உயிர் எரிகட்டி தொழில்நுட்பம் (Briquetting Technology)……

briquetting-bigமரங்கள் மக்களின் தேவைகளுக்காகவும் தொழிற்சாலைகளின் மூலப்பொருளாகவும் அதிக அளவில் வனங்களிலும், விவசாய நிலங்களிலும், தரிசுநிலங்களிலும், தோப்புகளிலும், வரப்பு ஓரங்களிலும் மற்றும் ஊடுபயிராகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்படி வளர்க்கபட்ட மரங்கள் மக்களின் தேவைகளான தடி மரம், எரிபொருள், மாட்டுத் தீவனம் மற்றும் வேளாண் சார்ந்த உபகரணங்களுக்குப் பயன்படுகின்றன. இப்படிப் பல்வேறு பயனுடைய மரங்களை வளர்க்கும் பொழுது மரம் வளரும் காலம் முதல் அதன் அறுவடை காலம் வரை உள்ள வளர்ச்சி பகுதிகüல் நிறைய மரக்கழிவுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறு கிடைக்கபடும் மரக் கழிவுகள் தற்பொழுது குறைந்த விலையில் விறகிற்காக விற்கப்படுகின்றன. ஆனால் தற்பொழுது இந்த மரக் கழிவுகளை பிரிக்கட்டிங் தொழில் நுட்பம் மூலம் எரிகட்டிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அதிக மதிப்புகூட்டப்பட்ட பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பயன்கள்

  •   சுற்று சூழலுக்கு உகந்த மறு சுழற்சி ஆற்றல் எரிபொருளாகும். நிலக்கரி மற்றும் மரம் போன்றதிண்ம எரிபொருள்களைவிட விலை குறைந்த பொருளாதார பயனுடையது.

  •  அதிக எரிசக்தி கலோரி அளவு உடையவை. (4000 கலோரி).

  •     இதில் கந்தகம் மற்றும் பாதிப்பை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

  •     குறைந்த சாம்பலை உருவாக்குபவை (2.5%).

  •     குறைந்த ஈரப்பதத்தினால் நிலைத்து, தொடர்ந்து எரியும் தன்மையுடையது.

  •    அதிக அளவு கார்பனை உள்ளடக்கியவை.

  •     நிலக்கரியைவிட அதிக அடர்த்தி உடையவை.

  •  இயற்கை எரிபொருüன் விலை உயர்வால் மரத்தூள் எரிகட்டிகளுக்குச் சந்தை வாய்ப்புகள் அதிகம்.

  •     போக்குவரத்திற்கு எளிதானது, ஒரே வகையான வடிவத்தில் இருப்பதால் எரியூட்டுவதற்கும் வசதியானது.

  •     இவை ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பதனால் கையாளுவதற்கும் பாதுகாப்பதற்கும் எளிது.

உயிர் எரிகட்டி (BRIQUETTE) தயாரிக்கும் தொழில்நுட்பம்
இரண்டு வகையான உயிர் எரிகட்டித் தொழில் நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உந்து தண்டு தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் திருகு அழுத்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு வகைத் தொழில் நுட்பங்களிலும் சில குறைபாடுகள் இருப்பினும், அந்தந்த நாட்டில் கிடைக்கும் இடு பொருட்களுக்கு ஏற்பவும், அந்தப் பகுதிக்கான பயன்பாட்டிற்கு ஏற்பவும், இந்தத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உயிர் எரிகட்டிகள் நிலக்கரிக்கு அடுத்து, வெப்பத்திறன் கொண்டுள்ளன.  குறிப்பாக வெப்ப உற்பத்திக்காக நிலக்கரி மரம் போன்றஎரிபொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் உயிர் எரிகட்டிகளை உடனடியாகப் பயன்படுத்தலாம். இன்று அதிகரித்துள்ள சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, உலக வெப்பமயமாதல் போன்றநெருக்கடிகள், மரங்களை அதிகமாக வெட்டுவதைத் தடுக்கின்றன. எனவே அதற்கு மாற்றாக உயிர் எரிகட்டிகள் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவது அவசியமாக உணரப்பட்டுள்ளது.
எரிகட்டிகளுக்கான இடுபொருட்கள்
தொடக்க காலங்களில், எரிகட்டிகள் தயாரிக்க காப்பித் தொல்லி மற்றும் கடலைத் தொல்லி மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் குணங்களே, எரிகட்டிகள் செய்ய ஏற்றதாக உள்ளன எனக் கருதப்பட்டது.  இவற்றின் அளவு குறையக் குறைய மாற்று எரிபொருட்கள் தேடப்பட்டன.  அதில் மரத்தூள் இதற்கு ஏற்றஒன்றாக அறியப்பட்டு, காப்பி மற்றும் கடலைத் தொல்லிகளுடன் சேர்க்கப்பட்டு எரிகட்டிகள் தயாரிக்கப்பட்டன.  அதன் பின்னர், குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் முழுமையாக மரத்தூள் கொண்டு எரிகட்டிகள் செய்யப்படகின்றன.  அதிக அளவில் மரத்தூளை இடுபொருளாகப் பயன்படுத்தும் உயிர் எரிகட்டித் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.  இப்போது, மரத்தூளின் விலை அதிகரித்திருப்பதே, இதன் காரணமாகத்தான்.  இடுபொருள் விலை அதிகரிப்புடன் தயாரிப்புச் செலவைக் கூட்ட, எரிகட்டிகüன் விலையும் கூடவே செய்கின்றன. இந்த நிலையில் மாற்று இடுபொருளைத் தேடுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்றதிட்டத்தின் மூலம் மரக்கழிவுகளிலிருந்து எரிகட்டி (BRIQUETTE) தயாரிக்கும் தொழில்நுட்பம் சவுக்கு மரக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்பட்டுச் செயல்முறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சவுக்கு மரக்கழிவுகளிலிருந்து பெறக்கூடிய எரிகட்டிகள் தயாரிக்கும் தொழில் ஒரு லாபகரமான தொழிலாக உருவாக்கபட்டுள்ளது. சவுக்கு மரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிகட்டிகள் பற்றிய பொருளாதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமானம்
இதன் மூலம் சவுக்கு மரக்கழிவுகளிலிருந்து எரிகட்டிகள் தயாரிக்கப்பட்டால் ஒரு டன்னுக்கு சுமார் ரூ.1762 லாபகரமாக கிடைக்கும்.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →