கோவை சாந்தி கியர்ஸ்

shanthi_gears“சென்னையைச் சார்ந்த டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் கோவையில் உள்ள சாந்தி கியர்ஸ்

நிறுவனப் பங்குகளை 28.5 மடங்கு (ரூ. 81/பங்குக்கு) கொடுத்து 44.12% உரிமத்தைத் தன்

வசப்படுத்தி உள்ளது. இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ. 292 கோடி.”

சாந்தி கியர்ஸ் எனும் நிறுவனம் 1969 ஆம் வருடம் திரு. ட. சுப்ரமணியம் என்பவரால் நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலையில் கியர், பியர்பாக்ஸ், கியரால் இயங்கும் கருவிகள் மற்றும் அதைச்சார்ந்த பாகங்களை 40 வருடத்திற்கு மேல் வடிவமைத்து மற்றும் தயாரித்து வழங்கி வருகிறது. திரு. ட. சுப்ரமணியம் என்பவர் PSG பாலிடெக்னிக்கில் ஆசிரியர் (Instructor) பணியில் ஒரு சில காலம் தன் ஆரம்ப காலத்தைக் கழித்தார். அவருடைய கனவே ஒரு பணிமனை அமைத்துத் தொழில் புரிய வேண்டும் என்பது தான். அதை 1969-ம் வருடம் நனவாக்கினார் 1972ல் இதனை லிமிடெட் கம்பெனியாக அங்கீகரிக்கப்பட்டது.

அவர் தொழில் வளர்ச்சி காரணமாக வெளிநாடு சென்றபோதெல்லாம் புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்தார். அதன் மூலம் வெளிநாட்டில் சாந்தி கியர்ஸ் என்றபெயருக்கு மிக உயர்ந்த அந்தஸ்தும் மரியாதையும் தன் வேலைப்பாட்டினால் பெற்றுத்தந்தார். இவ்வாறான வளர்ச்சிப் பாதையில் ஆரம்பமானது இந்நிறுவனம்.

வாடிக்கையாளர்கள் :

L&T,  BHEL,  Acc Cement,  இந்தியன் ரெயில்வே, டாடா ஸ்டீல், JSW,  LANCO,  ATLAS, Copco, India Cements , BEML.

தொழில் நோக்கம் :

வாடிக்கயாளர்களின் தேவைக்கேற்ப கியர் மற்றும் கியர் சார்ந்த பொருட்களைத் தயாரித்து வழங்கி இக்கருவிகளை மின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புச் செய்யும் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு இப்போது உள்ள பொருளாதார மந்த நிலை மற்றும் கருவிகளைத் தயாரிப்பதால், அதை நாடி வரும் வாடிக்கையாளர்களைப் பெரும்பாலும் நம்பி உள்ளது. தற்போது மின் பற்றாக்குறை, அதிகப் பண வீக்கம், திறன்மிக்கப் பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவை இந்நிறுவனத்திற்குத் தற்காலிகச் சவால்களாகும்.

சாந்தி கியர்ஸ்சில் ட்யூப் இன்வெஸ்மெண்ட்ஸ்சின் முதலீடு.

இந்தப் பங்குக் கொள்முதலின் மூலம் சென்னையைச் சார்ந்த முருகப்பா குரூப் கம்பெனியான பன்க்ஷங் ஐய்ஸ்ங்ள்ற்ம்ங்ய்ற் சாந்தி கியர்ஸ் சேர்மேன்

திரு. P. சுப்ரமணியத்தின் (ரூ. 1)  பங்குகளை 81 ரூபாய்க்கு வெளிச் சந்தையில் விற்று மேலும் 26% தன்னகப்படுத்த உள்ளது. இதனால் இந்த Tube Investment முதலீடு மொத்தத்தில் 464 கோடி ஆகும். இந்த நிறுவனம் சாந்தி கியர்ஸ் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கூடிய விரைவில் அதிக லாபம் ஈட்ட ஏதுவாக அமையும் என்று அந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் திரு. க. ராம்குமார் கூறி உள்ளார்.  சாந்தி கியர்ஸ் ஒரு கடனில்ல ஸ்தாபனம்  மட்டுமல்லாமல் கையில் பண இருப்பு மட்டும் ரூ. 65 -70 கோடியாக வைத்துள்ளது. Tube Investment நிறுவனம் இதற்கு மதிப்பைக் கூடுதலாக உயர்த்தி விலையில் கொடுத்துள்ளது. திரு. ட. சுப்ரமணியம் இதனை அடுத்து முழுநேரச் சமுகப் பணியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். ஆர்வமுள்ள முதலீட்டார்கள் இந்நிறுவன பங்குகளை நீண்டகால முதலீடாக கருதி பங்குகளை வாங்கி பயனடையலாம்.