சிறுமுகைப் பட்டு மக்களின் வாழ்வாதாரம்

sirumugaiபட்டுச் சேலைகள் தயாரிப்பில் இன்று சிறுமுகை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. காஞ்சீபுரம், பனாரஸ், ஆரணி, கும்பகோணம் வரிசையில் சிறுமுகைப் பட்டு இன்று பிரசித்தி பெற்றுள்ளது. 1970 களில் சிறுமுகைப் பகுதியில் காட்டன் சேலைகள் தயாரிக்கப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பின் தங்கியே இருந்தது. இருப்பினும் இந்த தொழிலில் பெரும்பாலோனர் ஈடுபட்டிருந்தனர். வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்த காலக்கட்டங்களில் பெங்களூர், காஞ்சீபுரம் பகுதிகளில் பட்டுச் சேலை நெசவு பிரபலமாக இருந்தது. அங்கு பட்டுச் சேலைகளை நெய்வதற்கு ஊதியம் அதிகமாக இருந்துவந்தது. ஆகவே இங்கிருந்து கைதேர்ந்த நெசவாளர்கள் பெங்களூர் சென்று பட்டுச் சேலைத் தயாரிப்பில் ஈடுபட்டனர் மேலும் 1977 ல் முதன் முதலாக சிறுமுகைப் பகுதியில் பட்டுச் சேலை தயாரிப்பு அறிமுகப் படுத்தினர்.  மேலும் இப்பகுதியில் இருக்கும் மற்ற நெசவாளர்கள் அந்தத் தொழில்நுட்பத்தினைக் கற்றுக் கொண்டு, பட்டுச் சேலை நெய்யக் கற்றுக் கொண்டனர் இதே சமயத்தில் கோரா பட்டும் அறிமுகமானது. பட்டும் காட்டனும் இணைந்து தயாரிக்கப்பட்டதுதான் கோராப்பட்டு (ஓர்ழ்ஹள்ண்ப்ந்). இதன் மூலமாகக் கடினமாக உணரப்பட்ட இந்தத் தொழில்முறை எளிதானதாக மாற்றம் அடைந்தது.  120 ஜக்காடு 240 ஜக்காடு மூலமாகப் பெரிய பெரிய டிசைன் பட்டுச் சேலைகள் கோராப் பட்டுச் சேலைகள் தயாரிக்கப்பட்டன.  இந்தப் பகுதிகளில் நிறைய கூட்டுறவுச் சங்கங்களும் உருவாக்கப்பட்டு அவைகளும் பட்டுச் சேலைகள், கோரா சேலைகள் தயாரித்தன.

சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் எளிதாகப் பல புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு புதிய புதிய முயற்சிகளில் இறங்கினர். அவற்றில் வெற்றியும் கண்டனர். இன்றைய காலக் கட்டங்களில் கணினியைப் பயன்படுத்தி எண்ணற்ற டிசைன்கள் உருவாக்குகின்றனர். மேலும் புதிய சாதனைகள் படைக்க மற்றவர்கள் முயற்சிக்காத பல விஷயங்களையும் அறிந்து மயில் தோகைப் பட்டு, திருக்குறள் பட்டு எனத் தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளும் இன்று சிறுமுகைப் பட்டு பெற்றுள்ளது என்பது பெருமைபடத் தக்க விஷயம்.

இன்றைய நிலையில் கைத்தறி நெசவுக்கு ஆட்கள் குறைந்து வருகின்றனர். அதிக கல்வி கற்று உயர்ந்த வேலைக்குச் செல்லவே விரும்பிகின்றனர்.  ஆனால் இன்று கைத்தறித் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியும் வாய்ப்பும் பெருகியுள்ளது. மக்கள் மத்தியில் சிறுமுகைப் பட்டுக்கென்றே தனி மறியாதை கிடைத்துள்ளது. இன்று சாப்ட் சில்க், சில்க் காட்டன், ப்ரைடல் சில்க் போன்றவை மிகவும் பிரபலமாக உள்ளன. தினந்தோறும் 1000க்கணக்கான டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று பட்டுச்சேலைகளுக்கு நெசவில் நல்ல ஊதியம் கிடைக்கின்றது. வெளியில் சென்று கஷ்டப்பட்டு  கிடைக்கும் வருமானத்திற்குத் தன் வீட்டில் இருந்து கொண்டே நல்ல வருமானம் பெறக்கூடிய வாய்ப்புகள் நமது கைத்தறித் துறையில் இருக்கின்றன. இன்று நிறைய இளைஞர்கள் இந்த கைத்தறித் துறைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

மக்கள் மத்தியில் சுடிதார், ஜீன்ஸ் தான் நாகரிகம் என்ற எண்ணத்தில் இருந்து மாறி ஒவ்வொரு பெண்ணும் பட்டுச் சேலைகள் நவநாகரிகம் என்பதனை உணரத் தொடங்கியுள்ளனர் உலக நாடுகள் அனைத்தில் இருந்தும் பட்டுச் சேலைகள் மேல் பற்று இருப்பதை உணர முடிகிறது.

இன்னும் வரும் காலங்களில் நமது கைத்தறித் துறையானது நல்ல வளர்ச்சி நிலைக்குச் செல்லும். ஆகவே, இந்தத் துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் நமது அடுத்த சந்ததியினருக்கு நமது கைத்தறி நெசவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் இனி கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்ற கூற்றுக்குப் பொருத்தமாக நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டும்.

புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதிய தொழில் நுட்ப அறிவு என்பது என்றுமே மிகவும் தேவையாக உள்ளன. இதற்கு ஏஹய்க் ஹய்க் ஙர்ற்ண்ர்ய் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் உற்பத்தியைப் பெருக்கி, நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆகவே, ஒவ்வொருவரும் நமது துறையின் வளர்ச்சியைப் பயன்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

வளர்ச்சிப் பாதையில் உங்களுடன்              நானும்  . . . . . .

வி. காரப்பன்

கைத்தறிக் களஞ்சியம் நூலாசிரியர்

சிறுமுகை.