சோலார் விளக்குப் பொறி-சுற்றுச்சூழலின் நண்பன்.

techஇனி விவசாயிகள் பூச்சிக் கொல்லிக்குப் பாய் பாய் சொல்லும் நேரம் வந்துவிட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 19ம் தேதியன்று. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுக்கா, குமரன்குன்று பகுதி விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லியின் அபாயத்தையும், அதிலிருக்கும் செலவினங்கள்… அதற்கு மாற்று போன்ற தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்த திரு.M.அப்துல் காதர் மற்றும் திரு.S.சஞ்சய் குமார் அவர்கள் நேரில் சென்று சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அன்று, விவசாயிகளுக்கு ரசாயனங்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் அதிக உற்பத்தி என்று விவசாயத்தை உற்பத்திக் கூடமாக மாற்றிய போதே பூச்சிக் கொல்லிகள் தேவைப்பட்டன. இதனால் உணவு நஞ்சானது. இதற்குக் காலமே சாட்சி. இன்று அதை உணர்ந்த நாம் மாற்றை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளோம். சரி, இன்று பூச்சிக் கொல்லிகள்; அன்று பூச்சிகளை அழிக்க என்ன தொழில்நுட்பங்களைக் கையாண்டார்கள்?

விவசாயிகள் மாலை 6 மணிக்கு விளக்குப்  பந்தம் எடுத்துச் செல்வார்கள். இன்று அதற்கு மாற்றே சோலார் விளக்குப் பொறி. இதற்கு, சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததையும்
திரு.M.அப்துல் காதர் அவர்கள் கூறினார்.

சோலார் விளக்குப் பொறி பற்றி விவசாயிகளிடம் கலந்துரையாடிய போது, மனிதர்கள், கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதனை நெல், காய்கறிப் பயிர்கள், தோட்டப்பயிர்கள், எண்ணை வித்துப் பயிர்கள், மலைத் தோட்டப்பயிர்கள் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம் என்றார்.

இதன் தொழில்நுட்பங்கள்…

இது இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை.

மனிதனின் இயக்கம் தேவையற்றதாகிறது (அந்திப் பொழுதில் தன்னால் இயங்கிச் செயல்படத் தொடங்கும்).

சார்ஜ் ஆவதற்கு சூரிய ஒளி / சக்தியே போதுமானது.

சார்ஜ் ஆகும் பொழுது சிகப்பு விளக்கு எரியும்.

பூச்சி கவர்தல் நேரங்களில் பச்சை விளக்கு எரியும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள திறன்மிகு LED விளக்குகள் சுமார் 120 அடி தொலைவிற்குச் செயல்படும். ஏக்கருக்கு, 1 சோலார் பொறி போதுமானது (ஏக்கரின் மையப் பகுதியில் வைக்க வேண்டும்-120 அடி என்பது ஏக்கரின் மையப் பகுதியாகும்).

இந்த விளக்குப் பொறிகள் சுமார் 4 அடி உயரமும், குறைந்தபட்சமாக 2 1/2 அடி உயரமாகவும் அமைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சோலார்ப் பொறிகள் வெயில், மழை, பனி… போன்ற எந்த காலங்களிலும் எடுக்கத் தேவையில்லை. இவைகள் சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் ஆகிக்கொள்ளும். இவைகளின் செயல் திறன் ஒரு நாளைக்கு சுமார் 3 மணி நேரங்களாகும். அதாவது, அந்திப் பொழுதில் பூச்சிகள் நடமாட்டம் துவங்கும் பொழுது, இதுவும் செயல்படத் துவங்குகிறது. இதன் தொடர்ச்சி சுமார் 3 மணி நேரங்களாக இருக்கும். இந்த நேரங்களே தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம், இதற்குமேல் நன்மை செய்யும் பூச்சிகள் வரும் நேரம் என்பதால் இதை 3 மணி நேரங்கள் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதை விவசாயிகள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ள ஆன் / ஆப் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் பொருத்தப்பட்டுள்ள – பேனல் 3 வாட்ஸ், 5mm LED விளக்குகள், பிளாஸ்டிக் கிண்ணம் 3 1/2 லிட்டர் கொள்ளளவு (2 லிட்டர் அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்).

சோலார் பொறியின் எடை சுமார் 3 கிலோ. இதை எங்கும் மாற்றியமைக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது.

அந்திப் பொழுதை, மைக்ரோ கண்ட்ரோல் போர்டு சூரிய வெப்பத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப, தானியங்கி முறையில் செயல்படுகிறது. சூரிய சக்தியைச், சேமிக்க பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவை முழுத்திறனுடன் பயிர்களை அழிக்கும் நேரத்தை ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவரப்படும் பூச்சிகள்

சோலார் விளக்குப் பொறியை ஏக்கரின் மையப் பகுதியில் வைத்து, கிண்ணத்தில் சுமார் 2 லிட்டர் தண்ணீரும், 10 மில்லி – டீசல், மண்ணெண்ணைப், தேங்காய் எண்ணைய்… போன்றவைகளில் ஏதாவது ஒன்றினைக் கலந்து வைத்து விட வேண்டும்.

தீமை செய்யும் பூச்சிகளான அந்துப் பூச்சி, காய் துளைப்பான், தண்டு துளைப்பான், பழம் துளைப்பான், வெள்ளை ஈ, பழ ஈ,  வண்டுகள், குருத்துப் புழு… போன்றவைகள் கவரப்படுகின்றன. சோலார் விளக்குப் பொறி மூலம், 85 % தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கலாம் என்றும். இதனால், பூச்சிக் கொல்லிகள் தேவையற்றதாகின்றன என்றும் விவசாயிகளிடம் கூறினார்.

இதில் கவரப்படும் பூச்சிகளைத் தினமும் பிடித்து, குழியைத் தோண்டிப் புதைக்க வேண்டும் என்கிறார். இதில் இரண்டு நன்மைகள். ஒன்று, இது மண்ணிற்கு எருவாகிறது. மற்றொன்று பூச்சிகள் உயிர்த்தெழ வாய்ப்புகள் இல்லை. கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும். இந்த சங்கிலி தொடர்வதால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. உதாரணமாக –  ஒரு தாய் அந்துப் பூச்சியைப் பிடிப்பதனால் அதன் மூலம் உருவாகக்கூடிய 300க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

சோலார் விளக்குப் பொறியின் விலை ரூ.3,150/-. 3 வருட உழைப்புத் திறன் உடையவை என்றும் 6 மாதம் உத்திரவாதம் வழங்குவதாகவும் கூறினார்.

கவனம் தேவை

மேலும், இவைகள் எப்போதும் சார்ஜ் ஆகிக் கொண்டு இருப்பது போல் பராமரித்தால் பேட்டரியின் ஆயுள் முழுத்திறனுடையதாகவே இருக்கும் என்று கூடுதல் டிப்ஸ் வழங்கினார்.

சோலார் விளக்குப் பொறி, நஞ்சு இன்றி, இரசாயனத் தாக்கத்திலிருந்து மக்களை விடுவித்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து விவசாயிகளின் நண்பனாகத் திகழ்கின்றது.

மேலும் தொடர்புக்கு,
திரு.M.அப்துல் காதர்
94885 91915
திரு.S.சஞ்சய் குமார்
98420 51233.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →