கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை…….

forestமேற்குத் தொடர்ச்சி மலை என்பது மூன்று பிரிவுகளாக உள்ளது. ஒன்று நீலகிரி மலை, இரண்டாவது ஆனைமலை மற்றும் மூன்றாவது பழனி மலை.

    இதில், நீலகிரி மலை மிக முக்கியமானது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கோவை மாவட்ட கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லீவன், தற்போதய நீலகிரி மாவட்டத் தலைநகரமாக இருக்கக் கூடிய ஊட்டியை வந்தடைந்தார்.

    அந்த காலகட்டத்தில் தோடர் என்கிற பழங்குடியினர் தற்போதய ஊட்டி என்கிற இடத்தில் குடியிருந்தனர். அவர்கள் குடியிருப்பு மந்து என்று அழைக்கப்படும். கலெக்டர் திரு. ஜான் சல்லீவன் இந்த இடத்தை அடைந்து இடத்தின் பெயரை வினாவிய போது தோடர்கள் ஒற்றைக் கல் மந்து எனக் கூறினார்.

    இதனை, கலெக்டர் ஒட்டகமந்து (UDHAGAMUND) என்று உச்சரித்தார். பின்னாளில் இதுவே ஊட்டி என்று பெயர் பெற்றது. அந்தப் பகுதியில் நீலக் குறிஞ்சி மலர், மலை எங்கும் பூத்து நீலநிறமாகக் காட்சி அளித்தது. ஆங்கிலேயர்கள் இதனை, ஆங்கிலத்தில் யயிற்e னிலிற்ஐமிழிஷ்ஐ என்றும் தமிழில் நீலகிரி என்றும் அழைத்தனர்.

    நீலகிரியின் ஆதிமலர் குறிஞ்சி.

    பாலக்காடு கணவாய்க்குத் தெற்கே ஆனை மலை. கீழ்ப் பழனி மலைத் தொடர்களின் கொடைக்கானல் பகுதியும், மூணாறு பகுதியும் உள்ளன.

    இந்த மூன்று மலைப் பகுதியும் சுமார் 1500 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உயரமானவை (MSL – Mean Sea Level). இந்தப் பகுதியைச் (Shola Forest) சோலைக் காடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன.

    இந்தச் சோலைக் காடுகள் என்பன 10 – 15 மீட்டர் உயரமுள்ள சிறு குறு மரங்களையும், அதிகமான கொடி வகைகளையும், புதர்ச் செடிகளையும் உள்ளடக்கும். இந்த சோலைக் காடுகள் வளமையின் அடையாளம்.

    இந்த சோலைக் காடுகளில் இரண்டு மலைகளின் நீரோடைகள் சந்திக்கும் இடத்தில் சிறு சிறு சதுப்பு நிலப் பகுதிகள் இயற்கையாகவே உருவாகின்றன. இந்தச் சதுப்பு நிலப் பகுதிகளை MYRISTICA SWAMPS என்றழைப்பார்கள். இந்தச் சதுப்பு நிலங்கள் இயற்கை நீர்த் தேக்கத் தொட்டிகள்.

    ஆங்கிலேயர் காலத்தில் அனேக இடங்களில் நீர் ஊற்று அதிகமாக இருந்தது. கட்டடம் கட்டுவதற்கு இடையூராக இருந்தமையால் யூக்கலிப்டஸ் நடப்பட்டது. இதன் காரணமாகச் சதுப்பு நிலங்கள் மறைந்து போயின.

    இந்தச் சதுப்பு நிலங்கள் அதிக மழை பெய்யும் காலங்களில் நீரைத் தேக்கி வைத்து மற்ற காலங்களில் ஆறுகளுக்கே தேவையான அளவு நீரை அளித்து வந்தன.

    இந்தச் சதுப்பு நிலங்களில் வளரக் கூடிய தாவரங்கள் கோடை காலத்தில் நிலத்தின் ஈரத்தன்மையைப் பராமரித்து இயற்கைச் சம நிலையை உருவாக்கின.

    இந்தச் சதுப்பு நிலத்தாவரங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவைஅல்ல. உதாரணமாக: மரச்சாமான்கள், எரிபொருள்… போன்ற எந்தப் பயன் பாட்டிற்கும் உகதந்தவையல்ல.

    இதனால், வருவாயை ஈட்டித்தரக்கூடிய யூகலிப்டஸ், காபி, தேயிலை… போன்ற தாவரங்களை வளர்த்து, சதுப்பு நிலக்காடுகள் சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று நீலகிரியில் MYRISTICA SWAMPS அழியும் நிலையில் உள்ளது.

    இதன் காரணமாக, ஒன்று அதிகமான வறட்சி ஏற்படுகிறது அல்லது அதிகமாக மழை பெய்கிறது. அதிகமான மழை பெய்யும் பொழுது இந்த இயற்கை நீர்த் தொட்டிகள் இல்லாமையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவும், வளமான மேல் மண் அரிப்பும் ஏற்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை தனதுப் பொலிவை இழந்து வருகின்றது.

    இந்தச் சதுப்பு நிலங்களில் வாழக்கூடிய வாத்து மற்றும் நீர் நாய் போன்றவைகள் அழியும் நிலையில் உள்ளன.

    இதற்குத் தீர்வாக அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏற்கனவே அழிக்கப்பட்ட MYRISTICA SWAMPS என்கிற சதுப்பு நிலப் பகுதிகளை மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரித்தான சொந்தத் தாவரங்களை கொண்டு உருவாக்க வேண்டும்.

    அப்படி உருவாக்கினால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகக் கூடிய ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் மண் சேர்வது குறைக்கப்பட்டு நிச்சயமாக ஆறுகளில் நீர் மட்டம் வருடம் முழுவதும் சீராக இருக்கும். தென் இந்திய தீப கற்பம் வளம் பெரும்.

இனி வேளாண்மை,

    வாழை என்பது ஆசியாக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்டது. வாழைப் பழம், தோலை உரித்துச் சாப்பிடுவதால் சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது.

    உலகிலேயே இந்தியா தான் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. வாழையில் முக்கியமாகப் பயிரிடப்படக் கூடிய ரகம் ரஸ்தாளி, பூவன், கதளி, செவ்வாழை, கற்பூரவள்ளி, G9 மற்றும் நேந்திரன்.

    மேற்கண்ட ரகங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன.

    கதளி மிகவும் சுவையான பழம், தற்போது தமிழகத்தில் விவசாயிகள் கதளிப் பயிர் செய்ய அஞ்சும் நிலை ஏற்பட்டு கதளி அழியும் நிலையில் உள்ளது.

    கதளி, Rhizome என்கிற அங்கக கரிமம் அதிகம் உள்ள நிலைங்களில் மிக நன்றாக வளரும்.

    இப்பயிரில் மிக அதிகமான இரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ, பூஞ்சாணங்களையோ இட்டால் நோய் தாக்குதல் அதிகமாகின்றன.

    எர்வீனியா, முடி கொத்து நோய், பனாமா வாடல் நோய், நூற் புழுத் தாக்குதல் போன்றவை அதிகமாக தாக்கும்.

    கதளி – நெய்ப் பூவன், நாளி பூவன் போன்ற பெயர்களில் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றது. G9 வாழையைப் போல் கதளியில் திசு வாழை அவ்வளவாக கிடைக்காத காரணத்தால் கதளியில் பயிர்ப் பெருக்கம் வேர்த் தண்டு (Rhizome) மூலமாகவே நடைபெறுகிறது.

    இதனால், தண்டழுகல், முடிக்கொத்து (virus) நோய், எர்வீனியா வாடல் நோய் போன்ற நோய்கள் வேர்த் தண்டுகள் மூலமாக எளிதாகப் பரவுகின்றன.

    முடிந்த வரை நோய் தாக்காதப் பண்ணைகளில் இருந்து எடுத்து பயன் படுத்த வேண்டும். நடவு செய்யும் போது சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலோமைசீஸ்… போன்ற எதிர் நுண்ணுயிர்களைத் தேவையான அளவு அங்ககக் கரிமத்துடன் இணைத்து பயன்படுத்தினால் மேற் கண்ட நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி நோய்களில் இருந்து காப்பாற்றும்.

    தமிழ் நாட்டில் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து எளிதில் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதற்கு நுண்ணுயிர்களைப் பயன்படுத்த, எளிதில் கரையும் நிலைக்கு மாற்றி பயிருக்கு ஊட்டச்சத்து அதிகம் கிடைப்பதோடு நோய் எதிர்ப்புத்திறனும் கூடும்.

    இலைப் புள்ளி நோய் (Sigatoka Disease), பனாமா வாடல் நோய் (Panama Wilt), போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே இயற்கைப் பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

    கதளிப் பயிர் செய்வதற்கு முன்னால் சணப்பு, தக்கைப் பூண்டு… போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து அவை வளர்ந்த பின் மடக்கி உழுதால் நோய் தாக்குதல் மிகவும் குறைவாக இருக்கிறது.

    பக்கக் கன்றுகள் தோன்றும் / அறுக்கும் போது சுத்தமான உபகரணங்கள் கொண்டு (அறிவாள்) அகற்ற வேண்டும்.

    வாடல் நோய் ஏற்பட்டால், அந்த மரத்தைத் தனிமைப் படுத்த வேண்டும். அதாவது தண்ணீர் பாய்ச்சும் போது பாதிக்கப்பட்ட வாழையில் இருந்து மற்ற மரங்களுக்குச் செல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

    சருகு நோய் என்று சொல்லக் கூடிய இலைகளின் ஓரங்களில் ஏற்படும் கருகல் சாதாரணமாகப் பொட்டாஷ் பற்றாக்குறையால் ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், நூற்புழுவால் தாக்கப்பட்டு, திறன் குறைந்த கதளியின் வாழையில் வேர்களால் குலை ஈன்ற பின்பு தேவைப்படும் அதிகமான சாம்பல் சத்தை உறிஞ்ச இயலாமையால் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும், இந்தக் காய்ந்த இலையின் ஓரங்களில் சில தேவையற்ற பூஞ்சாணங்கள் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதற்கு ஆரம்ப நிலையிலேயே நூற்புழு கட்டுப்படுத்துவது அவசியம்.

    குலைகள் ஈன்று காய்கள் உருவான பின்பு தாமதிக்காமல் வாழைப் பூக்களை அகற்றுவது விளைச்சலைக் கூட்டும்.
மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892.
இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →