இயற்கை உரமிடும் முறைகள்…

spr08_rosemary_seedlingsஅன்புடைய என் வீடு என் தோட்ட வாசகர்களுக்கு வணக்கம்.தங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் கடந்த மாத இதழில் எளிய முறையில் மண்புழு உரத்தினை நாமே தயாரித்து நமது தோட்டத்திற்கு இடுவது பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இயற்கை உரமிடும் முறைகளை பற்றித் தெரிந்து கொள்வோமா?

இயற்கை உரம்  என்றால் என்ன?

செயற்கையான முறையில் ரசாயனங்களை கொண்டு செய்யப்படும் உரங்கள் செயற்கை உரங்கள் ஆகும். அவ்வாறு இல்லாமல் இயற்கையாகவே கிடைக்கும் தொழு உரம் எரு இலை மக்கிய உரம் போன்ற உரங்களையே இயற்கை உரம் என்று கூறுகிறோம் அதிலே பல வகைகள் உள்ளன இயற்கை உரங்களையும் பல்வேறு முறைகளில் தயார் செய்யலாம் வீட்டுதோட்டதிற்கு பயன்படுத்துவதற்கு இயற்கை உரங்களையும் பல்வேறு முறைகளில் தயார் செய்யலாம்.வீடுதோட்டத்திற்கு பயன்படுதுவதற்க்கு இயற்கை உரங்களே மிகவும் சிறந்தவை.நாம் அறுவடை செய்து எடுக்கும் காய்கறிகள் கீரைகள் மற்றும் பழங்களை நாம் உடனே அப்படியே சாப்பிடுகிறோம் அல்லது சமைத்து சாப்பிடுகிறோம் அதனால் ரசாயனம் இல்லாத இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.இவ்வளவு சிறப்புடைய இயற்கை உரங்களை வீட்டுதோட்டத்திற்கு எப்படி இடலாம் எனக் காண்போம்.

உரக் கலவை மண் :

நமது வீட்டுதோட்டத்திற்கு நாம் விதைக்கும் முன்னர் அல்லது நாற்றுகளை நடும் முன்னர் நிலத்தினை தயார் செய்கிறோம். அதே நேரம் தொட்டிகளில் பைகளில் வாளிகளில் வளர்க்கும் போது உரக்கலவை மண் போட்டு நிரப்பி பின்னர் பயன்படுத்த வேண்டும்.உரக்கலவை மண்ணினை தயார் செய்வது மிகவும் எளிது.மண் இரண்டு பங்கு மணல் ஒரு பங்கு இயற்கை ஒரு பங்கு என்ற விகிதத்தில் நன்கு கலந்து தொட்டிகளில் இட்டு நிரப்ப வேண்டும்.

பைகளில் செடி வளர்க்கும் முறை :

தற்போது பல்வேறு அளவுகளிலான பைகளில் செடி வளர்க்கும் முறை  வந்து விட்டது.இயற்கை உரம் கலந்த உரக்கலவை மண்ணினை பைகளில் அடி உரமாக போட்டு விதைக்க வேண்டும் செடிகள் நாற்றுகளாக இருந்தால் பைகளில் பூவாளியால் நீரினை விட்டு பின்னர் பையில் இரண்டு அல்லது மூன்று விதைகள் அல்லது நாற்றுகள் என்ற விகிதத்தில் பைகளின் அளவினைப் பொறுத்து விதைக்கலாம். உடனே பூவாளியினை கொண்டு நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் .அடி உரமாக இயற்கை எரு இருப்பதால் நீரினை நன்றாகப் பிடித்து வைத்துக் கொண்டு செடிகள் நன்கு வளர உறுதுணை புரியும்.

தொட்டிகளில் இயற்கை உரமிடுதல் :

சிமெண்ட் அல்லது மண் தொட்டிகளில் செடிகள் வளர்க்கும் போது அந்த தொட்டியின் கொள்ளளவிற்கு உர மண் கலவியினை இட்டு நிரப்ப வேண்டும் அடியுரமாக இடும் உர மண் கலவை நன்றாக சலிகப்பட்டு, பெரிய கல் போன்றவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.விதைகளை அல்லது நாற்றுகளை தொட்டியின் அளவிற்கேற்ப நட்ட பின்னர் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். செடிகளில் 15 முதல் 20 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்த நிலையில் இயற்கை எரு அல்லது இயற்கை உரத்தினை  மேலுரமாக இட்டு,மேல்ப் புற மண்ணை நன்றாகப் கிளறி விட வேண்டும்.பின்னர் பூவாளி கொண்டு நீர்பாய்ச்ச வேண்டும்.அவ்வாறு செய்யும் போது அந்த இயற்கை எருவனது நீரில் மெதுவாகக் கரைந்து மண்ணின் உள்ளே இறங்கி வேர் வரை சென்று செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இலை வழி உரமிடும் முறைகள் :

இயற்கை உரங்களை அடியுரமாகவோ அல்லது மேலுரமாகவோ செடிகளுக்குப் போடும் முறைகளைப் பற்றிப் பார்த்தோம்.இலை வழி உரமாக கைத் தெளிப்பான் மூலமகத் தெளிக்கும் முறை மிகவும் எளிதானது.அதற்கு நமக்கு தேவையானது ஒரு கைத் தெளிப்பான்,மற்றும் நாம் தெளிப்பதற்குப்பயன்படுத்தக் கூடிய இயற்கை உரம் ஆகும். சாதரணமாக  பஞ்சகவ்யம் தசகவ்யம் மற்றும் மண்புழு குளியல் நீர் போன்றவைகளைப் பயன்படுத்தலாம்.ஒரு லிட்டர் தண்ணீர் அளவிற்கு 50 மில்லி என்ற அளவில் இவைகளைக் கரைத்துக் கொண்டு கைத் தெளிப்பான் மூலமாகச் செடிகளின் இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதே போன்று 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வந்தால் உடனடியாக அந்தச் செடி நன்கு வளர்ந்து வர வாய்ப்புள்ளது. பூவிடுவதற்கும்,காய் பிடிபதற்கும் இந்த முறையில் நல்ல வாய்ப்புள்ளது.காய்கள் நல்ல பெரிய அளவில் வருவதற்கும்,நல்ல பருமனாகவும்,நல்ல நிறத்துடன் பழுத்து வருவதற்கும் வாய்ப்புள்ளது.மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.

ஆகவே இயற்கை உரங்களை அடிஉயரமாகவோ மேலுரமாகவோ அல்லது இலை வழித் தெளிப்பு முறையில் பயன்படுத்தி செடிகளுக்கு நல்ல வளர்ச்சியினை கொடுக்கலாம்.நல்ல தரமான ஆரோகியமான காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்களை அறுவடை செய்து நமது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.என்ன வாசகர்களே இயற்கை உரமிடும் முறைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பிர்கள் என நம்புகிறேன்.அடுத்த இதழில் நீர்பாய்ச்சும் முறைகளில் சிக்கன நீர் பாய்ச்சும் முறைகளில் பற்றித் தெரிந்து கொள்வோமா?

About ராம்குமார் S

View all posts by ராம்குமார் S →