கட்டுமானத்துறையில்வர்ணம்……..

rddpnw1cவர்ணம் பூசும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும், மிக பெரிய நிறுவனங்களின் ஈடுபாடுகள்.  வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர்களின் அவல நிலை. உற்பத்தி செய்த நிறுவனமே, தான் உற்பத்தி செய்த பொருளை நேரிடையாகவே வியாபாரம் செய்யலாம் தவறு இல்லை. ஆனால் உற்பத்தி செய்த பொருளைக் கொண்டு தானே ஒப்பந்தத்தில் ஈடுபடுவது மிகவும் வேதனை ஆனது.  விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளை நேரிடையாகவே விற்பனை செய்ய முடியாத நிலை இருக்கின்றது.  அனைத்துக்கும் கமிஷ­ன் ஏஜெண்ட்டுகள் விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு என்ன செலவு ஆகி இருக்கின்றது  என்று தெரிந்தாலும் அதனை விட மிகக்  குறைந்த விலைக்குத் தான் விற்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

ஆனால் கட்டுமானத் துறையில் ஒரு கட்டடம் கட்ட ஒரு ஒப்பந்ததாரர், அல்லது ஒரு பொறியாளர், அல்லது கட்டுனர் எவ்வளவு பாடுபட்டு, ஒரு தரிசு பூமியில் ஒரு மிகப் பிரம்மாண்டமான கட்டத்தைக் கட்டுகின்றார்.  எத்தனை விதமான வேலைகள்?  எத்தனை விதமான வேலையாட்கள்? என வருடக்கணக்கில் அந்த கட்டத்தை கட்டி கொண்டு முடியும் தருவாயில்தான் வர்ணம் பூசும் பணிவருகின்றது.  இந்தப் பணி வரும் சமயம் அனைத்து விதமான கட்டுமான வேலை முடிந்து இருக்கும்.  இந்த இடத்தில் தான் மிகப்பெரிய ஒரு சூது வேலை நடைபெறுகின்றது, இது உண்மை ஆகும்.

வர்ணம் பூசும் வேலையும் ஒப்பந்தத்தில் இருந்தாலும், இந்த சூழலில் கட்டுனர், கட்டட உரிமையாளரும் ஒரு வருட கால பழக்கத்தில், ஒரு  அன்னியோனியமாகவும், ஒரு குடும்ப உறுப்பினர் என்ற பாச பிணைப்பில் இறுக்கம் ஏற்படும். இந்த நிலையில் கட்டட உரிமையாளர்.  வர்ணம் பூசும் நிறம், வர்ணம் பூசும் தன்மை, எனப் பல கருத்துக்களைப் பரிமாறினாலும் பொறியாளர், கட்டுனர், ஒப்பந்தகாரர், கட்டட உரிமையாளர் மனதுக்கு ஏற்ப முடிவு செய்ய விட்டு விடுவர்.  இந்தச் சூழலில்தான்.  முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் பெயரைச் சொல்வார்கள்.  பொறியாளர்கள் இந்த நிறுவனத்தின் பெயரைச் சொன்னவுடன் அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் மூலம் அல்லது விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மூலம்.  கட்டடத்திற்கு நேரிடையாகவே முன்னணி நிறுவனத்தின் வியாபார நபர்கள் நேரில் வந்து, கட்டட உரிமையாளரைப் பார்த்து எங்கள் நிறுவனத்தின் பொருளைத் தான் உங்கள் பொறியாளர், கட்டுனர், ஒப்ந்தகாரர் பயன்படுத்தப் போகின்றனர்.  அதனால் நீங்கள் பயன்படுத்தும் வர்ணம் மிகவும் நல்லது எனக் கூறியும்

நாங்கள் தான் அந்த வர்ணத்தை உற்பத்தி செய்கின்றோம் எனவே, நேரிடையாகப் பொருளைக் கொண்டு வருவோம். பொருளும் புதியதாக இருக்கும். நாள்பட்டதாக இருக்காது.விலையும் குறைவாக இருக்கும். எனவே உங்கள் கட்டடத்தில் வர்ணம் பூசும் வேலையை ஒப்பந்தத்தை எங்களுக்குத் தாருங்கள் விலையும் குறையும் எனக் கூறியும் ஒப்பந்த விலையை மிகவும் குறைத்துத் தந்து விடுகின்றனர்.  ஆனால் கட்டட உரிமையாளர்கள் மனம் மாறி இந்த நிறுவனத்திடம் வர்ணம்பூசும் பணியை ஒப்டைத்து விடுகின்றனர்.  இதனால் அந்தத்  திட்டம் கட்டிய கட்டுனர், ஒப்பந்ததார்க்கு அந்த வேலை இல்லாது போகும்.

அந்த ஒப்பந்தகாரர் அந்த கட்டத்திற்கு வர்ணம்பூச வேண்டும் என்று ஒரு வர்ணம் பூசும் பணிசெய்யும் நபரைக் தேர்வு செய்து வைத்து இருப்பார்கள்.  அவரை நம்பி ஒரு பத்து பேர் இருப்பார்கள்.  அவர்கள் சிறு சிறு குழுக்களாக பணி செய்வார்கள்.  ஒப்பந்தகாரரின் அனைத்துக் கட்டிடத்திற்கும் இந்த குழுதான் வேலை செய்து கொண்டு இருக்கும்.  ஆனால் தற்பொழுது இது பறி போய் உள்ளது. வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது மனகசப்பு ஏற்பட்டு உள்ளது…