கட்டிடத்தில் மொத்த சதுரடி விலை நிர்ணயம் சரியா சாத்தியமா சதுரடி கணக்கில் என்ன என்ன வேறுபாடுகள் சிந்திப்பீர்கள் சதுரடி விலையை

d1ghc6d5கட்டடத்தில் நாம் மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்வது எது என்றால், செலவு செய்யும் தொகை தான்.  இந்தச் செலவை மட்டும் மனதில் கொண்டு கட்டடத்தைக் கட்டினால் நல்லது தான்.  ஆனால் இந்த செலவு தொகையையே காரணம் காட்டி! காட்டி! நாம் ஆசை ஆசையாய் கனவுடன் எண்ணிக் கொண்டு இருந்த நமது வீடு, நம்மைப் பாதுகாக்கும் வீடு, இதற்கு நிறைய காரணங்கள் உண்டு, ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழல் நிலைக்கும், பொருளாதாரம். பொருத்தும், அவர்களுடைய கனவு வீட்டை கட்டுவர்,  இந்தக் “கனவு இல்லம்” ஆனது ஒவ்வொருவருக்கும் அவர்களது! அவர்கள் கட்டும் வீடு ஆகும் !அது எந்த அளவுக்கு எவ்வளவு தொகை என்பது மாறுபடும்.

எனினும் வேறு வேறு விதமான மாறுபாடுகள் கொண்டதுதான், இந்தக் கட்டடம், வீடு, அனைத்து குடியிருப்புகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை வரைபட அமைப்பில் இருந்து, அளவுகள் அமைப்பில் கூட நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இவ்வாறு வேறுபாடுகள் உள்ள கட்டடத்தில் எப்படி ஒரே மாதிரியான தொகையை முடிவு செய்கின்றனர்..  ஒருவர் ஒரு கட்டடம் கட்டிய தொகையின் மதிப்பீடு ஆனது, மற்றொரு கட்டடத்தைச் சேர்ந்தும் இருக்காது. ஒப்பீடு செய்வதும் ஆகாது.  இந்த ஒப்பீடு ஆனது, ஒரே மாதிரி இருக்க வாய்ப்புகள் நூறு சதவீதம் குறைவு தான்.

கட்டடத்தை கட்டிய பின் ஏற்படும் மதிப்பீடு ஆனது,  மாறிக்கொண்டே இருக்கும்.  ஒருவர் கட்டிய கட்டடத்தின் செலவுத் தொகையைப் பின்பற்றி அதுபோல்தான் நமக்கும் வரும் என நினைப்பது தவறு ஆகும். அதே போல் அந்தக் கட்டடம் கட்டிய தொகை இவ்வளவுதான் ஆகி உள்ளது.  அதே போல்தான் நமக்கும் ஆக வேண்டும் என எண்ணக் கூடாது.  இதுவும் தவறு. இவ்வாறு எண்ணிக் கொண்டு தான் நிறைய பேர் தொகையை முடிவு செய்வது, இந்த மதிப்பீட்டில் தான் கட்டடம் கட்டிட வேண்டும் என கருதி கட்டடம் கட்ட ஒப்பந்தம் செய்கின்றனர்.  இந்த ஒப்பந்தம் ஆனது வெறும் தொகையைக் கருத்தில் கொண்டும் வேறு ஒருவரின் மாதிரியை வைத்துக் கொண்டும் அமைக்கக் கூடாது.  ஏன் எனில் இது ஒன்றும் பொருளை உற்பத்தி செய்து பின்பு அதனை விலை நிர்ணயம் செய்வது அல்ல. அல்லது ஒரு பொருளை ஒரு இடத்தில் வாங்கி விற்பதும் இல்லை.

இது ஒரு காலத்தால் அழியாத காவியம். காலத்தால் சொல்ல கூடிய பெட்டகம், காலத்தினால் அழிக்க முடியாத உயிர்.ஆம் கட்டடம் இதில் உயிர் உள்ளது.

இவ்வாறு இருக்கக் கூடிய கட்டடத்தை நாம்  மற்றொருவரின் கட்டடத்துடன் ஒப்பீடு செய்தும், அதே மாதிரி வேண்டும் என்பதில் தவறு இல்லை.  ஆனால் அதே தொகைக்குள் பணி முடிய வேண்டும்  என்று எண்ணுவது மிகவும் தவறு ஆகும்.  என்ன என்ன காரணங்கள் உள்ளன?

பூமிப் பகுதி ஆனது  இடத்திற்கு இடம் மாறுபடும்.  இந்த மாறுபாடு மண்ணின் தன்மை வெவ்வேறு ஆக இருப்பதாகும்.  களிமண், செம்மண், கரிசல்மண், வண்டல்மண், சரளை மண், சுண்ணாம்புக் கல் மண், சிறிய பாறைகள்,  பெரிய பாறைகள், களிமண் வகைகள் 5 உள்ளன.  ஒரு சில மண்கள் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும்.  ஒரு சில மண்கள் நீரை வெளியேற்ற வைக்கும் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தன்மை உள்ளது.  எனவே இந்த மண்ணை வைத்துத்தான் கட்டட மதிப்பீடு செய்வது நலம் ஆகும்.

புதிய கட்டடம் கட்டும் முன் நமது மண்ணின் தன்மைக்கு ஏற்ப அஸ்திவாரம் அமைக்க வேண்டும்.  அப்பொழுது தான் காலத்துக்கும் எந்த ஒரு பராமரிப்பும் இருக்காது.  ஒருவர் ஒரு பகுதியில் அவர் இடத்தில் அமைத்தது போல் அஸ்திவாரம், பவுண்டே­ன் ஆழம், நம் இடத்தில் இருக்க வேண்டும் என கருதுவதும் தவறு ஆகும்.  ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை. ஐம்பது முதல் நூறடி தூரத்தில் கூட மண் தன்மை மாறுபடும். இது முதற் காரணம் இங்கே தொகையின் மதிப்பீடு கூடும், அல்லது குறையும், இவ்வாறு இருக்கையில் எப்படி சாத்தியம்?

இரண்டாவது காரணம்; அஸ்திவாரத்தின் உயரம், அதாவது ரோட்டின் சாலையின் உயரத்தில் இருந்து, அஸ்திவாரம் “பேஸ்மெண்ட்” உயரம் எந்த அளவு உயர்த்துவது, என்பதிலும் மாறுபடும்.

தார் சாலை அமைந்துள்ள பகுதியில் பேஸ்மெண்ட் உயரம் அமைப்பதும், அதே போல் மண்சாலை உள்ள பகுதியில் பேஸ்மெண்ட் உயரம் அமைப்பதும் ஒரே அளவு, ஒரே உயரம் இருக்காது.  இருக்கவும் கூடாது.  இங்கு அவைகள் மாறுபடும். அதனால் தொகையும் கூடும், அல்லது குறையும் தரையின் பங்கு அதாவது தாழ்வான பகுதி, நீர் நமது இடத்தின் வழியாகச் செல்லும் போது பூமியின் போக்கு உள்ள பகுதியில் பேஸ்மெண்ட்டை அதிகம் உயர்த்த வேண்டும்.  இங்கு தொகை கூடும் இவ்வாறு இருக்கையில் எப்படி சாத்தியம்?

மூன்றாவது காரணம்; அஸ்திவாரத்தின் வடிவமைப்பு, பில்லர், பீம், அஸ்திவாரம், கருங்கல் அஸ்திவாரம், பில்லர், பீம், வைத்து, பில்லர் ஆனது பேஸ்மெண்ட் வரை மட்டும் உயர்த்துவது.  இதற்கு மேல் பில்லர் உயராது.  மற்றொரு முறை பில்லரை மேற்கூரை வரை உயர்த்தி அங்கு பீம் , ரூப்பீம் அமைப்பது இவ்வாறு பல முறைகள் உள்ளனவே. இதில் எந்த முறையில் அமைப்பது என முடிவு செய்ய வேண்டாமா? பில்லர் வைத்த எல்லாக் கட்டடமும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை.  இவ்வாறு பல காரணங்கள் இருக்க எப்படி சாத்தியம். இந்த அஸ்த்திவாரத்தில் தான் முக்கிய பங்கு உள்ளது. இது எந்த மாதிரி வடிவமைக்கின்றோமோஅதுதான் காலத்துக்கும் நிர்ணயம் செய்யும்.  உட்புறம் நிரப்பும் மண் கூட வேறுபாடுகள் உள்ளனவே.
நான்காவது காரணம்;  கட்டடத்தில் பயன்படுத்தும் கம்பிகள்.  புட்டிங் காலம் போஸ்ட், பில்லர் பிளிருத், பீம், பிளிந்த் பீம் (தரைதளம்), பேஸ்மெண்ட் பிளிந்த் பீம், லிண்டல் அமைப்பது மொத்த சுவருக்கும் அல்லது எங்கு எங்கு கதவு, ஜன்னல் பகுதியில் மட்டும் அமைப்பது ரூப் பீம், மாடி படி அமைக்கும் முறைகள் இங்கு அமைக்கும் கம்பிகள், மேற்கூரையில் அமைக்கப்படும் கம்பிகள் இதன் வடிவமைப்பு, இதன் வேறுபாடுகள் கட்டத்திற்கு, கட்டிடம் மாறுபடுமே இது எப்படி சாத்தியம் ஆகும்.

மேற்கூரையின் உயரம், அதன் அறையின் நீள,அகலம் பொருத்து மாறுபடும். உயரம் என்பது மேற்கூரை கான்கிரீட் (கனம்) என்று சொல்லலாம்.  அதே போல் தான் ரூப் பீம்களும், நீளத்தை பொருத்து உயரம் கூடும், அல்லது குறைவாகவும் இருக்கும். ஒரே மாதிரி பீம்கள், பில்லர்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை.  எனவே இது எப்படி சாத்தியம்.

ஐந்தாவது காரணம்; நாம் பயன்படுத்தும் பொருட்களின் வேறுபாடுகள்.  இது செங்கல், பிளை ஏஸ் பிரிக், சாலம் பிளாக் , எடை குறைவான பிளாக், கம்பிகள் நிறுவனத்திற்கு நிறுவனம் தொகை மாறுபடும், கிரேனைட், டைல்ஸ், பட்டி, அல்லது டிஸ்டெம்பர், மரம், அல்லது U.P.V.C.கிரில் வடிவமைப்பு படிகளுக்கு பதிக்கும் கற்கள், வெளிபுறம் பதிக்கும் கற்கள் வெளிப்புறம் பட்டி வைப்பதா அல்லது சாதாரணமுறையா என நிறைய வகைகள் உள்ளனவே இது எப்படி சாத்தியம்

ஆறாவது காரணம்; படிகளின் வடிவமைப்பு உட்புறம் வைப்பதா, வெளிப்புறம் வைப்பதா படிகளின் வடிவமைப்பு ஐந்து வகைகள் உள்ளன. அதன் மேல் பகுதி கைப்பிடியின் அமைப்பு கிச்சன் சமையல் அறையின் அமைப்பு, அங்கு என்ன மாதிரிப் பொருட்கள் பயன்படுத்துவது.  சமையல் அறையில் பொருட்கள் வைக்கும் பகுதி, அங்கு வைக்கும் அலமாரி அமைப்பு, படுக்கை அறையின் அலமாரிகள், அதில் பயன்படுத்தும் பொருட்களின் தன்மை, இதுவும் மாறுபடும்.  இது எப்படி சாத்தியம்?

ஏழாவது காரணம்;  நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டி, தண்ணீர்த் தொட்டி நிலத்தடிகளில் இருப்பது இது நீள அகலம் பொருத்து கம்பிகள் அளவு மாறுபடும்.  மேல் நிலைத் தொட்டி, இது சோலார் அமைக்க வேண்டும் எனில், ஐந்து அடி முதல் 7 அடி வரை உயர்த்தவேண்டும்.  இதன் வேறுபாடுகள், செப்டிக் டேங், இதன் வடிவமைப்பு, அங்கு பயன்படுத்தும் பொருட்களின் தன்மை, கருங்கல், அல்லது செங்கல் செப்டிக் டேங்கில் உள்ள நீரை வெளியேற்றும் முறையா? அல்லது நீரை பூமிக்குள் செல்லும் விதமா? என காரணங்கள் உள்ளன.  இது எப்படி சாத்தியம் ஆகும்?

எட்டாவது காரணம்; மேற்கூரையின் மேல்பகுதியில், சுருக்கி அமைத்து, பின் சிமெண்ட்தளம் அமைப்பதா அல்லது ஓடு பதிப்பதா?

ஒன்பதாவது காரணம்; காம்பவுண்ட் சுவர் இதன் அஸ்திவாரம், பவுண்டே­ன் முறைகள், பைல் பவுண்டே­ன், பில்லர் பவுண்டே­ன், கருங்கல் பவுண்டே­ன் பில்லர்களைத் தரைத் தளம் மட்டும் உயர்த்தும் பவுண்டே­ன் , பில்லர்களைக் காம்பவுண்ட சுவர் மொத்த உயரம் உயர்த்தும் முறை, செங்கல் சுவர், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக், பினை ஏஸ் பிளாக் ஹாலோ பிளாக் கட்டட பட்டு சிமெண்ட் கலவை கொண்டு பூசும் முறை, பூசாமல் இருக்கும் முறை பின்பு பூமிக்குகீழ் உள்ள ஆழம், பூமிக்கு மேல் உள்ள உயரம் என நிறைய காரணங்கள் உள்ளன.  இது எப்படி சாத்தியம் ஆகும்?

பத்தாவது காரணம்;  வெளிப்புறத் தரை தளத்தின் உயரம், அதன் மீது பதிக்கப்படும் டைல்ஸ், அல்லது பேவர் பிளாக், கற்கள், அல்லது சிமெண்ட்தளம், சிமெண்ட் தளத்தில் முதலில் மெட்டல் கான்கீரிட், பின்பு சிறிய ஜல்லி கான்கீரிட், அதன் மேல் சிமெண்ட் கலவை என்ற முறை, கழிவுநீர் பரிசோதனை மற்றும் இணைப்புத் தொட்டிகள் அதன் கட்டுமானம் அதன் எண்ணிக்கை கேட்டின் அமைப்பு வடிவமைப்பு எண்ணற்ற மாறுபாடுகள் உள்ளன.  இது எப்படி சாத்தியம் ஆகும்?

பதினொன்றாவது காரணம்; எலக்ட்ரிக்கல் இது ஒவ்வொரு அறைக்கும் என்ன மாதிரி தேவைகள் என்பதைப்  பொருத்து மாறுபடும். இதில் தான் நிறைய மாற்றங்கள் உள்ளன.  சுவரில் பதிக்கும் பி.வி.சி. பைப்பின் தன்மை, நிறுவனத்தின் தன்மை, மாறுபடும் எலக்ரிக்கல் பாக்ஸ், இது மரத்தால் ஆனதா, அல்லது இரும்பால் ஆனதா எவ்வளவு சுவிட்ச்கள் எந்த மாதிரி ஆன மாடல் வடிவமைப்பு எந்த நிறுவனத்தின் சுவிட்சுகள், என முடிவு செய்து தான் பாக்ஸ் வைத்தல், ஒயர்கள், இதன் விலை நிர்ணயம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.  பாக்ஸ்களின் எண்ணிக்கை, வெளிப்புற கரோல் பாக்ஸ்தன்மை, என நிறைய மாற்றங்கள் உள்ளனவே.  இது எப்படி சாத்தியம் ஆகும்?

பன்னிரெண்டாவது காரணம்;  பிளம்பிங் கட்டடத்தின் நரம்பு மண்டலம் எனலாம்.  இது சரியில்லை எனில், பின்பு எதுவும் சரியாக இருக்காது.  இது சரியில்லை எனில் கட்டடத்தையே ஆட்டி அசைய வைக்கும். மன வேதனை ஏற்படுத்தும்.  நல்ல தரமான பொருட்களைப் பயன்படுத்துவது தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.  ஆனால் பட்ஜெட் தொகை தான் இந்த பிளம்பிங் வேலை ஆரம்பிக்கும்போது கட்டத்தின் 80 சதவீதம் வேலை முடிந்தமாதிரி ஆகும் அப்பொழுது தொகை பற்றாக்குறை இருக்கும். அப்பொழுது கவனம் மாறி குறைந்த விலை உள்ள பொருட்களைப் பயன்படுத்த எண்ணம் வரும். இது தவறு  ணூ.றீ.ணூ.பிராண்ட் தரமான பொருட்கள் பயன்படுத்த வேண்டும்.

பூமியில் பதிக்கும் கழிவுநீர்க் குழாய்களின் தரம் அதன் உறுதித் தன்மை மிக முக்கியம் ஆகும்.  ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு பரிசோதனைச் சேம்பர் அமைக்க வேண்டும்.   இது மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். என்கிற கண்ணோட்டத்தில் பணி செய்ய வேண்டும்.  முதல் மாடியில் அமைக்கும் குளியல் அறைகள் மிகவும் கவனம் எடுத்துத் தக்க வடிகால், தக்க கல்லினால் அமைக்கப்பட வேண்டும்.  இதுவும் கட்டடத்திற்குக் கட்டடம் மாறுபடும்.  நிறைய பொருட்கள் எண்ணிக்கை மாறுபடும்.   இது எப்படி சாத்தியம் ஆகும்.

பதிமூன்றாவது காரணம்; பெயிண்டிங், வர்ணம் பூசுவது.  இதில் தான் எத்தனை வகையான பொருட்கள், விலைகளும் மாறுபட்டு உள்ளன. வர்ணம் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப, வேறு மாதிரி விலை இருக்கும்.

வர்ணத்தைப் பொருத்த வரை தன்மை முக்கியம் ஆகும்.   என்ன தன்மை உடையது, என்பது முக்கியம்.  இது வர்ணம் ஒரே மாதிரி இருப்பினும் விலை மாறுபடும்.  ஆகவே வர்ணம் கலர் வைத்து, நாம் அதே போல் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது.  ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தன்மை இருக்கும்.

எந்தப் பொருளுக்கும் முதலில் வர்ணம் செய்து பின்பு இரண்டாவது செய்வது என்பது காரணம் உண்டு.  எதை முதலில் செய்து எதை இரண்டாவது மூன்றாவது செய்வது எனக் காரணங்கள் உள்ளன.  அறையின் உட்புறம் சுவரில் பூசும் பட்டி ஆனது, உட்புறம் மட்டுமே அமைக்கும் வகையில் விலையில் உள்ளது.

உட்புறம் பூசிய பட்டியை வெளிபுறம் பூச முடியாது.  பூசினால் ஈரம், மழைநீரால், வெப்பத்தால் பாதிக்கப்ட்டு வலுவிழந்து விடும்.

உட்புறமும் வெளிப்புறமும் பூசக்கூடிய பட்டி உள்ளது. இது விலை கூடுதல் , இவ்வாறு நிறைய வேறுபாடுகள் உள்ள பொருட்கள் சந்தையில் உள்ளன.  கட்டத்திற்குக் கட்டடம் மாறுபட்டுத்தான் இருக்கும்.  நாம் அந்தக் கட்டடம் வர்ணம் அப்படி உள்ளதே.  என நமது கட்டடமும் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்வது தொகையைப் பொருத்துத் தான் அமையும் இது எப்படி சாத்தியம் ஆகும்?

ஆக மேற்சொன்ன இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன.  மேலும் நிறைய காரணங்கள் உள்ளன.  எனவே தான் கட்டடத்தை மொத்தச்  சதுரடியில் தொகையை நிர்ணம் செய்வது தவறு ஆகும்.   ஏன் எனில் பொருட்கள் விலை ஏற்றம் என்பது அவ்வப்பொழுது மாறுபடுகிறது.

மொத்த சதுரடியில் பணியை எடுக்கும் பொழுதும், கொடுக்கும் பொழுதும், அந்தப் பணியை குறிப்பிட்டுள்ள தொகைக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்க வேண்டியது ஆகிறது.  பருவநிலை, பொருளாதார நிலை, ஏற்றம், சரிவு இதனால் பாதிக்கப்படுவது நமது கட்டடத் துறை தான். எந்த ஒரு மாற்றம் வரும் பொழுதும் முதலில் பாதிக்கப்படுவது நமது துறை தான்.

கட்டடத்தைக்  கட்டுவது வாழ்வின் லட்சியம் ஆகும். எவ்வளவுதான் பணம் இருப்பினும், நல்ல சூழல் அமையப் பெற்றால்தான். கட்டடம் கட்ட முடியும். வாழ்வில் ஒரு முறை கட்டும் கட்டடம் குறைந்த மதிப்பீட்டில் அவரவர் சக்திக்கேற்பவும் பொருளாதாரத் தரத்துக்கு ஏற்பவும், கட்ட எண்ணுவர். நாம் கட்டிய கட்டடம் நம் வாழ்கையிலேயே வலுவிழந்து போகும் படியாகவா கட்டுவது?

ஒரு தலை முறை கழித்து இரண்டாம் தலைமுறை பார்க்கக்கூடிய வகையில் தான் நமது கட்டடம் அமைக்க வேண்டும்.  முன்னோர்கள் கட்டிய கட்டடம் நான்கு ஐந்து தலைமுறை கூடிய பயன் தந்துள்ளது பழைய காலத்தில் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நிலைத்து நீடித்து இருப்பதற்கான வழிகளைக் கண்டனர்.

தற்பொழுது அவசர அவசரமாகச் கம்ப்பியூட்டர் யூகம், நம்மை வேகமாகக் கட்ட வைக்கிறது. தக்க கால அவகாசம் இல்லையே மொத்த சதுரடியில் தொகையை நிர்ணயம் செய்வது தவறு.  அதே போல் ஒரு பகுதியில் ஆன கட்டடத் தொகையைக் கணக்கில் எடுத்து அதே மதிப்பீட்டில் நமது கட்டடம் கட்ட நினைப்பதும் தவறு ஆகும்.

“மாறுதலுக்கு உட்பட்டதே கட்டடம் தொகையில்”
“உயிர் உள்ள கட்டடத்தைத் தொகையைக் கொண்டு தரம் குறைக்க வேண்டாம்”.

பொறியாளர் மா.பாலமுருகன்