக தொழில் புரிபவர்களுக்கு அதிக பாரம் வராமல்  இருக்கும்.

ஒப்பந்த ஊழியர்கள்

தொழிலாளர் சட்டங்கள், சிறு மற்றும் குறுந் தொழில்கள் தேவைப்படும் போது ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தொழில்  உற்பத்தியும் வளர்ச்சியும் பெருகும்.
வருங்கால வைப்பு நிதிஉச்சவரம்பை ரூ.6,500 லிருந்து  ரூ.10,000 மாக  உயர்த்தாமல் அதன் கணக்குகாக அடிப்படை சம்பளத்தை மட்டுமே கணக்கில் கொண்டு வருவதனால் பாரம் அதிகரித்து தொழில் வளர்ச்சி பாதிப்
படையும் என்கிறார்.

உள்கட்டமைப்பு
இரயில்பெங்களுருக்கு இரவு இரயில் வடகோவையில் பதிவு அலுவலகம், காத்திருப்பு அறை.திருப்பூர், பாலக்காட்டிற்கு அதிக இரயில் சேவை
கோவை – மேட்டுப்பாளையம் இரயில் மின் மையமாக்குதல்(2012 -13 பட்ஜெட் அறிவிப்பு)கண்ணூர் – எஸ்வந்த்ப்பூர் இரயில் கோவை வழியாக செல்ல வழிவகுத்தல்இராமேஸ்வரம் – கோவை – கூடுதல் பயணங்கள்.

விமான வசதி
சிங்கப்பூர், சார்ஜா, மட்டுமே இயங்கிவரும் விமானச் சேவை மற்றும்  ஐரோப்பிய ஆசிய நாடுகளிடையே துவக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உள்நாட்டில் பெங்களுர், மும்பை அகமதாபாத், கல்கத்தா, டில்லி நகரங்களுக்கு  கூடுதல் விமான சேவை செய்ய வேண்டும்
யஹலிகாப்டர் சேவை கோவையிலிருந்து ஊட்டி வரை மற்றும் கொடைக்கானல் இடையே சேவை செய்ய வேண்டும்.
விமானநிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை கொள்முதல் செய்து விரைவாக விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும்.
நகர்ப்புற உள்கட்டமைப்பு

வாகன வசதி
கூடுதல் மேம்பாலங்களும் பார்கிங் வசதி லிங் ரோடு,
ரிங் ரோடு போன்றவற்றை போர்க்கால முறையில் அமல் படுத்த வேண்டும்.
கோயமுத்தூர் மாஸ்டர் திட்டம்கோயமுத்தூர் முதல் மாஸ்டர் திட்டம் 1994 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குநரகம் பொது கருத்துக்களுக்கு
கோயமுத்தூர் மாஸ்டர் திட்டம் வெளியிடப்பட்டது.கோயமுத்தூர் மேம்பாட்டு ஆணையம்கோயமுத்தூர் மேம்பாட்டு ஆணையம்  தமிழ் நாட்டில் மிகப்பெரிய நகரம் ஆகும்.இவை கோயமுத்தூர் பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு தேசிய அளவில் முக்கிய மையமாகத் திகழ்கின்றது.  கோயமுத்தூர் அதன் மக்கள் மற்றும் வணிகச் செயல்பாடு பார்வையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்கு ஆணையம் போன்ற ஒரு போதுமான அதிகாரத்தை கட்டுப்படுத்த ஓர் திட்டமிட்ட வளர்ச்சித் தேவைப்படுகிறது.  எங்களுக்கு ஓர் அதிகமான கோயமுத்தூர் மேம்பாட்டு ஆணையம் இந்த நோக்கத்திற்காக உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே அறிவித்துள்ள 7 தேசிய உற்பத்தி மற்றும் முதலீட்டு மையங்களை தவிர 8ம் இடமாக கோவை தேர்வு செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

மின்சாரம்
தென்னக மின் சட்டத்தை தேசிய மின் சட்டத்துடன் இணைத்தல்.
மத்திய மின்சார உற்பத்தி மையத்திலிருந்து தென்னக மின் சட்டத்திற்கு மற்றும் தமிழகத்திற்கு  கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்.
மின் உற்பத்தியும் வினியோகத்தையும் தமிழகத்தில் பிரித்தெடுத்தல் வேண்டும்.இயற்கை எரி வாயு பைப்  வருவதன் மூலம் கூடுதல் சக்தி தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும்  என்பதால் இதை வேகமாக செய்தல்.

நீர்நிலை
குளங்களை அனைத்தும் உரிய காலத்தில் தூர்வாரி அவற்றைச் சுற்றியுள்ள ஆக்கிரமைப்புகளைஅகற்ற வேண்டும். பொது கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டத்தை செல்வபுரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இணைந்து அரசின் உதவியுடன் அமைத்தப் பின்னரே நீர் கழிவுகளை வெளியிட
வேண்டும்.

சுகாதாரத்துறை
விமான ஆம்புலென்ஸ் அறிமுகம் செய்தல்
உயர் தொழில் நுட்ப நோய்க் கண்டறியும் ஆய்வுக் கூடம் அமைத்தல்
ஓர் 100 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவ மனை அரசும் தனியார் இணைந்து துவங்குதல்.

கேரள மாநில நுழைவு வாயிலில் உள்ள வாளையார்ச் சோதனை சாவடியில்  ஏற்படும் அளவுக்குஅதிகமான கால  தாமதத்தை தவிர்த்து லாரிகளை விரைவில் சோதனைச் செய்து அனுப்பநடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து இதற்கு முனைய வேண்டும்.