கொஞ்சம் சுற்றுபுறச்சூழல் கொஞ்சம் வேளாண்மை

5sii0xt6மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுதான் மிகப்பெரும் கேள்வி. இம்மாதம் சூழல்இயலின் மையக் கருப்பொருளான புலிகளைப் பற்றி பேசுவோம். இத்தருணத்தில், புலிகளால் பலியானவர்களுக்குப் பிரார்த்தனையுடன் கூடிய அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கிறோம்.

உலகில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின், ஜவா என எட்டு வகை புலிகள் இருந்தன. 1940 ல் பாலி, ஹாஸ்பின் இனமும் 1970 ல் ஜவா இனமும் முற்றிலும் அழிந்துவிட்டன. தெற்கத்திய சீனம் இனமும் அழிந்துவிட்டன. மீதி நான்கு இனங்களே இன்று உள்ளன.

இந்தியாவில் ராயல் பெங்கால் என்ற இனம் உள்ளது. மொகலாய மன்னர்கள், இந்திய, தமிழக மன்னர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் என அனைவரும் புலிகளை வேட்டையாடுவதை ஒரு கெளரவமான பொழுது போக்கு என நினைத்து ஏறக்குறைய 95 % புலிகளை அழித்து விட்டனர்.

சிறு எறும்பு முதல் புலிகள் வரை சேர்ந்து வாழ்வதே காடுகளாகும். இப்படி வாழ்ந்து உணவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதே சூழல் சமநிலையை ஏற்படுத்தும்.ஏன் புலிகளுக்கு மட்டும் இத்துணைப் பாதுகாப்பு தற்போது வழங்கப்படுகிறது?ஏனெனில் புலிகள் இயல்பாக அதிக எண்ணிக்கையில் பெருகக் கூடியவை அல்ல. மேலும் புலிகளின் உணவாக மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள், காட்டு மாடுகள், யானைகளின் கன்றுகள், குரங்குகள் சில சமயம் பறவைகள் விளங்குகின்றன.

புலிகள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்ததால் தாவர உண்ணிகளான மேற்கண்ட காட்டு விலங்குகள் அபரிமிதமாகப் பெருகி வன வளத்தை சீர்கேடு அடையச் செய்து விட்டன. தாவரங்களை இவை அதிகமாக உண்பதால் மழையின்மை, அதிக வெப்பம் ஏற்படுகின்றது. காடுகளில் ஏற்படும் தொடர் உணவுப் பஞ்சத்தால் யானைகள், காட்டு மாடுகள் குரங்குகள் மற்றும் காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இதற்குத் தீர்வு புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதே. புலிகளால் ஏன் அதிகமாகப் பெருக இயலவில்லை? புலிகள் நீர்நிலைகளை அதிகம் விரும்பக் கூடியவை. மேலும் புல்வெளிகளில் அவை பதுங்கி அங்கு நீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாடும். தற்சமயம் புல்வெளிகள் அழிக்கப்பட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் நடபட்டதால் நீர்வளம் மிகவும் குறைந்துவிட்டது ( புலிகளின் உடல் மீதுள்ள கோடுகள் புல்வெளிப் புதர்களில் மறைந்து கொள்ள இயற்கை கொடுத்துள்ள தகவமைப்பு ).

காட்டில் நீர் வளம் குறைவதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு நாட்டுப் புறங்களுக்கு தாவர உண்ணிகள் இடம் பெயறும் போது புலிகளும் இடம் பெயரும் கட்டாயம் ஏற்பட்டு, சில வேளை மனிதர்களும் பலியாகின்றனர்.

இதற்கு முக்கிய தீர்வாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து நடப்பட்ட யூக்கலிப்டஸ் மரங்களை உடனே அகற்ற வேண்டும். மேலும் இறந்த மூங்கில் புதர்களுக்கு மாற்றாக புதிய மூங்கில் காடுகளை உருவாக்க வேணடும்.

குரங்குகளின் எண்ணிக்கையும், புலிகள் சிறுத்தைகளால் அதிகமாகாமல் பராமரிக்கப்படும். புலிகளால் தாக்கப்படும் கால்நடைகளுக்கு ஈடாக அரசு நஷ்டஈடு தர வேண்டும். புலிகளால் கொல்லப்படும் கால்நடைகளின், சடலங்கள் மீது வி­ம் வைத்து புலிகளைக் கொல்வது இதனால் வெகுவாகக் குறையும்.

புலிகள் ஏன் மனிதர்களைத் தாக்குகின்றன? இந்த கொலைகார மிருகத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள், என்பதற்கான பதில் – நிச்சயமாக நல்ல ஆரோக்கியமான புலி மனித மாமிசத்தை விரும்பாது. நமது உடலில் சோடியம் குளோரைடு என்ற சமையல் உப்பை அதிகம் சேர்கின்றோம். காட்டில் உப்புச் சுவை கிடைக்காது இதனால் தாவர உண்ணிகள் உண்ணும் புலி மனிதனை விரும்பாது.

ஆனால் வயதான புலிகள், காயத்தின் காரணமாக வேட்டையாட இயலாத நிலையில் இருக்கும் புலிகள் மனிதன் எளிதான இலக்கு என்பதால் மனிதனை வேட்டையாடுகின்றன. இதில் ஆபத்து என்னவென்றால் மனிதனைக் கொன்று சாப்பிட்ட புலி மீண்டும், மீண்டும் மனிதனைத் தாக்கும். இதை ஆங்கிலத்தில் ‘Man Eater’ என்று அழைப்பார்கள்.

இதற்குத் தீர்வாக வயதான புலிகளைத் தனியாகப் பிடித்து அவைகளைக் காட்டின் ஒரு பகுதியில் வனத்துறை மூலமாகப் பராமரித்து வரலாம். காயம்பட்ட புலிகளைக் கண்காணித்துச் சிகிச்சை அளிக்க IR camera (Infra Red / அகச் சிவப்பு) போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தலாம், இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதியைத் தாராளமாக ஒதுக்க வேண்டும்.

யானைகளால் சேதம் ஏற்படாத வகையில் சூரிய ஒளியால் இயங்கும் ஆழ்துளை கிணறுகள் காடுகளில் அமைத்து நீர்த் தேவையாகக் காட்டு எல்லையை விலங்குகள் கடக்காமல் செய்யலாம்.புலிகள் இவ்வாறு சூழல்இயலைப் பாதுகாக்கின்றன. புலிகளின் எஞ்சிய உணவுகளை நரி, ஓநாய், செந்நாய், கழுகுகள் உண்ணுகின்றன.

புலிகள் இல்லை என்றால் இவற்றிற்குச் சரிவர உணவு கிடைக்காது. மேலும் இவைகள் காடுகளில் தொற்று நோய் பரவாமல் பாதுகாக்கின்றன.
புலிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமானால்?புலிகளில் அபூர்வமாக இனச் சேர்க்கை செய்யக் கூடியவை. தந்தைப் புலிகள் சில வேளை தனது குட்டிகளை உணவுக்காகக் கொல்லக் கூடியவை. இரண்டு சகோதரர்கள், ஒன்றோடு சண்டையிட்டுச் சில வேளை மடிந்து போகும். ஆக மற்ற விலங்குகள் போல இவை பல்கிப் பெருகாது.புலிகளால் நாட்டிற்கு என்ன நன்மை?
புலிகளால் காட்டின் தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு அளவு குறைந்து புவி வெப்பம் குறையும். பருவ மழை நன்கு பெய்யும். எல்லா விலங்குகளின் எண்ணிக்கையும் சமநிலைப்படுத்தப்படுவதால் சூழலியல் பாதுகாக்கப்படும்.

யானைகள், மான்கள், பன்றிகள், குரங்குகள் வேளாண் நிலங்களுக்கு வருவது தடுக்கப்படுவதால் நாட்டின் உற்பத்தி அதிகமாகிப் பொருளாதார நிலை
மேம்பாட்டையும்.சூழல் சீர்கேட்டை நீங்கள் சரி செய்ய நினைத்தால் பாலித்தீன் பொருட்களைக் காட்டில் வீசியெறியாதீர்கள்…

இனி வேளாண்மை,

தோழமைப் பயிர்கள்
இயற்கை வழி வேளாண்மையில் தோழமைப் பயிர்களின் பங்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது. அந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்ற தோழமைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் முக்கிய பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுவதுடன் நல்ல தரமுள்ள விளைச்சலையும் பெறமுடியும். அது மட்டுமின்றி சில தோழமைப் பயிர்களினால் கூடுதல் வருமானமும் ஈட்ட இயலும்.

வாசனைத் திரவியப் பயிர்களான புதினா, பார்ஸ்லி, மார்ஜோரம், பேசில், கேமோமைல், சேஜ், தைம் மற்றும் ரோஸ்மேரி போன்றவை நீலகிரியின் தட்பவெப்பநிலையில் வளரும் முக்கியமான பயிர்களாகும். இந்த வாசனைப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் அப்பயிர்களிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் பூச்சிகள் கவரப்பட்டு வாசனைப் பயிர்களைச் சென்றடைவதால் முக்கிய பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் நறுமண எண்ணெய்கள் இந்தப் பயிர்களில் உள்ளதால் பூஞ்சாணம் தடுப்பாகச் செயல்பட்டு முக்கிய பயிர்களை பூஞ்சாண நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது. காலண்டுலா மற்றும் துலுக்குச் சாமந்திப் பூக்களும் இந்த வகையில் மிகவும் உதவியாக உள்ளன. இச்செடிகள் எளிதாக வளர்வதுடன் பூச்சிக் கட்டுப்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பல வகையான தோழமைப் பயிர்களும் அவற்றின் நன்மைகளும்
1. ஆஞ்சலிக்கா ( Angelica glauca )
இந்த வகையான வாசனைப் பயிரில் உள்ள நறுமணம் பெருமளவு வண்டுகளைக் கவர்ந்து முக்கியப் பயிர்களில் சேதம் ஏற்படுத்துவதைக் தடுக்கிறது.

2. பேசில் (Ocimum basilicum)
பெரும்பாலான முக்கிய பயிர்களில் இவை தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. முக்கியமாக தக்காளி, மிளகு, போன்றவற்றில் தோழமைப் பயிராக பயிரிட்டு பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

3. டில் (Anethum gravealens)
லெட்டூஸ், பூசணி குடும்பத்துப் பயிர்கள் போன்றவற்றில் தோழமைப் பயிராகப் பயிரிட்டு கண்ணாடி இறக்கைப் பூச்சியைக் கவர்ந்திழுத்து மகசூல் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.

4. ஃபீவர் ஃபீயூ (Tanacetum parthinifolium)
இந்தச் செடியைக் கேரட் சாகுபடியில் முக்கிய தோழமைச் செடியாகப் பயிரிடுவதன் மூலம் காரட் வேர் புழுக்களை கவர்ந்திழுத்து காரட் பயிரில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.

5. ஹைசோப் (Hyssopus officinalis)
இந்தப் பயிரை முட்டைக்கோசு தோழமைப் பயிராகப் பயிரிட்டு பூச்சிகளின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.

6. எலுமிச்சைப் புல் (Cymbopogon flexuogus)
பெரும்பாலான காய்கறிப் பயிர்களில் இவை தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. இவற்றிலிருந்து வெளிவரும் நறுமணம் வண்டுகளைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.

7. துலுக்கச் சாமந்தி (Tagetes crecta) மற்றும் காலண்டூலா (Calendula officinalis)
தக்காளி, பேசில், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய் மற்றும் இதர காய்கறிப் பயிர்களில் இவை தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றன. இந்தச் செடியிலிருந்து வரும் நறுமணம் ஈக்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.

8. மார்ஜோரம் (Marjarorm hortensis)
மார்ஜோரம் செடியைத் தோழமைப் பயிராக முக்கிய பயிர்களில் பயிரிடும் பொழுது பயிர்கள் நல்ல வளமுடையதாகவும் நல்ல மணத்துடன் தரமுள்ளதாகவும் அமைகின்றது.

9. நாஸ்ட்ரூடியம் (Tropaeolum majus)
முள்ளங்கி, முட்டைக்கோசு மற்றும் பழமரங்களில் இது தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. அசுவிணி, வண்டுகள், வெள்ளை ஈ போன்றவற்றைக் கவர்ந்து முக்கிய பயிரின் சேதத்தைக் கட்டுப்படுத்துகிறது.

10. பார்ஸ்லி (Petroxelinum crispum)
தக்காளி, அஸ்ப்பராக்ஸ், மக்காச்சோளம் மற்றும் பிற பயிர்களிலும் தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. இதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

11. சேஜ் (Salvia officinalis)
காரட், பட்டாணி, பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் ரோஸ்மேரி போன்றவற்றில் இவை முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. சேஜ் நறுமணப் பயிரில் உள்ள நறுமணம் வண்டுகளைக் கவர்வதுடன் வைரமுதுகு அந்தப்பூச்சியை விரட்டும் தன்மையையும் கொண்டது.

12. தைம் (Thymus vufgaris)
முட்டைக்கோசு, பூக்கோசு மற்றும் கிளைக்கோசு போன்ற பயிரில் தைம் தோழமைப் பயிராக பயிரிடுவதன் மூலம் முட்டைக் கோசு வேர் ஈ மற்றும் முட்டைக் கோசு வைரமுதுகு அந்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

13. ஆர்டிமீசியா (Artemixia nilagirica)
ஆர்டிமிசியா, காரட் பயிரில் முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிட்டு காரட் வேர் புழுக்களைக் கவர்ந்து காரட் பயிரில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துகிறது.

14. அஸ்பராகஸ் (Asparagus officinalis)
தக்காளி, பேசில் மற்றும் பார்ஸ்லி போன்றவற்றில் இவை முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது.

15. டான்சி (Tanacetum vulgare)
திராட்சை, ரோஜா போன்றவற்றில் இவை முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிடப்படுவதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது.

16. சைவ்ஸ் (Allium schoenoprasum)
காரட் பயிரில் முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. வண்டுகள் மற்றும் ஈக்களைச் சைவ்ஸ் செடி கவர்ந்து காரட்டில் ஏற்படும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துகிறது.

17. காட்மிண்ட் (Nepeta cataria)
இவை பூக்கோசு மற்றும் கிளைக்கோஸ் பயிரில் தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது. இந்த வகையான நறுமணப் பயிரைப் பயிரிடுவதன் மூலம் முட்டைக்கோசுப் பயிரைத் தாக்கும் பூச்சி வகைகள், அசுவிணி, வண்டுகள், எறும்புகள் மற்றும் கூன்வண்டுகள் போன்றவற்றை விரட்டும் நறுமணத் தன்மையை இது பெற்றுள்ளது.

18. போரேஜ் (Borago officinalis)
ஸ்டராபெரி சாகுபடியில் இது முக்கிய தோழமைப் பயிராகப் பயிரிடப் படுகின்றது. இது வண்டுகள் மற்றும் குளவிகளைத் தாக்கும் தன்மை உடையதாக உள்ளது. செடிகள் பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்டவையாக அமைகின்றன.

19. பூண்டு
ஆப்பிள், ரோஜா மற்றும் பீச் மரங்களில்
தோழமைப் பயிராகப் பயிரிடப்படுகின்றது.

20. கேமோமில்
முட்டைக்கோஸ், புதினா

21. குதிரை முள்ளங்கி
கோதுமை

22. லீக்
காரட் மற்றும் செலரி

23. லெட்டூஸ்
காரட், வெங்காயம், ஸ்ட்ராபெரி, பீட்ரூட்

24. பீன்ஸ்
காரட், முட்டைக்கோஸ், லெட்டூஸ், பட்டாணி, பார்ஸ்லி, பூக்கோசு.

மற்ற தோழமைப் பயிர்கள்

முட்டைக்கோசு பயிரில் முள்ளங்கியைத் தோழமைப் பயிராகப் பயிரிட்டு குறைந்த வயதுடைய முள்ளங்கிப் பயிரை முதலில் அறுவடை செய்து அதிக இலாபம் பெறலாம்.

தக்காளி முக்கிய பயிராக 75 முதல் 90 செ.மீ. இடைவெளியில் பயிரிடும் பொழுது இடையிடையே முள்ளங்கி மற்றும் லெட்டூஸ் பயிரைச் சாகுபடி செய்து 50ஆவது நாளில் முள்ளங்கியையும் 80 முதல் 85 ஆவது நாளில் லெட்டூஸ் பயிரையும் அறுவடை செய்து 150 நாட்கள் வளரக்கூடிய தக்காளிப் பயிரில் தோழமைப் பயிர்களை பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம்.

காரட்டை முக்கியப் பயிராக சாகுபடி செய்யும் பொழுது பட்டாணிப் பயிரைத் தோழமைப் பயிராகப் பயிரிடுவதன் மூலம் 45 நாட்கள் வரை காரட் பயிர் தாமதமான வளர்ச்சி அடையும் காலத்தில் குறுகிய வயது பட்டாணி வகைகளைப் பயிரிடுவதன் மூலம் 55 முதல் 60 நாட்களுக்குள் பட்டாணியில் முதல் அறுவடையும் 85 நாட்களுக்குள் முழுவதுமான அறுவடையும் பெற்றவுடன் பட்டாணிச் செடியினை அப்புறப்படுத்தி கொத்தி விடுவதன் மூலம் காரட் பயிர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து 130 முதல் 135 நாட்களுக்குள் நல்ல மகசூல் பெறலாம்.

பாலக் கீரைப் பயிரைத் தக்காளி பயிர்களுக்கு இடையில் தோழமைப் பயிராக பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம்.

காரட் பயிருக்கு இடையே கீரையைப் பயிரிடும் பொழுது, 50 நாட்களுக்குள் கீரையை அறுவடை செய்யலாம். இதனால் காரட் பயிரில் களைகள் வளர்வது தடுக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

நாஸ்டெர்டியம் ஒரு முக்கிய தோழமைப் பயிராக விளங்குகிறது. இந்த தாவரம் அசுவிணி, வண்டுகள், வெள்ளை ஈ மற்றும் முட்டைக்கோசு தாக்கும் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து கருப்பு அசுவினி போன்றவற்றையும் கவர்ந்து தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது.

கொத்தமல்லி குடும்பத்து தாவரங்களான கொத்தமல்லி, வெந்தயம், சோம்பு, சீரகம், காரட், செலரி மற்றும் பார்ஸ்லி போன்ற செடிகளின் பூக்கள் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழும் பூச்சிகளைக் கவரக் கூடியதாக உள்ளன.

தோழமை அல்லாத பயிர்கள்
இயற்கை வழி வேளாண்மையில் தோழமைப் பயிர்களால் எவ்வாறு நன்மை ஏற்படுகிறதோ அதைப்போலவே தோழமை அல்லாத பயிர்களைப் பயிர்செய்யும் போது இரண்டு பயிர்களுக்கிடையே ஊட்டச்சத்து பகிர்வதில் கடுமையான போட்டி நிலவுகிறது. மேலும் இப்பயிர்களின் வேர் அமைப்பு ஒன்றிற்கொன்று ஒத்துப்போவதில்லை. எனவே மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே பயிர் செய்யும் போது இவற்றையும் கவனத்தில் கொண்டு பயிர் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

1. ஆப்பிள் – உருளைக்கிழங்கு, புல்
2. பீன்ஸ் – வெங்காயம், கோல் ராபி, கிளாடியோளை
3. பீட்ரூட் – டால் பீன்ஸ்
4. பரக்கோலி – ஸ்ட்ராபெரி
5. முட்டைக்கோஸ் – ரூ. ஸ்ட்ராபெரி, தக்காளி, பூண்டு
6. பூக்கோசு – ஸ்ட்ராபெரி
7. பூண்டு – பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெரி
8. கிளாடியோளை – அனைத்துக் காய்கறிகள்
9.நூல் கோல் – தக்காளி, பீன்ஸ், சோம்பு, ஸ்ட்ராபெரி
10. புதினா – பார்ஸ்லி
11. சேஜ் – ரூ
12. பேரிக்காய் – புல்
13. பட்டாணி – வெங்காயம்
14. உருளைக்கிழங்கு – ரோஸ்மேரி, ஆப்பிள், தக்காளி, சூரியகாந்தி

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892

இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →