சிந்தனை புதிது…..

rainமழைநீர் சேகிப்பு என்பது மழைநீரைத் திரட்டி ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்துப் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு,கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நலத்தடி நீர்மட்டத்தை உயர்துவதற்குப்பயன்படுதலம்.  வீடுகள், நிறுவனங்களின் கட்டங்களின் மேற்கூறைகளில் இருந்தும் இதற்காக தயார்செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம். உள்ளுரிலேயே கிடைக்கும் விலை மலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாக கட்டமைக்கப்
பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியதுகட்டிடங்களின் மேற் கூறைகளில் சேகரிக்கப்படும் மழை நீர் பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக தூய்மைக்கு உட்படுத்தத் தேவை இல்லாமலும்
இருக்கிறது.

தரைவழி மழை நீர் வடிகால் அமைப்பு
தரைவழி வடிகால் அமைப்பு: மழை நீரைத் தயார்படுத்ததப்பட்ட வடிகால்பகுதியிலிருந்து சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செலுத்துகிறது. முறைப்படி வடிவமைக்கப்பட்டு கூடிய அளவு நீரைச் சேகரிப்பதன் மூலம், இது சிறிய சமுதாய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு

இந்த வகையான அமைப்பில் மேற்கூரையில் விழும் மழைநீரை ஒருங்கே திரட்டி,நீரத் தாரைகள் மற்றும் குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.  வறண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் நீரைச் சேகரிக்காமல் விட்டுவிடுவது நல்லது. இதில் தூசி, பறவை எச்சம் போன்றவைகள் கலந்திருக்கலாம். மேற்கூரை நீர்த்தாரைகள் போதுமான சரிவுடனும், பெருமழையைத் தாங்கக்கூடிய அளவு பெரியதாகவும் பலமானதாகவும் அமைத்தால், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.  கொசு உற்பத்தி, நீர் ஆவி ஆதல், நீர் மாசுபடுதல், பாசி வளர்ச்சி ஆகியவைகளைத்தடுக்கச் சேமிப்புத் தொட்டிகளை நன்றாக மூட வேண்டும்.  மழைநீர் சேகரிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படவும், தூய்மையாகவும் இருக்க அதற்கு வழக்கமான பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளும் செய்ய வேண்டும்.வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களைக் கட்டி வைத்துள்ளனர்.வீட்டின் நடுப் பகுதியில் மழை நீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர்எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.  மாடியின் மேல் தளத்தில் விழும்
மழை நீpர் நேராகக் கூம்புக் குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்குக் கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது.  இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும முற்றத்துக்குள் வந்து கொட்டும் அப்படி வந்து கொட்டும் நீரை கூடல் வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி)
அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டிப் பிடித்துச் சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரைத் தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்;கத்தில் இருக்கிறது. தங்களுக்குத் தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே
கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்புத் தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர்.  இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டடக் கலையினால்
சிறு துளி தண்ணீர் கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது.அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறிது.இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரைச் சேமித்து வைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு
இருந்துள்ளது. எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாகக் கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன.மொத்தத்தில் நகரத்தார்கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.

நிலத்தடி நீர்மட்டம் உயர

நிலத்தடி நீரமட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிலத்தடித் தொட்டி. கிணறு தெப்பக் குளம் அல்லது குட்டைகளில் சேமிக்கப்பட்டும் மழைநீர் தானாக நிலத்தடிக்கு உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.

நகர்ப்புறப் பகுதிகளில் பயன்பாடு

மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக் குறையைச் சமாளிக்கவும், நிpலத்தடி நீரமட்டத்தை உயரத்தவும் மற்றும் மழை வெள்ளத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.சேமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டு உபயோகத் தேவைகளுக்கும்,கழிப்பறைகளிலும் சலவை மற்றும் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.கடின நீர் உள்ள இடங்களில் மழைநீர் முக்கியத் தேவையாக உள்ளது.மேலும் நன்றாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குடிதண்ணீராகப் பயன்படுத்த
வேண்டும்.

கட்டாய மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம்

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்,
கட்டாய மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின்  தலைமையில் நடந்த அ.தி.மு.க.
ஆட்சிக்காலத்தில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டாயமாக மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குழநீர் வடிவால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும்.  தவறினால்
மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்
இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்பொழுது தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி நாமும் மழைநீரைச் சேமிக்க ஆரம்பிக்கலாமா?

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்…

1.”ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு”

தப்புங்க தப்பு

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு
கல்யாணத்த பண்ணு இதாங்க சரி

2. படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்

இதுவம் தப்பு

சரியானது என்னண்ணா

படிச்சவன் பாட்டைக் கொடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்.

3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை)

“ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன”;

4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

சூடு அல்ல சுவடு.

சந்தையில் மாட்டை வாங்கும் போது அது பதிக்கும் தடம,; சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும்… மாடே அதிக பலம் வாய்ந்தது.

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்

5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அரத்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம்…

காலப்போக்கில் நம் முன்;னோர்கள் நம் நல்வாழ்வுக்காகச்…

சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற உபயோகிக்கிறோம்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →