“ஏற்றுமதி செய்ய விரும்புகின்றீர்களா? முதலில் அடிப்படை சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்”

importஇன்று ஏற்றுமதி என்ற வார்த்தை சிறு கிராமங்களில் கூட ஒலிக்கத் தொடங்கி விட்டது.  இந்நிலை மேலும் வளர்ந்து, இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக ஆகிறதோ அன்று தான் இந்தியா முன்னேறிய நாடாக, வளமான வல்லரசாக மாற இயலும்.  நம் தமிழ்நாட்டில் 32000 பதிவு  பெற்ற ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்  ஆனால் 45 லட்சம் பேர் “ஏற்றுமதி – இறக்குமதி பதிவு எண்” பெற்றுக் காத்திருக்கின்றனர்.  ஏற்றுமதித் தொழில் தொடங்கு முன் ஒரு தொழில் முனைவோர் என்ன வி­யங்களை அறித்திருக்க வேண்டும்? அதற்கு ஏதும் தகுதிகள் உள்ளதா? எவ்வளவு முதலீடு வேண்டும்? என்ற பலர் வினா எழப்புகின்றனர்.  இதோ அவர்களுக்கான பதில்:-

1. அனுபவமும், ஆங்கில அறிவும்.

முதலில் இங்கு தொழில் அல்லது வணிகம் செய்து அல்லது பணிபுரிந்து, குறைந்தது 5 வருடங்களாவது “வணிகத்தில்” அனுபவம் பெற்றிருப்பது நல்லது.  குறைந்தது 30 வயதுடையவராக இருப்பது நலம்.  நன்கு ஆங்கிலம் படிக்க, எழுத, பேசத் தெரிந்திருப்பது இன்று விரும்பத் தக்கது.

2. கம்யூட்டர் அறிவு

இன்று உலகமே கம்யூட்டரிலும், இணைய தளத்திலும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.  எந்த ஒரு தகவலையும், விலாசத்தையம், பொருள் கிடைக்கும் இடம், தயாரிப்பாளர் விபரம் என எதையும் மடிக் கணினி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.  இ மெயில் அனுப்ப, இ மெயிலைப் படித்துப் பதில் அனுப்ப, இன்று கம்யூட்டர் அறிவு அவசியமாகிறது.  எனவே ஏற்றுமதி – இறக்குதி வர்த்தகத்தில் இறங்க விரும்புவர் சிறிதளவேனும் கம்யூடடர், இ மெயில், வலைத்தளங்கள் சமூக மீடியாக்கள், விளம்பர சாதனங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

3. உள்நாட்டுச் சட்ட திட்டங்கள்

இங்கு இந்தியாவில் பேன் கார்டு / ஆதார் கார்டு என்றால் என்ன? எப்படி பாஸ்போர்ட் / விஸா பெறுவது, விற்பனைவரி, உற்பத்தி வரி, கஸ்டம்ஸ் வரி, வருமான வரி எப்படி கணக்கிடப்படுகிறது.  வங்கிக் கடனுக்கு வட்டி எவ்வளவு, என்ன லைசென்ஸ் / பதிவு எண்கள் பதிவு எண்கள் எங்கு பெற வேண்டும், எந்தப்பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம்? என்ன மாதிரி பொருட்களை ஏற்றுமதிக்குத் தடை கெய்துள்ளனர் என முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

4. ஏற்றுமதி செய்ய விரும்பும் நாடுகளின் இறக்குமதிக் கொள்கைகள், தரம் , வரி, இதர சட்ட திட்டங்கள்

எந்த நாட்டுக்கு இங்கிருந்து தங்கள் பொருட்களை அனுப்ப விரும்புகின்றீர்களோ அந்த நாட்டின் இறக்குமதிச் சட்டம், கொள்கை, நடைமுறைகள், வரிவிபரம், தரக் கட்டுப்பாடு போன்ற அனைத்தையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.  ஸ்ரீலங்காவில் ஒரு கொள்கை, செளதி அரேபியாவில் வேறு நடைமுறை, ஐரோப்பிய நாடுகளில் வேறு கட்டுப்பாடுகளை வெவ்வேறு பொருட்களுக்கு வைத்துள்ளனர்.  இதை முதலிலேயே அறிந்திருக்க வேண்டும்.

5. பேக்கிங்

இங்கிருந்து அனுப்பும் பொருட்கள் எப்படி பாதுகாப்பாக அனுப்ப வேண்டும், பேக்கிங் எப்படி இருக்க வேண்டும், அதில் உள்ள லேபிளில் என்ன பிரிண்டு செய்திருக்க வேண்டும்? எத்தனை நாளில் அப்பொருள் கெட்டுப் போகும்? எத்தனை நாளைக்குள் உபயோகப் படுத்த வேண்டும்?என்பது போன்ற தகவல்களை அந்த லேபிளில் போட்டிருக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறத்துகின்றனர்.  (இது பற்றி பல பயிற்சிகளை இந்திய அரசின் பேகேஜிங் இன்ஸ்டிடியூட் நடத்துகிறது)

6. தரம்

எந்த பொருளுக்கும் ஒரே மாதிரி தரம் இல்லை.  சில நாடுகள் இந்த தரத்தில் இப்படிப் பட்ட கலரில் பாசுமதி அரிசி வேண்டும் என்பார்கள்.  இன்னொரு நாடு மோட்டார் ரக கைகுத்தல் அரிசி கேட்பார்கள். ஒரு நாடு இந்திய தரச் சான்று ISI ( ஐ.எஸ்.ஐ ) முத்திரையை மதிப்பார்கள். சில நாடுகள் எங்கள் நாட்டுக்கு ஏற்ற தரம் எங்கள் நாட்டுத்தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப தயாரித்த பொருளையே வாங்குவோம் என்பார்கள்.  எனவே தரம்  பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

7. இன்சூரன்ஸ்

ஏற்றுமதி செய்யும் பேக்டரியில் இருந்து பொருட்களை விமான நிலையம், துறைமுகம் செல்ல வேண்டும்.  பின் கடலில், வானத்தில் பயணம் செய்து அந்த நாட்டை அடையும் பொருட்களை மீண்டும் லாரியல் ஏற்றி, உபயோகிப்பவரது இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இந்த பயண வழியில் விபத்து நடக்கலாம்? போர் வரலாம்? கப்பல் கவிழ்ந்து போகலாம். இப்படி எது நடந்தாலும் இழப்பு ஏற்றுமதியாளருக்கே வரும் எனவே ECGE எனப்படும்  இன்சூரன்ஸ்

நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் ( காப்பீடு ) செய்து அனுப்ப வேண்டும்.

கீழ்கண்ட வலைத் தளம் பாருங்கள்:-
1. www.iaccindia.com,
2.www.eegc.gov.in,
3. www.dgft.nic.in,
4. www.rbi.org
5. www.fico.org
6. www.dgeiskol.nic.in
7. www.stco.gov.in