உள்ளத்திலிருந்து…

220px-subramanya_bharathi“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”
– பாரதியார்.

ஒரு நாட்டின் ஆறுகள்தான் அந்நாட்டின் இரத்த நாளங்கள். மேலே கூறப்பட்ட ஆறுகள் அனைத்தும் அன்று ஜீவநதிகள் போல் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. “வான் பொய்ப்பினும் தான் பொய்யா வலித்தனைய காவிரி” என்றும் “கரை புரண்டோடும் வையை என்னும் பொய்யாக் குலக் கொடியயன்றும்” சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் எடுத்துரைத்துள்ளன. ஆனால், இன்று இந்தியர்கள் எல்லாம் பிற மாநிலங்களின் கைகளில் சிக்கி நமக்கு நீர் வரத்தே இல்லாமல் ஆகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அண்டை மாநிலங்களுடன் இணைந்து நமது மாநிலத்திற்குரிய நீரைப் பெறுவதுடன் கடலில் சென்று கலக்கும் நீரையும் தடுத்து தமிழகத்தில் தஞ்சை என்று “தென்னக வயல் நாடாகவே” செய்திட உழைப்போமாக.

மேலும், “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்ற பாரதியின் பாட்டை மைய அரசின் துணை கொண்டு கங்கை காவிரி இணைப்பை ஏற்படுத்தி, இந்தியாவை நீர்வளம் மிக்க நாடாக மாற்றுவோமாக.

அத்துடன், “கங்கைநதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” என்ற முறையில் மாநிலங்களில் பயிராகும் பொருள்களைப் பண்ட மாற்றுச் செய்து ஒருவரையயாருவர் சார்ந்து வாழ்வோமாக.

பாரதி கூறிய வழியின்படி “நல்ல காடுகளை” வளர்ப்போமாக. அதனால், தேவையான, பலன்தரும் மரங்களை எல்லா இடங்களிலும் வளர்த்து, பொருளாதாரப் பெருக்கத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் மாற்றிஅமைப்போமாக. இன்று பண்டமாற்றுப்படி வடஇந்தியாவில் விளையும் கிழங்குகள் தமிழகத்தில் குறைந்த விலையிலேயே நுகர முடிகிறது. அதற்குப் போக்குவரத்தும், சாலைகளும் (தங்க நாற்கரச்சாலைகள்) நன்கு பயன்படுகின்றன. ஆகவே, நீர் சாலை, சுற்றுப்புறம் ஆகியவற்றிற்க்கு நமது வருவாய்களைப் பங்கிட்டுத்தந்து நாட்டை மேலும் , மேலும் உயர்த்துவோமாக

கல்வியையும் கூட இவைபற்றிய திசையில் திருப்பி நாடு உயர்வடையப் பாடுபட்டு

பாரதநாடு முன்போலவே பழம் பெரும் நாடாக மாற்றிக் காண்போமாக

உழைப்போம்! உயர்வோம்.!!!