இளம் தலைமுறையினருக்கான தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள்

YOUNGபுதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்குப் பலவிதமான சந்தேகங்களும் அடுத்தகட்ட முதலீடு மற்றும் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைஅமைப்பது, வரி, ஊழியர் மேம்பாடு போன்ற எண்ணற்ற துறைகளில்தங்களுக்கு மிகுந்த குழப்ப நிலை (சரியான முடிவு எடுக்க முடியாத நிலை) இருக்குமாயின் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி ‘கான்பெடரே­ன் ஆப் இந்தியன் இண்டஸ்டிரி’ என்கிற அமைப்பு இளம்தொழில் அதிபர்களுக்கு ஒரு கூட்டம் நடத்தியது.  இதில் மேற்கூறிய அனைத்துத் தலைப்புகளிலும்  செயல்திறன் ஆற்றுதல்பற்றியும் மற்றும் விவாதமும் நடத்தப்பட்டது.  இதனை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்.  முதலில் முன்மொழிந்த திரு.S.K.சுந்தரராமன்அவர்கள் CII (CONFEDERATION OF INDIAN INDUSTRY) பற்றிகூட்டத்தில் விளக்கினார். மேலும் சுமார் 276 உறுப்பினர்கள்  CII யில்இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் அவரைத் தொடர்ந்து விருந்தினராக கலந்து கொண்ட திரு.றீ.லு.சீனிவாசன் அவர்கள் பேசியபொழுது கோவையை இந்தியாவின் ஜப்பான் என்று கூறி ஆரம்பித்தார்நிர்வாகத்தில் வரவு செலவுக் கணக்கு (PROFIT&LOSS A/C) சொத்துமற்றும் பொறுப்புக் கணக்கு (BALANCE SHEET-ASSETS&LIABILITIES) இருக்கிறது.  இதை வைத்தே ஒரு நிறுவனம் தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.  ஒருநிறுவனம் முன்னேற்றமடைய மூன்று முதல், ஐந்து வருடங்கள்தேவைப்படும் என்றும், முதலீடு செய்து தொழில் தொடங்கலாம்அல்லது வாங்கி விற்கும் (TRADING BUSINESS உதாரணமாக FLIPKART நிறுவனம் ) தொழிலைத் தேர்வு செய்து நடத்தலாம்.  என்றும் கூறினார். இது போன்ற டிரேடிங் தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.  அதற்கு முக்கிய காரணமே இன்று நம்மிடையே இருக்கும் உயரிய தொழில்நுட்பமே என்பதைத் தெளிவுபட ஒருஉதாணத்துடன் அவர் தெரிவித்தார்.  மருத்துவர் தனது நோயாளியைத்தொலை தூரத்திலிருந்தே மருத்துவம் பார்ப்பது, அதற்குத் தகுந்தாற் போல் மருந்து மாத்திரைகள் வழங்குவது இவை அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று தெரிவித்தார்.  மேலும் ஒரு தொழில் சிறப்புத்முன்னேற இருக்கக் கூடிய தாரக மந்திரம் கூட்டு முயற்சி மற்றும் உழைப்பு (TEAM WORK), ஒருவர் ஒரு கடையை வாடகைக்கு எடுக்கும் பொழுது அங்கு கண் கவரும் பொருளை மட்டும் விற்பனை செய்தால் அவரின் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கும் ஏனெனில் அதுபோன்ற பொருட்கள் வாடிக்கையாளர்கள் எப்போதாவது மட்டுமே வாங்க நேரிடும் சொற்ப லாபமாக இருந்தாலும்அதிகமாக விற்கும் பொருளையும் அவர் கண்டறிந்து வியாபாரம் செய்தல் அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.  அடுத்த கட்டமாக
அவர் தெரிவித்த கருத்து நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குச் சிறந்த ஊதியத்தை வழங்குதல் மிகவும் அவசியம் என்றும் அதற்கு உதாரணமாக மிட்டல், மகேந்திரா நிறுவனம் போன்ற மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தங்களிடம் இருக்கும் திறன் மிக்க ஊழியர்களுக்குஅவர்களை விட அதிக சம்பளத்திலேயே வைத்திருப்பதாகக் கூறினார்.ஏனெனில் முதலீட்டாளர்கள் சொத்து சேர்ப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டுமே தவிர சம்பளத்திலல்ல.  ஆகவே தான் அவர் அதிக சம்பளத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்தார்.  நமது இந்திய நாட்டில் வங்கிகள் நிறுவனத்தின் சொத்து மதிப்பினைப் பார்த்து மட்டுமே முதலீடு (LOAN) தர முன் வருகின்றனர்.  ஆனால் வளர்ந்த நாடுகளில் (U.S)வங்கிகள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனையைப் பார்த்துலோன் தருகின்றனர் என்கிற கருத்தைத் தெளிவாகக் கூறினார்.  மேலும்அவர் கூறிய தகவல்கள் இந்தியாவில் இன்னும் பல கிராமங்களில் வங்கிகள் திறக்கப்பட உள்ளதாக’ ரகுராம் ராஜன்’ தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.  முதலீடு செய்யும் இடம், அறிவு சார்ந்த தொழில் வல்லுநர்களைப் பணியமர்த்தல், அவர்களுக்கு மிகச் சிறந்த ஊதியமளித்தல் போன்றவைகளை வலியுறுத்தினார்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →