உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தமிழகத்தில்

Gகடந்த செப்டம்பர் 9-10 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் துவங்கியது. இதை நடத்திய தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. பிற மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களோடு போட்டியிட்டு, முதலீட்டுக்கு முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் என்பது லட்சியமாகக் கொண்டு செயல்படுவதாகத் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான Logo (லோகோ) கிரேக்க நாட்டு இறக்கை பொருத்திய குதிரையான “பெகாசிஸ்’ (Pegasus) தேர்வு செய்து அதன் வளர்ச்சியைக் குறிக்கும் வண்ணம் இவ்விழா துவங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னனி நிறுவனங்களான HCL, மகேந்திராகுரூப், சுந்தரம் கிளேட்டன், மத்திய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் (நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகம்) திரு.பொன்.ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்றார்கள். நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கொரியா, பிரான்சு, இத்தாலி, யுனைட்டெட் கிங்டம், சிங்கப்பூர் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தூதரகம்ப் பங்கேற்பும் முக்கியமாக இடம் பெற்றது. இந்தியாவிலே வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதல்வர் அவர்கள் தமது உரையில் கூறியிருந்தார். மேலும் 1992 களில் இருந்து துவங்கப்பட்ட இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி இருப்பதாகவும் சோலார் மின் சக்திக் கொள்கையை 2015 ல் அறிமுகப்படுத்தி, 2011ல் இருந்த மின் பற்றாக் குறையைப் போக்கப் பல்வேறு திட்டங்களை வகுத்து, மின் பற்றாக்குறையை போக்கியுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான HYUNDAI, FORD, போன்ற நிறுவனங்கள் தமிழகத்தின் திறன் வாய்ந்த LABOUR FORCEஐப் பயன்படுத்தி உள்நாட்டிற்கும் வெளிநாடுகளுக்கும் தங்களது வாகனங்களைப் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற் சமயம் மின் பற்றாக் குறையை முழுமையாகத் தீர்க்கப் பல நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. புதிய மின்திட்டங்களைக் கொண்டு வர, தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் உள்ளன.

இனி மேல் முதலீடு செய்வோருக்கு மின்பற்றாக் குறை என்ற ஒரு நிலையைத் தகர்த்துத் தமிழகத்தில் உள்ள உள் கட்டமைப்புகளை மேலும் வளர்த்து, அந்த முதலீடு லாபம், வேலை வாய்ப்பு, மற்றும் பல நன்மைகளை நாட்டுக்கு அளிக்க போவதாக முதல்வர் கூறினார்.

முக்கிய அறிவிப்புகள்

HCL தென் தமிழகத்தின் 1 பில்லியன் முதலீடு

யமஹா நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை அமைப்பு – சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

TVS மோட்டார் கம்பெனி – தனது ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதாக அறிவிப்பு

TICL- BIO – PARK 2 அமைப்பு

துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி அதானி குரூப் 15,000 கோடி முதல் 20,000 கோடி வரை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யத் திட்டம்.

தமிழகத்தில் தற்சமயம் உள்ள நிறுவனங்கள் பல கூடுதல் முதலீடு செய்யவும் உள்ள நிலையில் கூடுதல் உள்கட்டமைப்புகள் தேவை என்பதையும் மறுக்க முடியாது. மேலும் சாலைகள் பல துறைமுகங்களுக்கும், சேமிப்புகிடங்குகள் போன்றயும் தேவை. இந்த 2 நாட்களில் ரூ.2,42,160 கோடி மதிப்புள்ள முதலீடு தமிழகத்திற்கு வருவதாக தொழில் நிறுவனங்கள் அரசுக்குச் செய்தி தெரிவித்துள்ளனர். இதனால், நாட்டில் வேலைவாய்ப்பு, குறு மற்றும் சிறு தொழில்களில் உள்ளோர் நல்ல பலன் அடைவர் எனக் கூறலாம். வேலை வாய்ப்புகள் மட்டுமே சில ஆயிரங்களில் வர உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் ‘MAKE IN INDIA’ திட்டத்தில் உள்நாட்டில் ஆராய்ச்சி கூடங்கள் அதிகரித்து அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டுமானால் முதலில் முதலீடும் வேலை வாய்ப்புகளும் வந்தால்தான் அடுத்த நிலையை அடையலாம் என அனைவரும் அறிந்ததே. ஆகவே, மத்திய அரசின் தற்போதைய கொள்கையும் தமிழக அரசின் பொருளாதார கொள்கையும் புதிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மிக்க ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகள் தேவைப்படும் அளவுக்கு பொறியாளர்களை தரும் நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு பொறியியற் கல்லூரிகள் தங்களிடம் உள்ள இடங்கள் நிறம்பவில்லை என்பது உண்மை என்றாலும், நல்ல நிறுவனங்கள் புதிதாக வரும் நிறுவனங்களுக்குப் பயிற்சி பெற இந்த நிறுவனங்களுக்கு TRAINEES அல்லது APPRENTICES வாயிலாக அவர்களுக்கு முதலில் நல்ல ஒரு விழிப்புணர்வு மற்றும் திறனைப் பெற்று வரும் காலத்தில் உற்பத்தியைத் திறம்படச் செய்ய உதவும் என்ற நன்மையும் உண்டு. பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கல்லூரி மற்றும் மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்றவாறு பாடத்தை வடிவமைத்து வந்தால் பொருளாதாரம் உயரும் என்பது உண்மையே.

பலரும், இந்த முதலீடுகள் வந்து சேருமா என்ற ஐயம் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டுள்ள கொள்கையால் மிகுந்த எளிமையாக விரைவில் அரசு தரப்பில் அனுமதிகள் பெறுவது எளிதாகவும் ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறியதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூறியிருப்பதை செய்திகளில் தெரிந்துக் கொள்கிறோம்.

கிடைத்த மொத்த முதலீட்டில் ரூபாய் 1,04,286 கோடி உற்பத்திக்காகவும், ரூபாய் 1,07,136 கோடி மின்சார தேவைக்காகவும், ரூபாய் 10,950 கோடி மென்பொருள்களுக்கு (IT), தந்து மீதி ஜவுளித்துறைக்கு ரூபாய் 1,955 கோடியும், விவசாயத்திற்கு ரூபாய் 800 கோடியும் மற்றும் மீன் வளத் துறைக்கு ரூபாய் 500 கோடியும் கிடைத்துள்ளன. உலகிலேயே முதன்மை கார் உற்பத்தி நிலையமாக சென்னையை ஆக்க இம்முதலீடுகள் வழிவகுக்கும் என்றும் இனிவரும் காலத்தில் இது போன்ற மாநாடுகள் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட உள்ளதாகவும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். மேலும் உற்பத்திக்காகக் கிடைத்த ரூபாய் 1,04,286 கோடியில் தென் தமிழக மாவட்டங்கள் பெறச் செய்தார். மதுரை, தூத்துக்குடி சாலையில் தொழில் மேம்பாட்டிற்காக எடுத்த முயற்சியில் இப்போது கிடைத்த முதலீடுகளில் தூத்துக்குடி நகரத்தில் LNG நிலையம் அமைவதனால் அப்பகுதியில் தொழில் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இத்தோடு சென்னை எண்ணுரில் உள்ள LNG நிலையமும் இணைந்து தமிழகத்தின் நீண்ட நாள் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார். முதலீட்டாளர்களின் விண்ணபங்களை முப்பது நாட்களில் பரிசீலனை செய்து அனுமதிகள் மற்றும் தேவைப்படும் சான்றுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். விரைவில் இந்தியாவிலேயே முதலீடு செய்ய விமானத்துறை மற்றும் பாதுகாப்புத்துறைக்கான மாநில அரசுக் கொள்கையை விரைவில் அறிவிக்கப் போவதாகத் தகவல் தெரிவித்தார். முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளும் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கூறினார்.