சுற்றுப்புறச் சூழல் ஒலி மாசுபடுதல்

earthrise-over-plasticசுற்றுப்புறச் சூழல் ஒலி மாசுபடுதல்
“சுத்தம் சோறுபோடும்; சுகாதாரம் வீட்டைக் காக்கும்” என்பது பழமொழி.  இது போல் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  சுற்றுப் புறம் என்பதில் பல காரணிகள் கலந்தே காணப்படும்.   அவற்றுள் பல காரணிகள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன.  அவற்றுள் ஒன்று தான் ஒலி மாசுபடுதல் ஆகும்.

ஒலி மாசுபடுதல் எவ்வாறு ஏற்படுகிறது?

வண்டிகளில் ஏற்படும் ஹார்ன் சத்தம் (ஒலி) மாசுபாடு,பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசுபாடு,தொழிற்சாலைகளில் ஏற்படும் சத்தங்களில் ஏற்படும் மாசுபாடு,தியேட்டர்களில் அதிக சத்தங்களுடன் கூடிய ஒலி மாசுபாடு, விலங்குகளினால் ஏற்படும் சப்தங்களில் எழும் மாசுபாடு,ஆடல், பாடலுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஏற்படும் மாசுபாடு,அதிகம் சப்தம் போடும் மனிதர்கள்,டிராபிக் சிக்னல்களினால் ஏற்படும் வண்டிகளில் சத்தம்,
பட்டறைகளில் கருவிகளினால் ஏற்படும் சத்தம். ஆகிய பல காரணங்களினால் ஏற்படும் மாசுபாடு ஆகும்.

ஒலி மாசுபடுவதை எவ்வாறு தவிர்ப்பது?

வண்டிகளில் எழுப்பப்படும் ஒலியைத் தகுந்த கட்டுப்பாட்டுடன் உள்ள கருவியைப் பொருத்தி மிகக் குறைந்த அளவே ஒலிப்பது போன்று தீர்வு காணலாம்.ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நகர்புறமோ அல்லது கிராமப்புறங்களிலோ ஒதுக்குப்புறமாக நடத்தினால் யாருக்கும் தீமை விளைவிக்காமல் இருக்கலாம்.
தொழிற்சாலைகளில் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க ஒலிக்கட்டுப்பாட்டுக் கருவிப் பொருத்த வேண்டும்.இரைச்சலைத் தடுக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது வண்டிச் சக்கரத்தை மாற்றியமைப்பது இரைச்சலைக் கட்டுப்படுத்துவது. சாலையில் மேடு, பள்ளம், போக்குவரத்து இரைச்சல், ஆகியவற்றை ஒருகிணைத்து ஒரேசீராகப் போக்குவரத்தைச் செயல்படுத்துவது போன்றவைகளாகும்.இவை யாவும் சாலைப் போக்குவரத்துத் திட்டத்தைத் தொடங்கும் தருவாயில் இருந்தே செயல்படுத்தினால் செலவுகளைக் குறைப்பதோடு, இடைஞ்சல், காலவிரயம் போன்றவற்றையும் தடுக்கலாம்.தொழிற்சாலைகளில்  தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவியைப் பயன்படுத்துதல் அதிர்ச்சியைக் குறைக்கும் கருவிகளை அமைத்தல் ஆகியவை சேரும்.

சுற்றுச் சூழல் பாதிப்புகள்

சத்தம் காரணமாக விலங்குகள் மன உளைச்சல் ஏற்பட்டு இரையைத் தேடிச் செல்லும் விலங்குகள் மற்ற விலங்குகளால் இரையாகலாம்.மிகுந்த இரைச்சல் காரணமாக தன் இருப்பிடத்தையே மாற்றிக் கொள்ளும் இயல்பும் தானாகவே வந்து விடும்.ஒரு விலங்கு அதிக சத்தம் எழுப்புகிறதோ அப்பொழுது மற்ற உயிரினங்களின் குரலோசையை மறைத்து விடுகிறது.  இதனால் எல்லா விலங்குகளும் உரக்கக் குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.ஒலியால் உடல்நலன் பாதிப்பு உண்டு; உடல்நலக்குறைவும் ஏற்படும்.நமக்குத் தேவைப்படாத ஒலியை நாம் சத்தம் என்கிறோம்.  இந்தத் தேவையில்லா ஒலி அதிகமாக மன உளைச்சல் காரணமாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் காது கேட்பதில் ஏற்படும் மந்த நிலையுடன் மிகையான சத்தம் காரணம் காது கேளாமலும் போகலாம்.மிகையான சத்தம் காரணமாக இதய நரம்புகள் சார்ந்த இதய பாதிப்பு ஏற்படும். மேலும் ஒலி மாசு ஒருவனை எரிச்சல் அடையவைக்கிறது.  மேலும் இரத்த அழுத்தம் அதிகமாகிறது.இரத்த அழுத்தமானால் இதய பாதிப்பு ஏற்படும்.  இதனால் இதயக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே ஒலி மாசுபாட்டால் மன உளைச்சல் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு