ஜல்லிக் கட்டு

4n820nt5தமிழ்நாடு நானிலம் தழுவியது.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இயற்கை அமைப்பைக் கொண்டது.  இந்நானிலத்துடன் பாலையும் சேர்த்து ஐந்தாகும். இவ்வைந்நிலங்களுக்கும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருள்களும், இன்னின்னலை என இலக்கணமாக எழுதி வைத்துள்ளனர் நம் முன்னோர்.

இதில் முல்லை நிலம் மாயோனாகிய கண்ணனைத் தெய்வமாகக் கொண்டு மாடுகள் மேய்த்தலைக் கருப்பொருளாகக் கொண்ட இடையர்கள் – ஆயர்கள் – வாழும் பகுதியாகும்.  இது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும்.  இங்குள்ள ஆயர்களின் முக்கிய தொழிலே மாடு மேய்த்தலாகும்.  அத்துடன் தினை, சாமை, வரகு, அவரை, துவரை முதலிய தானியங்களை விளையச் செய்து உண்டு வாழ்பவர்கள்.  அவர்களது விளையாட்டு மாடுகளை அடக்குதலாகும்

செல்வத்திற்கு மற்றொரு பெயர் “மாடு’ என்பது.  ஆகவே, அம்மாட்டையே செல்வமாக உடையவர்கள் ஆயர்கள்.  அவர்கள் தம் குடியில் ஒரு பெண் பிறந்தால் அந்த சமயம் தன் மந்தையில் போடும் கன்றுக் குட்டிகளைப் பிறருக்குத் தராது தாமே  வளர்ப்பர். அப்படி “நட்பின்னை’ என்ற பெண் பிறந்தபோது பிறந்த ஏழு சேங்கன்றுகளை அவ்வாயன் வளர்த்தான்.  அப்பெண் பருவமடைந்தாள்.  ஏழு கன்றுகளும் அடக்கமுடியாத காளைகளாயின.  இப்வேழையும் யார் அடக்குகிறார்களோ அவர்களுக்குத் தான் என் மகள் என அறிவித்தான் அதன்படி

“”நம்பினை தன்திறமா நல்விடை யேழவிய
நல்லதிறலுடைய நாதனு மானவனே”.

என்று பெரியாழ்வார் கண்ணனின் வீரத்தை ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்’புகழ்ந்து பாடியுள்ளார்.

ஒரு நப்பின்னைக்காக 7 காளைகளை அடக்கினான் கண்ணன்.  அது ஆயர்களுக்கு வீர விளையாட்டு.  அதுவேயிக்காலத்தில் எல்லோருக்கும் சேர்ந்து காளைகளை அடக்கும் “ஜல்லிக் கட்டாக’ மாறியது.

மல்யுத்தம் செய்கிறோம்.  அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அடித்து, முட்டி மோதிக்கொள்வர். அதனால் இருவருக்கும் உடல் வலி, காயம் ஏற்படும்.  அதைத் தடுத்து நிறத்தி விடுகிறோமா? இல்லையே.  அது என்ன விலங்களுக்கு மட்டும் இத்தனை “தாங்கு தாங்குவது’.  இதற்குத் தடை போடும் அனைவரும் சைவ உணவு உண்பவர்களா? இல்லையே.  அவர்களே தினம் தினம் ஆடு, கோழி, மாடுகளை வதைத்துத் தம் வயிற்றை நிரப்புவர்கள் தாமே இப்படி இருக்க இந்து மதம் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்ட வேண்டுமென்று வேறு சொல்கிறது.

ஆகவே, கொல்லா நெறிபடைத்த, கருணைகாட்டுகின்ற தமிழர்களுக்கு இவ்விளையாட்டு தடை படுத்தப்படுகிறது.