சிந்தனை புதிது………

riநதிகள் இணைப்பா / நதிநீர்ப் பங்கீடா / மரம் வளர்ப்பா
மூன்றாம் உலகப்போர் வருமா? அப்படி வந்தால் என்ன தேவைக்கு வரும்? நிச்சயமாகப்பொருளாதார தேவையாக இருக்க வாய்ப்பு இல்லை.  நிச்சயமாக அத்தியாவசியத் தேவையான‘தண்ணீரு’ க்காகவே வரும்.  மேலே நாம் கொடுத்துள்ள தலைப்பை பற்றித் தெளிவாக விளக்கக்கடமைப்பட்டுள்ளேன் யாதெனில் நதிகள் இணைப்பு என்பதனை தேசிய அளவில் நதிகளை இணைத்தல் என்னும் அர்த்தத்துடன் தலைப்பைக் கொடுத்துள்ளேன்,  அடுத்ததாக நதிநீர்ப்பங்கீடு என்பது மாநிலத்திற்குள் (தமிழகம்) நதியிலிருந்து கால்வாய் வாயிலாக ஊர்வாரியாகவிவசாயம் மற்றும் பல அத்தியாவசியத் தேவைக்காகவும் நீரினைப் பங்கிடுவது என்பதைக்குறிப்பிடுகிறது.  இதில் நாம் முதலில் நதிகள் இணைப்பு என்பதனைப் பார்ப்போம்.  நதிகள்இணைப்பு என்பது அவசியம் தேவை.  வறட்சியான மாநிலங்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பேரிடர் ஆன வெள்ள அபாய எச்சரிக்கை வரும்போதெல்லாம் நீர் ஒரு பக்க சேதாரத்தைத் தவிர்க்கவும், மற்றுமொரு பக்கம் நீரின்றி காய்வதை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படும், அதுமட்டுமின்றி விவசாயம், கால்நடை,மின்சார உற்பத்தி, வேலை வாய்ப்பு போன்ற அம்சங்களால் நாட்டின் பொருளாதாரமே செழித்தோங்கும்  என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  இதற்குச் சிறந்த உதாரணமாகநாம் குஜராத் மாநிலத்தைக் கூறலாம்.  அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமே மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தரும் நர்மதா நதிநீர் திட்டத்தினைச் செவ்வனேசெயல்படுத்தியதே வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.  ஆகவே இத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களாகும்.அடுத்ததாக நதிநீர்ப் பங்கீடு என்பதை மாநிலத்தினுள் இருக்கும் நீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும், விவசாயம் மற்றும் தொழில் செழித்தோங்கவும் மாநிலத்தில்இருக்கக்கூடிய நதிகளின் நீரைக் கால்வாய் மூலமாக எடுத்துச் செல்வதாகும்.  நமது தமிழகத்தைப் பொருத்தவரை ராஜஸ்தான் பாலைவன மாநிலத்தில்  பெய்யும் மழை நீரின் அளவு ஒன்றே(மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் ஆதாரத்தை கணக்கில் கொள்ளக் கூடாது) என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.  ஆகவே நாம் ஏன் நதிநீரைப் பங்கீடு செய்ய வேண்டும்? அதற்குப் பதிலாக ஏன் மழை நீர் ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ளக் கூடாது.  தரிசு, மானாவரி, பொறம்போக்கு (அரசு நிலம்) ஆகிய இடங்களில் நாம் ஏன் மரம் வளர்க்கக் கூடாது.  மேலும்ஆள் துளைக் கிணறு, திறந்த வெளிக் கிணறு போன்ற இடங்களில் மழை நீரை முழுமையாகச்
சேமிக்கலாம்.  இது போன்ற காரியங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து,அரசினை மட்டும் திட்டம் தீட்ட காலதாமதம் செய்து வருவதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம். மழை நீர், நதிநீர் என்பது பொதுவுடமை. அதைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆனால் எனது கருத்துப் பங்கீடு என்பதை விட நீர் ஆதாரத்தை பெருக்கும் வழிவகைகளைசெய்வது தொலை நோக்குப் பார்வைக்கும் அடுத்து வரும் சந்ததிகளுக்கும் நல்ல ஊக்கத்தை தருவதாக அமையும்.  அதே போன்று குளம், குட்டை போன்றவைகள் குறைந்து நீர் நிலைகள்அமைவதற்குத் தடங்கலாகவும் இருந்து வருகிறது.  இதனை நாம் இப்படியே விட்டால் நதிநீர்ப்பங்கீடு கூட எதிர்காலத்தில் செய்ய முடியாது.  மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.  இது சம்மந்தமாகசமூக ஆர்வலரிடம் எடுத்துச் சென்று கருத்தினை வினாவின போது மரம் வளர்க்க வேண்டும்
என அரசு ஒரு புறம் சொல்கிறது.  மறுபுறம் இலவச ஆடு மாடு போன்ற கவர்ச்சித் திட்டத்தினைஅறிவித்தும், கொடுத்தும் மரம் வளர்ப்பினைக் கெடுத்தும், தடுத்தும் வருகிறது.  இது ஒரு புறம் என்றால் அதற்கு மாற்றாக ஆடுகள் தின்னாத புங்கன், வேப்பம் மரம் போன்றவற்றை நட வேண்டியதுதானே என்று கூறுபவர்களும் உண்டு.  சிறிய நாற்றே மரமாக வளரும்.  ஆனால் ஆடுகள் நாற்றை வளரவிடுவதே இல்லை.  தற்போதுள்ள கால நிலையில் கறி விலை உச்சத்தில் இருப்பதால் அனைவரும் ஆடு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.நூற்றுக்கணக்கான ஆடுகள் வளர்க்கப்படுவது ரோட்டினில் தான் பிறகு எங்கே இருந்துமரம் வளர்ப்பது?  இதுமட்டுமல்லாமல், சாலைகளில் இதனால் ஏற்படும் விபத்துகளும், மரணங்களும் ஏராளம் இதனை தட்டிக் கேட்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும்தொண்டுப்பட்டிகள் அமைக்கலாம்.  இதனை அமைக்கும் பொறுப்பு பேரூராட்சி, மாநகராட்சிமற்றும் நகராட்சி கையில் தான் இருக்கின்றது என்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி நாட்டின் வளர்ச்சி அமையாது என்பதும் தெளிவாகத் தெரிய வருகிறது.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →