கொஞ்சம் வேளாண்மை கொஞ்சம் சுற்றுப்புறச்சூலழ்

paபழங்குடியினரும் வனமும்.

நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்பு தான் வனத்துறையினர் செயல் வடிவம் பெற்று வனத்தைச் சிறப்பாகப் பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக வனத்தை உண்மையாகப் பாதுகாத்து வருகிறவர்கள் அவ்வனத்தின் சொந்த மக்களான ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் என்பவர்களாவார்கள்.

வனத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், பழங்குடிகளைப் பாதுகாப்பது முக்கியம். வனத்துறை தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் தோல்வியில் முடிந்துள்ளன. உதாரணமாக: யூக்கலிப்டஸ் போன்ற மரங்களை வனப்பகுதியில் நட்டதன் விளைவை இன்று சமூகம் அனுபவித்து கொண்டிருக்கிறது.

ஆகவே, மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை உள்ளடக்கிய குழு மூலமாகக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

மெத்தப் படித்த சமூகம் படிக்காத எளிய ஆனால் காடுகளைப் பற்றி அதிக அனுபவ அறிவைக் கொண்ட பழங்குடியினரிடம் கலந்து ஆலோசித்து, காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னார் சரணாலயத்தில் முதுவர் என்ற இனப் பழங்குடியினரும், நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் போன்றவற்றில் உள்ளுர் பழங்குடியினருக்கும் அதிக வேலை வாய்ப்பை வனத்துறை வழங்கியதன் காரணமாக, மிக மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

நகர்ப்புற வணிக நிறுவனங்கள் பழங்குடி மக்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்ய உதவ வேண்டும். அரசு அன்னிய தாவரங்களான லெண்டானா கேமரா போன்றவற்றை இவர்களைக் கொண்டு அகற்ற வேண்டும்.

இனி வேளாண்மை,

விவசாயத்தில் இடுபொருட்களின் செலவு நாளுக்கு நாள் அதிகமாவதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணில் ஏற்பட்டுள்ள பெளதீக இரசாயன மாற்றங்களும் ஒன்றாகும்.

பயிரைப் பற்றிக் கவலைபடும் நாம் மண்ணைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

தற்சமயம் கால்நடைகளின் எண்ணிக்கைக் குறைவால் தொழு உரம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் மண்ணின் உயிரியல் செயல்பாடுகள் குறைவதால் மண்வளம் கவலை கொள்ளும் அளவில் உள்ளது.

இரசாயனப் பூஞ்சாணக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் செயற்கையாகச் சில தனிமங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக: ஒரு குறிப்பிட்ட பூஞ்சாணக் கொல்லி தாமிரத்தை அடிப்படையாக கொண்டிருந்தால் பயிரின் வினையியலுக்குத் தேவையான தாமிரம் கிடைக்காமையால் பூஞ்சாணங்கள் தாக்குகின்றன.

அந்தத் தாவரத்தைப் பயிரிடும் போதே, அடியுரமாகக் கொடுப்பதால் பயிரில் மேற்கண்ட பூஞ்சாணத்திற்கு எதிர்ப்பைப் பயிரே தயாரித்துக் கொள்ளும்.  இதற்கு மண்ணின் கார அமில நிலையைப் பராமரிப்பதோடு நுண்ணுட்டங்களைச் சரிவரக் கொடுக்க வேண்டும்.

எந்தச் சத்தும் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் பயிரின் வினையியல் (Plant Physiology) பாதிக்கப்படும். இதனால் பூஞ்சாண மற்றும் பூச்சித் தாக்குதல் அதிகமாகும்.

உதாரணமாக: மண்ணில் பாஸ்பரஸ் அதிகமானால் (கரையாத நிலையில்) இது தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகத்தை ஈர்த்துக் கொண்டு, பயிரில் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதனால் பயிரின் வினையியல் செயல்பாடு பாதிக்கப்பட்டு எளிதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதலுக்கு ஆளாகிறது.

இதற்குக் காரணமான அடிப்படைச் செயல்பாடான பாஸ்பரஸைக் கரைக்க, பாஸ்போ பேக்டீரியாவைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வைத் தரும்.
மாறாகத் தாமிரம், இரும்பு, துத்தநாகத்தைப் பயிருக்கு அளிப்பதும் மேற்கண்ட தனிமங்களால் தயாரிக்கப்பட்ட பூச்சி, பூஞ்சாண கொல்லிகளும் தற்காலிகத் தீர்வையே தரும்.

இதற்கு அடிப்படை மண் பரிசோதனையாகும், இதன் மூலம் என்ன நோய் வரும் என்பதைக் கூட யூகிக்கலாம். வேளாண்மையில் உண்மையான விஞ்ஞானிகள் விவசாயிகள் தாம்.

ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தின் மண்ணைப் பற்றித் தெரிந்து வைக்க வேண்டும். மண்ணிலுள்ள மணல் களி துகள்களின் அளவை வைத்துக் கொண்டு குளத்து அல்லது அணை வண்டல் இடலாமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். இதை மண் பரிசோதனை மூலமே அறிய முடியும்.

களைகளைத் தோட்டங்களுக்கு எருவாகப் பயன்படுத்த வேண்டும்.

Fusarium, Pythium, Phytophthora,Alternaria போன்ற கணக்கற்ற தீங்கு செய்யும் பூஞ்சைகள் சரியாகக் கார அமில நிலை, அங்கக கரிமம், நுண்ணுVட்டச் சத்துக்கள், இரண்டாம் நிலைச் சத்துக்கள் மற்றும் பேரூட்டங்கள் பராமரிக்கப்பட்ட நிலங்களில் 50% தாக்குவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் பாஸ்பரஸ் சத்து சரியான அளவில் தாவர திசுக்களுக்குக் கிடைக்கும் போது நார்ச்சத்து அதிகமாகி (Fiber), தாவரத் திசுக்கள் கடினமாகிவிடுவதால், பூச்சித் தாக்குதல் பெருமளவு குறையும்.

ஒரே குறிப்பிட்ட பயிரைப் பயிரிடும் போது, குறிப்பிட்ட சத்தை பயிர் தொடர்ந்து எடுப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் வினையியல் பாதிக்கப்படும். இதைச் சரி செய்யப் பயிர் சுழற்சி அவசியம்.

இருவகை அறிவு உலகில் உண்டு. ஒன்று அனுபவ அறிவு; மற்றொன்று படிப்பறிவு. இவை இரண்டும் தனித்தனியாகச் செயல்பட்டால் தோல்வி உறுதி. ஆகவே, வேளாண்மையில் அனுபவம் மற்றும் அறிவியல் அறிவைச் சேர்த்துப் பயன்படுத்தினால் வெற்றி உறுதி.

மேலும் தொடர்புக்கு,
திரு. மரியா ப்ரான்சிஸ்
94884 85892.
இன்னும் கொஞ்சம் உண்டு…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →