டேக்ஸ் கார்னர்……

tகேள்வி;- 1.
Advance Tax கட்ட ஒவ்வொரு கெடுவிலும் எவ்வளவு கட்ட வேண்டும் எப்போது கட்ட வேண்டும்?

பதில் 1

Advance Tax செலுத்தும் தவணை விவரங்கள்

கம்பெனி அல்லாதவர்கள்
செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 30% செலுத்த வேண்டும்.
டிசம்பர் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 60% செலுத்த வேண்டும்.
மார்ச் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 100% செலுத்த வேண்டும்.

கம்பெனி

ஜுன் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 15% செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 45% செலுத்த வேண்டும்.
டிசம்பர் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 75% செலுத்த வேண்டும்.
மார்ச் 15ம் தேதிக்கு முன்பு – செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 100% செலுத்த வேண்டும்.

கேள்வி 2.
Articles of Association என்றால் என்ன?

பதில் 2

ஆர்டிகல் ஆஃப் அசோஸியேசன் (The Articles of Association) என்பது இந்த குறிப்பிட்ட கம்பெனியைப் பற்றியது. முக்கிய விவரங்கள் ஆகிய செய்யும் தொழில் நிர்வாகிகள் பொறுப்புகள் மற்றும் அதன் செயல்பாட்டுக்கான நிர்வாக வழிமுறைகள் ஆகியவற்றை இந்த ஆவணத்தைக் குறிப்பிட்டு Registar of Companies (ROC) துவக்கும் முன் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும் கம்பெனியின் தொழிலோ அல்லது செயல் பாட்டு வழிமுறைகளில் மாற்றம் இருந்தால் இந்த ஆவணத்தைத் திருத்தி Registar of Companies யிடம் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

கேள்வி 3.

Co-operative Society கணக்கு வழக்குகள் வைப்பதற்குத் தனி வழிமுறைகள் ஏதேனும் உண்டா?

பதில் 3

கூட்டுறவு அமைப்புகளுக்கு கணக்குகளை வைத்து கொள்வதற்கு புதிதாக சட்டம் ஒன்றும் இல்லை. இருப்பினும் கூட்டுறவு அமைப்பு சட்டத்தின் கீழ் stock ledger,cash book,bank book என மற்றும் பல கணக்குகளை டபுள் என்ட்ரி கணக்கு வழிமுறையிலே கணக்குகளை வைத்திருக்க வேண்டும்.

கேள்வி 4.

LLP நிறுவனம் அல்லது சாதாரணக் கூட்டாண்மை நிறுவனம் இதில் புதிதாகத் தொழில் தொடங்க எந்த வகையான நிறுவனம் சிறந்தது?

பதில் 4

புதிதாக துவங்கும் தொழில்களுக்கு சாதாரண கூட்டாண்மை நிறுவனமே போதுமானது தொழில் துவங்கிய ஒரு சில காலத்திற்குப் பின் (Limited Liability partnership) ஆக மாற்றுவதைப்பற்றி யோசனை செய்து நமக்கு நல்ல பயன் அளிக்கும் பட்சத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

About தேவராஜ்.ஈ. CA

View all posts by தேவராஜ்.ஈ. CA →