டேக்ஸ் கார்னர்…

sn60prtnகேள்வி – 1

எனது ஊழியர் ஒருவர் என் கம்பெனி வாகனத்தில் சென்ற பொழுது ஒரு சிறிய விபத்தில் மாட்டிக் கொண்டார் அதன் விளைவாக அந்த வண்டியை காவல் நிலையத்தில் கையகப்படுத்தி வைத்துச் சில மாதங்கள் ஆகி விட்டன.   தற்சமயம் இந்த வாகனம் பராமரிப்பின்றி கண்டமான நிலை போல் தோன்றமளிக்கிறது.  நான் என் செய்வது?

பதில்- 1

உங்கள் வாகனம் பழுதடைந்து, அதைக் காவல் நிலையத்திலிருந்து மீட்டு எடுத்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்தால், அதை நஷ்டமாகக் கருதலாம் அதற்குக் கணக்கில்,

1. இந்த வாகனத்தின் பேரில் காப்பீட்டுத் தொகை கோரி இருந்தால்

Cash a/c.
Loss on Accident a/c Dr.
To Vehicle a/c

2. காப்பீடு இல்லாமல் இருந்தால்

Loss on Accident a/c Dr.
To vehicle a/c

கேள்வி – 2

நான் எலெக்ட்ரிக்கல் கடையும் இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் வைத்துள்ளேன்.  விவசாய வருமானத்திற்கு வரி இல்லையயன்றால் வேறு ஒரு முறையில் வருமானத்தை கணக்கிடுவதாக என் உறவினர் கூறினார்.  அப்படி ஒன்று உள்ளதா?  

பதில்- 2
 
விவசாய வருமானத்தின் பேரில் வரி இல்லை.  ஆனால் உங்கள் மொத்த வரியைக் கணக்கிடும் போது.

உதாரணமாக

விவசாய வருமானம்    – ரூ.90,000/-
தொழில் வருமானம்    –  ரூ.4,00,00/-
                                                 —————
                                            -ரூ.4,90,000/-

1. 4,90,000 க்கு வரி – ரூ.24,000 (முதல் ரூ,2,50,000 க்கு வரி கிடையாது)2. ரூ.2,50,000 + ரூ.90,000 – ரூ.3,40,000 க்கு வரி ரூ.9,000. 3. செலுத்த வேண்டிய வரி – (ரூ.24,000 – ரூ.. 9,000)= ரூ.15,000 இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்(ரூ.24,000 – ரூ.. 9,000)= ரூ.15,000.

குறிப்பு – ரூ.2,50,000 என்பது வருமான வரி ஆரம்ப வரம்புத் தொகை.  இது மத்திய அரசால் அவ்வப்போது மாற்றம் பெறலாம்.

கேள்வி – 3

நான் ஒருவரிடம் என் வீட்டுமனைப் பத்திரத்தின் பேரில் அடமானம் செய்து ரூபாய் இரண்டரை லட்சம் (2,50,000/-) கடனாகப் பெற்றேன்.  இதற்கான அடமானச் செலவை நான்தான் செலுத்த வேண்டுமா?  இதை நான் செலவாகக் கருத முடியுமா?

பதில் – 3

ஆம்.  நீங்கள் வாங்கிய கடனுக்கு நீங்கள் தான் அடமானச் செலவை ஏற்க வேண்டும்.  இது கடன் பெறுவதற்குச் செலவிட்டதாகக் கருதி கணக்கில் வைக்கவும்.

கேள்வி – 4

என் வாடிக்கையாளர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்த பொழுது உடல் நிலை மோசமடைந்து அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவர் உறவினர்கள் வரும் வரை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  அதற்கு ஓர் கணிசமான செலவும் ஆனது.  அதை அவர் தரும் நிலையில் இல்லை.  ஆகையினால் இந்தச் செலவை நான் என்ன செய்ய முடியும்? (வாராக் கடனாகக் கருத வாய்ப்புண்டா?)

பதில் – 4

நீங்கள் இந்தச் செலவை வராக்கடனாக கருத முடியாது, ஆனால் welfare expenses ஆகக் கருதலாம்