சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016

k03rzw8uஇந்திய நாடாளுமன்றம் இயற்றிய “122ஆம் அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்” விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அரசிதழில் (Govt. of India Official gazette) விரைவில் வெளியிடப்படும்.  அதன் பின்னர் எதிர்வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் (Oct – Nov) இயற்றப்பட வேண்டிய விதிமுறைகள் & சட்டங்கள் வருமாறு.

1. மைய சரக்கு & சேவை வரிச்சட்டம் 2016 (Central GST Act 2016016)

2. இடைமாநில சரக்கு & சேவை வரிச்சட்டம் 2016 (Interstate or Intergrated GST ACT   2016)

3. சட்டங்களை நடைமுறைப்படுத்த விதிமுறைகள்

ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கான சரக்கு & சேவை வரிகளுக்கான தனித்தனி சட்டங்களை இயற்றி அந்த சட்டத்தை நெறிப்படுத்த நடைமுறை & விதிமுறைகளை 31.12.2016 க்குள் கெசட் மூலம் வெளியிட வேண்டும்.

31.12.2016 முதல் 31.03.2017 வரையிலான காலம் மிகவும் குறைவானது.  அதற்குள்

1. இந்தச் சட்டங்கள் எப்படி நாட்டுக்கு நல்லது, பொருளாதார சந்தைக்கு எவ்வளவு ஆதரவானது,   நாடு தழுவிய அளவில் சட்டம் எப்படி சீரானது, தேசிய சந்தை எவ்வாறு நலம் பயக்கும் என்பது போன்ற நல்ல கருத்துக்களை மக்களிடையே பரப்ப வேண்டும்.

2. குறிப்பாக வணிகர்கள், ஆடிட்டர்கள், தொழில் துறை கேப்டன்கள் (Captains of Industry. Trade and commerce) மற்றும் அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சிகளை வழங்க வேண்டும்.

3. தகவல் தொழில்நுட்பம் (Information Technology) ஏற்பாடுகள், நெட்ஒர்க் திட்டம் ஆயத்தப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

a. புதிய சட்டத்தினால் மக்களுக்கு வரிச்சுமை குறைக்கப்படும்.

b. இதனால் அகில பாரத அளவில் பொருள் விற்பனைச் சந்தை ஒருமுகம் ஆக்கப்படும் (Single All India market)

c. இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு அதிகமாகும்.

d. ஏற்றுமதியினால் நாட்டின் பணவீக்கம் குறையும்.

“”இந்த நான்கு காரணங்களின் அடிப்படையில் GST நிர்வாகம் செம்மைப்படும் வரிக் குறைவினால் வரிமறைப்பு குறையும்”   – அருண் ஜெட்லி.

2006 முதல் இன்று வரை மைய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சி & கருத்து ஒற்றுமை காரணமாக றூறீவீ சட்டம் 01.04.2017 அன்று நடைமுறைப்படுத்தப்படலாம் என நிதி அமைச்சர் கூறுகிறார்.  இது கூட்டு முயற்சிக்கான மாபெரும் வெற்றி.  திரு.ப.சிதம்பரம், திரு.பிரணவ முகர்ஜி மற்றும் திரு.ஜெய்ட்லி போன்ற நிதியமைச்சர்களின் முயற்சிகளை நாம் பாராட்டுவோம்.

அடுத்து என்ன?

GST க்கு உட்படாத வரிகள் யாவை?

பெட்ரோலியம் மூலம் கிடைக்கும்
 1. கச்சா ஆயில்
2.பெட்ரோல்
 3. உயர்வேக டீசல் ஆயில்
4. இயற்கை எரி வாயு
5.  Aviation Turbine fuel
டர்பன் (விமான எரிபொருள்)
 6. முனிசிபாலிட்டிகள் விதிக்கும் கேளிக்கை வரி,
விளையாட்டு வரிகள்
 7. சொத்து வரிகள், ஸ்டாம்ப் வரிகள் முதலானவைகள்    

GST கவுன்சில் (மையநிதி அமைச்சர் தலைவர்/மாநில நிதி அமைச்சர்கள் குழு) அரசியல் சாசன 122 திருத்த சட்டத்தின்படி பொதுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  இதனை மத்திய அரசு உடனடியாய் நியமனம் செய்து கெசட் அறிவிப்பு வேண்டும்.  இந்த ஆலோசனை மன்றம் செய்ய வேண்டிய உடனடி தேவைகள்
என்ன என்ன வரிகள் இணைக்கப்பட வேண்டும்    

( GST) வரி விகித விபரம்

GST – யில் வரி விலக்கு இனம் போன்ற விபரங்களைத் தீர்மானிக்க வேண்டும்.
பெட்ரோலியம் மீது GSTவரி இப்போது இல்லை.  ஆனால் பின்னர் நடைமுறைக்கு வரும்.எந்தத் தொகை வரை வரி விதிப்பு இல்லை என்பது போன்ற விவரங்கள் இந்த GST பொதுக்குழுவில் முடிவு எடுத்து மைய & மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்படும்.

குறிப்பு

தேசிய இடர்ப்பாடு போன்ற காலங்களில் புதிய வரிகளை விதிக்க இந்த றூறீவீ மாற்றம் முடிவு எடுக்கலாம்.

மாதிரி GST சட்டம் (Central GST & State GST பொது)

16.06.2016 அன்று“ மாடல்  GST சட்டம்” ஒன்றினை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி முக்கிய சட்ட குறிப்புகள்.

(A) 178 பிரிவுகள், (B) 27 தலைப்புகள்,(C)4 அட்டவணைஇணைப்புகள் உள்ளன.

வரி செலுத்த வேண்டியவர் யார் ? Taxable person

வரிக்குட்பட்ட சேவைகளையும், பொருள்களையும் சப்ளை செய்யும் நபரே வரி செலுத்துபவர்

ஆண்டு சப்ளை & சேவைத் தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலே இருப்பின் மட்டுமே வரி செலுத்தலாம்.

ரூ.10 லட்சத்திற்குள்  இருப்பின் வரி இல்லை.

இடைமாநில  GST / Interstate GST

இதில் 33 சட்ட பிரிவுகள் 11 தலைப்புகள் உள்ளன.

டெலிவரி எந்த இடத்தில் முடிவு லிr நிறைவு பெறுகிறதோ அந்த இடம் சப்ளை இடமாகும்.

GST சட்டத்தில் சில முக்கிய விவரம்

இதில் சொத்துக்கள், (property, immovable) உணவகம்,catering பயிற்சிகள் அமைப்புகள், கலை, கல்வி, விஞ்ஞான தொடர்பான கருத்தரங்க நிகழ்ச்சிகள், புத்தகக் காட்சி, கேளிக்கை விழாச் சந்தை, சரக்குப் போக்குவரத்து, பயணிகள் சுமந்து செல்லும் பேருந்துப் பயணச்சேவைகள், வங்கிப் பணிகள், விளம்பரச் சேவை, மற்றும் நிதி தொடர்பாகச் ய்ஷ்ஐழிஐஉஷ்ழியி சேவைகள் மீது உரிய விதிமுறைகள் உள்ளன.

ITC உள்ளீட்டு வரி வரவு CGST – SGST – IGST

VAT சட்டத்தில் உள்ளபடி ITC தொகையை சரி செய்தல் போன்ற நல்ல அம்சங்கள் இந்த மூன்று சட்டங்களில் உள்ளன.

இதனை நடைமுறைப்படுத்த சட்டத்தில் மைய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

IGST சட்டத்தில் பெறப்படும்  ITC தொகைகளை மைய GST சட்ட வரிகளுக்கு மாற்றப்பட்டுப் பயன்படுத்தலாம்

IGST சட்டத்தில் உள்ள ITC தொகைகளை மாநில GSTசட்ட வரிகளுக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படும்.  இது மைய அரசு கடமையாகும்.

இந்த மூன்ற GST சட்டத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல்களைத்  தீர்க்கத் தனியே ஒரு“ பூசல் தீர்வு மையம்”Dispute Resolution Mechanism அமைத்து வணிகர்கள் எளிதாக வணிகம் மேற்கொள்ள வழி செய்யப்படும்.
                          
பதிவு

ஆன்லைன் பதிவு மூலம் பதிவு செய்து 3 நாளுக்குள் RC பெறலாம்.

ஆண்டு சப்ளை / சேவை ரூ.9 லட்சத்திற்கு மேல் இருப்பின் பதிவு செய்யலாம்.  அல்லது முன்னதாக
RC பெறலாம்.

வணிகர்கள் ரிட்டன் & வரி செலுத்துவது எளிது (Self – assmt..) எனவே இது சுய வரிவிதிப்பு முறை ஆகும்.

வரி/ரிட்டன் தாக்கல் எல்லாம் இண்டர்நெட் பாங்கிங் & electronic method ஆவதால் அனைத்தும் எளிதாகி விடும்.

ரிட்டனில் தவறுகள் இருப்பின் உரிய நாளுக்குள் திருத்திய படிவம் சம்ர்ப்பிக்கலாம்.  (Self – rectified) இதனை வரவேற்போம்.

GSTN

GST நெட்வொர்க் என்ற தளத்தைப் பயன்படுத்தி வணிகர்கள் தமது கொள்முதல் விற்பனைகளைச் சரிபார்த்து, ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.   ITC  திருப்புதல் மற்றும் விட்டுப்போன ITC கோருதல் (Reclaim of ITC) போன்ற பணிகளைத் தாங்களே பூர்த்தி செய்யலாம்.  அலுவலர்களின் அனுமதி தேவையில்லை.

மின்னணு தளத்தில் வடிவத்தில் வணிகர்கள் கணக்கு விவரங்களைப் பேண வேண்டும்.

மிகுதியான ITC தொகைகளை ரீபண்ட் மூலம் திரும்ப பெறலாம்.

ரீபண்ட்  நெறிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

ரீபண்ட் மனு கொடுத்த 90 நாளில் ரீபண்ட்தொகை பெறலாம்

உரிய ஆவணம் இணைக்கலாம்.  ரீபண்ட் தொகை ரூ.5 லட்சத்திற்குக் கீழே இருப்பின் ஆவணம் இன்றி சுயச் சான்றின் மூலம் ரீபண்ட் பெறலாம்.

அதிகபட்ச காலம் ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டுக்குள் ரீபண்ட்  மனு சமர்ப்பிக்கலாம்.

இந்த ரீபண்ட் பெறும் வசதி பெரிய வரப்பிரசாதம் எனலாம்.

வரிவிதிப்பு சுயவரிவிதிப்பு ஆகும் என்பது வணிகருக்குச் சகாயம்

வரி பூசல்கள் மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஆடிட், தணிக்கை சமயத்தில் விடுபட்டுப் போன வரிகளை வட்டியுடன் முழுக்க செலுத்தும் பட்சத்தில் தண்டத்  தொகை சிறியதாகவோ அல்லது முழுத் தண்டம் தவிர்க்கப்படும்
 
சிறு சிறு விதி மீறல்களுக்கு உயர்பட்ச் தண்டம் இராது.

ஆடிட் பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

நேர்மையாக ஆடிட் தணிக்கை நடைபெறும்.

வணிகர்க்கு 15 நாளுக்கு முன்னர் உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

3 மாதங்களுக்குள் தணிக்கை ஒளிவு மறைவின்றி நடத்தப்பட்டு உரிய விவரம் வணிகருக்குத் தெரிவித்து அவரது கருத்து, உரிமைகளை மற்றும் தணிக்கையின் முடிவுகளைக் குறிப்பிட வேண்டும்.

01.04.2007 க்கு முன்னர் செய்ய வேண்டிய உடனடி ஏற்பாடுகள்

GST நடைமுறைக்கு வருமுன்னர் ஏற்கனவே பதிவு வணிகர்கள் எண்.
GST யில் தற்காலிகமாக இணைக்கப்படும்.  6 மாதத்திற்குள் நிரந்தர எண் வழங்கப்படும்.

காம்பவுண்ட் வரிகளை ஒவ்வொரு காலாண்டுக்கு ரிட்டனில் செலுத்தலாம்.

வரிசெலுத்தும் முறை-

1) NEFT (National Elec. Fund Transfer)
2) RTGS (Real Time Gross Settlement)

ஏற்றுமதி இனம் – பூஜ்ய வரி சப்ளை ஆகும் (Zero rated supply))

GST சட்டங்களின் விதிமுறைகளை வடிவமைக்க மைய, மாநில அரசுகள் குழு அமைத்து வரைவு செய்து வருகின்றனர்.

IT அமைப்பு மூலமே GST நிர்வாகம் நிமிர்ந்து செயல்படும்.  இதற்காக மைய அரசு GST Network என்பது ரூ.2300 கோடி செலவில் விரைவாக அமைக்கப்பட்டு செயல்படுகிறது.  28.02.2017 க்குள் முழுமை ஆகும்.

இதன் மூலம்

 1) பதிவு எளிதாகும்

2) ரிட்டன்கள் உரிய அலுவலகம் சென்று சேரும்.

3) IGST முறை ITC சரியாக பகிர்வு செய்யப்படும்.

4) வணிகரின் முழு விவரத் தொகுப்பு மூலம் எளிதில் விபரம் பெறலாம்.

GST  நெட்வொர்க் நிறுவனம் GST வீக்கென தனி தளம் அமைத்து வருகிறது.  இதில் தற்போது மாநில மைய தளங்கள் இணைக்கப்படும்.

அனைத்து மைய / மாநில அரசு அதிகாரிகளுக்கு IT and
E-commerce  போன்ற இனங்களில் பயிற்சிகள் மும்பை, பெங்களூரில் நடைபெற உள்ளன.

இதற்கிடையே வணிகத் தொழில் முனைவோர் அமைப்புகள் அனைத்தும் றூறீவீ வரியினை மகிழ்வுடன் எதிர்நோக்கி வரவேற்கத் தயாராகி விட்டன.

இந்தப் புதிய வரியுகப் புரட்சி 01.04.2017 அன்று விடிவெள்ளியாக உதயமாவதை நாமும் வரவேற்போம் .
வணக்கம்.  வாழ்த்துக்கள்.