டேக்ஸ் கார்னர்…

taxகேள்வி – 1.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் (தயாரிப்பாளராக) மத்திய கலால் வரி செலுத்த வேண்டியுள்ளது என்று ஒர் கருத்தரங்கில் கேட்டறிந்தேன் இது உண்மை தானா? அதற்குச் சரியான திட்டமிட என்ன செய்வது?

பதில் – 1

உங்கள் விற்பனைத் தொகை ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், மத்திய கலால் வரித்துறைக்கு எழுத்து பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதுவே ரூ.1.5 கோடிக்கு மேல் இருந்தால் கலால் வரித்துறையிடம் பதிவு செய்தல் வேண்டும். பெரிய தொழிலாக வளர வேண்டுமெனில் அரசு வரி விதிகளைச் சரியாகக் கடைபிடிப்பது வெற்றிக்கு அடிதளம் அமைப்பதாகும்.

கேள்வி – 2

மாநில அரசுக்கு PWD கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறேன். எனது பணிகள் அனைத்தும் முடிந்தும் எனக்கு செலுத்த வேண்டிய தொகைள் இன்னும் பாக்கி உள்ளன. பணம் பெறாமல் இந்தத் தொகையை என் வருவாயாகக் கருத வேண்டும் என்பது சரிதான?

பதில் 2

நீங்கள் மர்கண்டெய்ல் அல்லது கேஷ் பேஸிஸில் கணக்கு வைக்கலாம். மர்கண்டெய்ல் முறையில் கணக்கு வைத்தால் மொத்த பில் தொகையும் வரியாக வருமானமாக கருதப்படும். இதை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை கேஷ்பேஸிஸில்
கணக்கு வைத்தால் நீங்கள் கையில் பெறும் (காசாகவோ/வங்கி வழியாகவோ) தொகையை மட்டும் வருமானமாகக் கருதப்படும்.

கேள்வி – 3

நான் SIP (systematic Investment Plan) ல் கடந்த 18 மாதங்களாக முதலீடு செய்து வருகிறேன். எனக்கு இதில் சிறிதளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை எவ்வாறு கணக்கில் (31.3.2016) வைக்க வேண்டும்.

பதில் – 3

SIP வாயிலாக பெறும் லாபம் எப்படி Capital Gain Tax க்கு ஆளாகிறதோ அதே போன்று அதில் எழும் நஷ்டத்தையும் Capital Loss ஆகப் பாவிக்கப்படும்.

கேள்வி – 4

என் மனைவி பெயருக்கு ஆயுள் காப்பீடு ஒன்று கடந்த வருடம் துவங்கியுள்ளேன் வருமான வரிக்காக Clubing என்று ஓர் முறை உள்ளதாக என் நண்பர் ஒருவர் கூறினார். அதைச் சற்று விளக்குங்கள்.

பதில் -4

மனைவிக்காக LIC Premium கட்டும் தொகையில் இந்திய வருமான வரிசட்டம் பிரிவு 80-C யின் Clubing என்பது வருமானத்தை மனைவியின் பெயரில் மாற்றம் செய்யும் போதோ அல்லது சொத்து உருவாக்கினாலோ உருவாகிறது.

About தேவராஜ்.ஈ. CA

View all posts by தேவராஜ்.ஈ. CA →