என் வீடு என் தோட்டம் – சிக்கன நீர் நிர்வாக முறைகள்

sprinklerஅன்பான வாசகர்களுக்கு வணக்கம். சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தற்போதைய கால கட்டத்தில் எல்லா வகையான பொருட்களையும் மிகவும் சிக்கனமாப் பயன்படுத்தா பயன்படுத்த விழிப்புணர்வுடன் இருக்கிறோம் அதுவே நல்ல ஒரு சூழ்நிலை ஆகும்.பொதுவாக ஒருவர் பணத்தினைப் தனது இஷ்டப்படி செலவழித்து வந்தால் அவரைப்[ பார்த்து மற்றவர்கள் ஏன் தண்ணீரைப் போலப் பணத்தை இப்படி வீணாக்குகிறார் என கூறக் கேட்டிருக்கிறோம். விலை மதிப்பில்லாத தண்ணீர் நமக்குத் தேவையான அளவு மட்டும் சரியாக உபயோகிக்கும் முறைகளை நாம் கையாண்டால் போதுமானது.விவசாயப் பணிகளில் சிக்கன நீர் நிர்வாக முறைகளைப் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

நீரின் அவசியம்:

நீரின்றி அமையாது உலகு என்பது நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் கூற்று.உலகத்தில் அனைத்து ஜீவராசிகளும் நீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது விவசாயத்தில் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சுவாமிகள், செடிகள் தண்ணீரின்றி வாடுவதையே பொறுத்துக் கொள்ள இயலாமல் இருந்தது என்பது அவரது கருணையினைக் காட்டியது. விதைகள் முளைபதற்கும் செடிகள் வளர்வதற்கும்,பூப்பதற்கும்,காய்பதற்கும் எனச் செடிகளின் வளர்ச்சியில் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் அவசியமாகும் செடிகளின் வளர்ச்சி கால கட்டத்திற்குத் தகுந்தாற் போல தேவையான அளவு தண்ணீரைச் சரியாகத் திட்டமிட்டு வழங்குவதே நீர் நிர்வாகம் ஆகும்.

சிக்கன நீர் நிர்வாகம்:

நமது நீர்பசனத்தினை நீர் விரயமின்றித் திட்டமிட்டு செய்வதே சிக்கன நீர் நிர்வாகம் ஆகும்.

சிக்கன நீர் நிர்வாகம்:

சிக்கன நீர் நிர்வாகத் பயன்கள்:

# குறைந்த அளவு நீரினைக் கொண்டு நீர்ப் பாசனம் செய்யலாம்.
# நீர் விரயமாவது தடுக்கப்படுகிறது
# தோட்டத்தில் களைச் செடிகள் அதிகமாக முளைப்பது கட்டுப்படுகிறது
# செடிகளின் வேர்ப்பகுதிகளில் நீர் கிடைக்கும் வகையில் இருப்பதால் நீராவியாகி அதிகமான நீர்    வீணாவது தடுக்கப்படுகிறது.
# நீர்ப்பாய்ச்சும் முறைகளோடு சேர்த்து உரங்களையும் சேர்த்து கொடுக்கும் வழிகளை பின்பற்றும் போது வேலை ஆட்கள்,உரம்,பணம்,நேரம் மிச்சமாகிறது.

சிக்கன நீர் நிர்வாக முறைகள் :

சொட்டு நீர்ப் பாசனம் :

தண்ணீரைப் வாய்க்கால்கள் மூலம் அல்லது தோட்டத்திற்குப் பாய்ச்சும் முறைகளைப் பார்த்திருக்கிறோம். அந்த முறையில் மின் மோட்டரைப் இயக்குவதற்கு மின்சாரம் இருக்க வேண்டும்.இந்த முறையில் செடிகள் அல்லது மரங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீரை விட அதிக அளவு தண்ணீர்,வாய்க்காலிலும் நீரவியாகவும் களைச் செடிகளுக்கும் போவதன் மூலம் வீணாகிறது.அதனைச் சமாளிக்கும் வகையில் சொட்டு நீர்ப்பாசனம் எனும் முறையானது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாம் பாய்ச்சும் தண்ணீரைச் செடிகளின்,அல்லது மரங்களின் வேர்ப்பகுதிகளில் கிடைக்கும்படி செய்கிறது.ஆழ்துளைக் கிணறு அல்லது கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு உயரமாக அமைகப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்துக் கொள்ளப்படுகிறது.மின்சாரம் இருக்கும் நேரங்களில் தொட்டியினை நிறைத்து வைத்துக் கொள்ளலாம்.தேவையான போது தொட்டியிலிருந்து திறந்து விட்டு நீர்ப்பாய்ச்சலாம்.தண்ணீரிலுள்ள மணல் மற்றும் அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்கு ஒரு வடிகட்டி அமைப்பு உள்ளது அதன் வழியாகத்தான் தண்ணீர் அனுபப்படுகிறது.நமது தோட்டத்தில் உள்ள செடிகளின் வரிசையில் சிறிய துவாரங்களைக் கொண்ட சொட்டு நீர்க் குழாய்கள் அமைக்கப் பட வேண்டும். மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்ட பின்னர் தோட்டத்தில் செடிகளுக்கு அதன் வேர்ப்பகுதி நனையும் வகையில் தண்ணீர் கிடைக்கும்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீரை நிறுத்தி விடலாம்.இந்த நீரில் தேவையான உரங்களைக் கலந்து அனுபவதன் மூலம் நேரம்,பணம்,உரம்,வேலையாட்கள் பெரிய அளவில் மிச்சபடுத்தலாம்.ஆரம்ப செலவு அதிகம் ஆனால் 3-5 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தெளிப்பு நீர் முறை:

மலைப்பகுதிகளில் மண் அரிமானத்தினைக் தடுக்கவும்,இலை வழியாகத் தெளிப்பு நீர்ப்பாசனம் செய்யவும் sprinkler எனும் முறை பயன்படுத்தப்படுகிறது.மலைப்பகுதி காய்கறிப் பயிர்கள்,தோட்டப்பயிர்களுக்கு இந்த முறை சிறந்த முறையாகும்.

பானை நீர்ப் பாசன முறை:

மிகவும் எளிமையான சொட்டு நீர்ப் பசன முறை மண் பானைகளைப் பயன்படுத்தி செடிகளின் வேர்பகுதிகளுக்கு நீர் கிடைக்குமாறு செய்யும் முறை ஆகும்.சிறிய மண் பானைகளில் அடிப்பாகத்தில் சிறிய துளையிட்டு அதில் துணியினை சிறிய அளவில் திரித்து செருகி வைக்க வேண்டும்.ஒரு புறம் முடுச்சு போட்டு பானையில் உள்புறமிருந்து செருகினால் திரியானது வெளியே வெளியே வராது.அந்தப் பானையினைத் தென்னை மாமரம் மற்றும் பழமரங்கள் ரோஜா போன்ற படர்ந்து வளரும் செடிகளின் வேர்பகுதியில் மண்ணில் புதைத்து வைத்து அதில் தண்ணீரை ஊற்றி வந்தால் மிகவும் சிக்கனமாக அதிக செலவில்லாமல் சொட்டு நீர்ப் பாசனம் செய்து முடிக்கலாம்.

என்ன வாசகர்களே சிக்கன நீர் நிர்வாக முறைகள் பயனுள்ளதாக இருந்ததா? உங்களது கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அடுத்த இதழில் எளிய பயிர்ப்பாதுகாப்பு முறைகள் பற்றிப் பார்ப்போமா?

About ராம்குமார் S

View all posts by ராம்குமார் S →