சிறு தொழில் துவங்க சிறுதானிய உணவுப்பண்டங்கள்

seedsஅரிசி, கோதுமையைப் போலவே சிறு தானியங்களை உபயோகித்து வியாபார ரீதியில் பலவகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம்.  ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் பண்டங்களான இடியாப்பம், புட்டு,கொழுக்கட்டைமற்றும் சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்புமாவு, தினை மாவு போன்ற வற்றிலிருந்து இனிப்பு வகைகளான அதிரசம், பணியாரம், லட்டு, கேசரி,பாயசம், சத்துமாவு உருண்டை மற்றும் புட்டிங் ஆகிய பண்டங்களைத் தயாரிக்கலாம்.  கார வகைகளான முறுக்கு பக்கோடா, அடை, உப்புமா மற்றும் அடுமனைப் பொருட்களான கேக், பிஸ்கட் மற்றும் ரொட்டி வகைகளையும் தயாரிக்கலாம்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களை அன்றாட உணவிலும் மதிப்புக் கூட்டி வியாபாரரீதியாக உபயோகப்படுத்தும்போது அவற்றின் தயாரிப்புவிலை குறைவது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.  சிறுதானியங்களிலிருந்து இணை உணவு: கோதுமை, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு,தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பார்லி மற்றும் ஜவ்;வரிசியோடு பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைச்சேர்தது இணை உணவு தயாரிக்கலாம்.  சிறுதானியங்கள் மற்றும் பயிறுவகைகளைக் கல் நீக்கி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து ஈரத்துணியில்  கட்டி மிதமான வெப்பநிலையில் 48 மணி நேரம் வைக்கவும்.  முளைத்;த தானியங்கள் மற்றும் பயறுவகைகளை வெயிலில் நன்கு காயவைத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.  இவ்வாறு தயார் செய்த தானியங்களை மில்லில் மாவாகத் திரிக்கும் பொழுது பாதாம், முந்திரி,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மாவாக்கவும். தயாரித்த மாவை பாலிதீன் பை அல்லது டப்பாக்களில் சேமித்து தினமும் காலை நேரங்களில் குழந்தைகள்,பருவப்பெண்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வயதானவர்களுக்குக் கூழாக தயாரித்து கொடுக்கலாம். சிறுதொழில் தொடங்கத் தேவையானவை : சிறுதானிய உற்பத்தியாளரே மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் முறையை ஒரு குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருவாயைப் பெருக்கலாம்.  அல்லது உற்பத்தியாளரிடமிருந்து சிறுதானியங்களை வாங்கி உணவுப் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம் தானே உற்பத்தி செய்து இத்தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபத்தைத் தரும்.  ஒரு கிலோ பலதானியக்கலவைப்பொடி தயாரிக்க ஆகும் செலவு ரூ.30-40 வரை ஆகும் கடையில் இதை ரூ.80 முதல் 120 வரை விற்பனை செய்யலாம்.  இந்தத் தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் தரும் தொழில்களில்இது முதன்மையானது என்றே சொல்லலாம்.தொழில் துவங்கத் தேவையான பொருட்கள்: ஊறவைக்க பாத்திரங்கள், வறுத்தெடுக்க வாணலி மற்றும் கரண்டிகள், மாவைச் சேமிக்க எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய வாளி, எடைபோடும் மிஷின், லேபிள் போட்ட பிளாஸ்டிக் கவர்கள், சீல் செய்ய கவர் போன்றவற்றிற்கு ரூ.5000 முதல் ரூ.1000 வரை உள்ள முதலீடு போதுமானது.  இத் தொழிலைப் பள்ளி, கல்லூரி அலுவலகங்கள் போன்ற உணவகங்களிலும் நடத்தலாம்.  இத்தொழில் துவங்க மூலதனம் ரூ.10000 தேவைப்படும். தினசரி சராசரியாக 1000 ரூபாய்க்குப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தால் மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் லாபம் கிடைக்கும்.  இவ்வாறு சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டியஉணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து குடும்ப வருமானத்தைப்
பெருக்குவதுடன் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம்…….

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →