டக்ஸ் கார்னர் – மார்ச் 2014

tax cornerகேள்வி -1.
வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்துள்ளேன்.  அதைத் துறைமுகத்திலுள்ள குடோனில் வைத்துள்ளேன்.  அதற்குச் சுங்கவரிச் சட்டத்தின் கீழ்ச் சுங்க வரி அப்பொருளின் மீதுள்ளது.  அந்தப் பொருளின் மதிப்பு நிர்ணயம் செய்யச் சப்ளையரின் பொருள் விவரப் பட்டியல் (Invoice) நிர்ணயம் செய்யாமல் சுங்க அதிகாரி தவறான ஒரு மதிப்பை வைத்துக் கூடுதல் சுங்க வரியை விதிக்கிறார்.  அப்படிச் செய்ய அவருக்கு உரிமை உண்டா? என் தரப்பு வாதத்தை எப்படித் தீர்ப்பது?
–     ராஜா, அன்னூர்
பதில் 1
சென்னை சுங்கத்துறை நீதி மன்றத்தின் (custom court) மூலம் மேல் முறையீடு செய்து தன் வாதத்திற்குப் பதில் கோரலாம்.   .

கேள்வி -2
நான் மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறேன்.  இதை மத்திய கலால் துறையினரிடம்  பதிவு செய்ய வேண்டுமா?  அதற்குக் காரணம் என்ன?
தீபக், அவனாசி
பதில் 2
மண்டபத்திற்கு கண்டிப்பாக சர்வீஸ் கட்ட வேண்டும். 9 இலட்சமாக இருந்தால் அதற்கு முன் தகவல் கொடுக்க வேண்டும். 10 இலட்சத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.  மேலும் அதற்குண்டான வரிகளையும் கட்ட வேண்டும். வரிச்சட்டம் 1961)
கேள்வி -3.
கோŠ ஆப்ரடிவ்  சொசைட்டி  எப்படி  அமைப்பது?-
Šசித்ரா, உடுமலை
பதில் 3
கோŠ ஆப்ரடிவ் சொசைட்டி யார்  பேரில் இயங்குகிறது? யாருக்கு முழு உரிமை உண்டு எதன் பேரில் கோŠஆப்ரடிவ் சொசைட்டி உள்ளது? இது போன்ற முழு விவரங்களையும் சென்னையிலுள்ள ரிஜிஸ்டர் ஆப் சொசைட்டியின் மூலம் கொடுத்து கோŠஆப்ரடிவ் சொசைட்டி  அமைக்கலாம்.

கேள்வி –  4
நான் ஈ – காமர்ஸ் (e-commerce)பிஸினஸ் செய்கிறேன்.  இதற்கு வரி கட்ட வேண்டுமா?
– ராஜா, சத்தி.
பதில் -4
ஈ Š காமர்ஸ் சேல்ஸ் டேக்ஸ், இன்கம் டேக்ஸ், சர்வீஸ் டேக்ஸ் போன்ற மாநில அரசு விதிக்கும் எல்லா வரிகளையும் கட்ட வேண்டும்.

பதில் அளித்தவர் – திரு.ஈ . தேவராஜ் . ஆடிடர் , கோவை

About தேவராஜ்.ஈ. CA

View all posts by தேவராஜ்.ஈ. CA →