செல்லப்பிராணிகள்……

petsஇன்றைய பொருளாதார மந்தச் சூழ்நிலையில் அனைவருக்கும் என்ன தொழில் தொடங்குவது?எவ்வளவு முதலீடு செய்வது? என்கிற குழப்பம் இருந்து வருகிறது.  பொதுவாக முதலீடு செய்தால் அதற்குரிய வருமானம் வரும் தொழிலாகத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.  அதிலும் எவ்வளவு காலத்தில் போட்ட முதலீடு எடுக்க முடியும்?  என்பதும் நாம் அறிந்திருக்க வேண்டிய வி­யம்.இதில் வயதிற்குத் தகுந்தாற் போல் வருமானம் அமைத்துக் கொள்வது என்பது புத்திசாலித்தனம் ஆகும்.இதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இளவயதில் இருக்கும் நபருக்குத் தேவை அதிகம்.  குடும்பச் சுமையும் அதிகம் இருககும். ஆகவே அவர் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமேஅவரது தேவைகள் பூர்த்தி அடையும்.  அதுவே 50 வயதை நெருங்கிய ஒருவர் இது போன்றுரிஸ்க் எடுக்காமல் மாதம் சுமாரான வருமானம் வருவதே அவருக்குப் போதுமானதாக இருக்கும். இப்படி வயது, தங்களின் பொருளாதார சூழ்நிலை அனைத்தையும் கருத்தில் கொண்டே
தொழில்அமைக்க நேரிடும்.  அப்படிப்பட்ட தொழில் இருக்கிறதா? அப்படி இருக்குமானால் அது என்ன தொழில்?  அந்தத் தொழில் அனைவரும் செய்யக் கூடியதா?  என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்  இந்தத் தொழில் ஆண், பெண், வயது வரம்பு இன்றித் தொடங்கலாம்.ஆனால் அவரிடத்தில் அன்பு மட்டும் இருந்தால் போதுமானது அது இல்லை என்றால் இந்தத்
தொழில் வெற்றியடையாது.இந்தத் தொழில் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  இது நமது வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து விற்பவைகளே (நாய், லவ் பேர்ட்ஸ், மீன் போன்றவைகள்).  இதில் மிகவும் எளிமையானதும் அதிக லாபமும் தரக்கூடியது எது என்றால் அது அவரவர் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே முடிவு எடுக்க வேண்டும்.  அதாவது இடவசதி இருப்பதற்கேற்றாற் போல்பண்ணைகளை அமைத்துக் கொள்ளலாம்.இன்றைய காலகட்டத்தில் அதிகமாக நாய்களையே விரும்பி வளர்கின்றனர்.  ஏனெனில் அது எஜமானரின் நண்பனாகவும், வீட்டுக் காவல்காரனாகவும், விசுவாசத்துடனும் இருக்கும். இந்தச்செல்லப்பிராணியையே தற்போது வியாபாரமாக்கிக் கொள்ள முடியும்.  இதைப் பற்றி திரு.பு.சுரேஷ்  (THE KOVAI PETS MART) அவர்கள் கோவையில் தான் நடத்தி வரும் செல்லப்பிராணிகள் வியாபாரம் குறித்து விளக்க உள்ளார்.  அவர் வடவள்ளியில் ( கோவை) பண்ணை (நாய்கள்) அமைத்து மற்றும் பிராணிகளுக்குத் தேவையான பொருட்களைக் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார். அவர் கூறும் பொழுது வீட்டில் இருந்தபடியே குடும்பத் தலைவிகள் இதை நல்ல முறையில் செய்து இலாபம் ஈட்டி வரலாம் என்றார்.  மேலும் வசதி படைத்தவர்கள் ஆசைக்காக நாய்களை
வாங்கி வளர்க்கலாம்.  ஆனால் அதற்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்படும் என்று எண்ணி (உணவு சமைக்க) பெரும்பாலும் நாய்கள் வளர்ப்பதைத் தவிர்த்து விடுகின்றனர்.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாய்களுக்குத் தேவையான உணவு ரெடிமேடாகவே கிடைக்கின்றது.
மேலும் பெரிய ” பீரிட்க ” ளுக்கு 750 ஆது ( 1 நாளைக்கு) உணவு போதுமானது.  நமது கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை சுமார் 150 முதல் 200 வகையான  நாய்கள் இருப்பதாகவும் இதில் அவரிடம் இருப்பது 30 முதல் 40 வகையான  ” பீரிட்கள் ”  என்றும் தெரிவித்தார்.பொதுவாக பிராணிகளை 1 1/2 வயதிற்கு மேல் இனச் சேர்க்கைக்கு அனுமதிக்கலாம். அந்த பீரிட்கள் சுமார் 62 நாட்களில் 3 முதல் 5 குட்டிகள் வரை ஈனும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி செல்லப்பிராணிகளுக்குப் பயிற்சி கொடுப்பது ஒரு கலை என்றும் அதற்கு என்றே தனியாக டிரெய்னர்ஸ் இருப்பதாகவும் தெரிவித்தார்.  தங்கள் செல்லங்களுக்குத் தாங்களே பயிற்சி கொடுத்தும் பழக்கலாம்
இது போன்ற பயிற்சிகளைப் பயில விரும்புவோர் பயிற்சி நடத்தும்இடங்களில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.  (பெங்களூர் மற்றும் சென்னையில் பயிற்சி நடக்கின்றது – பயிற்சிக் கட்டணம் சுமார்ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரையாகும்.)

செல்லப் பிராணிகள் விரும்புவோர் கூறுகையில் தாங்கள் எந்த வகையான நாய் வளர்த்து வருகிறார்கள் என்பது முக்கியமல்ல.  அந்தச் செல்லப் பிராணிகளுக்கு நல்ல முறையில்  உணவு அளித்துப் பராமரிக்க
வேண்டும் என்பதே அவரின் வலியுறுத்தலாக இருக்கின்றது.  சிலர் அதிக விலை கொடுத்து வாங்கியசெல்லப் பிராணிகளின் உணவுக்காக பணம் செலவழிப்பதில் தயங்குவார்கள்.   இப்படிப்பட்ட சூழலில் இருந்து வருவதாகக் கூறினார். அதே போல் தங்களின் கடைகளில் உள்ள பேக்கட் புட் அனைத்தும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சேர்த்து அங்காடிகளுக்கு விற்பனைக்கு வருகிறது என்றும் தெரிவித்தார்.  (பொதுவாக நாய்களின் வளர்ச்சி 1 வருடத்திற்கு மட்டுமே.
அதற்கு மேல்  அதன் உயரமோ அல்லது எடையோ அதிகரிக்காது)

உலகில் நாய்கள் மூலம் நடந்த அதிசய சம்பவங்களையும் அவர் நம்மிடம் கூறினார்.  அதாவது கோல்டன் ” ரிட்ரீவர் ”  என்னும் செல்லப்பிராணி வெளிநாட்டில் ஒரு மனநலம் குன்றிய குழந்தையிடம் பழகி அந்த
குழந்தையின் மனநலம் முன்னேற்றமடையப் பெரிதும் உதவியுள்ளது.  மேலும் வெளிநாடுகளில் ” லேபரடார் ”  வகையைச் சேர்ந்த நாய்களே கண் பார்வையற்றோரின் வழிகாட்டியாக இருந்து வருகிறது என்று பல தகவல்களைத் தந்து நம்மை ஆச்சரியமடையச் செய்தார்.

அதே போல் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பலருக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்று ஆசைகள் இருக்கும்.  ஆனால் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கே அருகில் வசிப்பவர்களுக்கல்லஎன்பது போல் கழிவுகளை அடுத்தவர் வீட்டில் கலக்க நேரிடும்.   இது போன்ற சம்பவங்களையும் சமாளிக்க முடியும்.  அதாவது அதற்கு  ” ஸ்பரே ”  ஒன்று விற்று வருகிறோம் அதை எந்த இடத்தில் பயன் படுத்துகிறோமோ அந்த இடத்தில் மட்டுமே நாய்கள் கழிவுகளை ஏற்படுத்தும்.  இது போன்ற
எண்ணற்ற பொருட்கள் தாங்கள் விற்று வருவதாகவும் அவர் கூறுனார்.

திரு.சுரேஷ் அவர்களுக்கு இந்தத் துறையில் 25 வருட அனுபவம் இருக்கின்றது என்றும், பொதுவாகச்செல்லப் பிராணிகளை வாங்க வருபவர்களுக்கு 40 நாள் குட்டியை பரிந்துரை செய்வதாகவும், பெரும்
பாலானவர்களுக்கு இது போன்ற நாய்களை வளர்த்து வியாபாரம் செய்வது நல்ல இலாபகரமான தொழில்என்றும் தெரிவித்தார்.   இந்தத் தொழில் செய்ய ” பெஸ்ட் அஸோசியே­ ” னில் பதிவு செய்ய பேண்டும்.தற்போதுகோவையில் 40 பெஸ்ட் ஷாப் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போன்று நாய்களுக்கு விளையாடுவதற்கு பொம்மைகள், பந்து இன்னும் பல பொருட்கள்அதற்காகவே வடிவமைத்து அங்காடியில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு www.coimbatorepetshop.com என்கிற இணையதள முகவரியைக் காணலாம்.

தங்களின் செல்லப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பதில் கவனம் தேவை.   உப்பு, இனிப்பு, காரம் இவை மூன்றையும் தவிர்த்து உணவு அளித்திட வேண்டும்.   மேற்கூரிய வி­யங்களைப் பின்பற்றி பண்ணை அமைத்தாலும் சரி அல்லது அவரது வீட்டில் ஒன்று, இரண்டு வகைப் பிராணிகளை வளர்த்தாலும் சரிஇலாபம் பெறலாம் என்றும் தெளிவாக விளக்கினார்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →