டேக்ஸ் கார்னர்

focptndnகேள்வி – 1

நான் ஜவுளிகடை ஒன்று வைத்துள்ளேன். கடையில் பணியாளர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு ESI, PF நான் கொடுத்தாக வேண்டுமா?

பதில்- 1

தங்களது ஜவுளிக்கடையில் 20 பணியாளருக்கு மேல் இருந்தால், ESI மற்றும் PF கொடுத்தாக வேண்டும். ESI – 4.5%, PF – 12% பணியாளருக்குகாக நீங்கள் கொடுத்தாக வேண்டும்.

கேள்வி – 2

நான் வீட்டுமனைப் பொருட்களை சீனா, ஜப்பான், கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்பொருளை இந்தியாவில் விற்பனை செய்ய சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டும்?

பதில்- 2
 
முதலில் TN VAT Act படி மற்றும் CST Act ன் படி நீங்கள் பதிவு செய்ய வேண்டும். பிறகு Import Export code னை பெற்று வீட்டு மனை பொருட்களை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்யலாம். இதற்கு விற்பனை வரியும் இறக்குமதி வரியும் கட்ட நேரும்.

கேள்வி – 3

நான் குடிசைத் தொழில் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறேன். என் வியாபாரத்தை விரிவு படுத்த கடன் பெற வேண்டும் என்றால் நான் பெறும் கடனுக்கு வட்டி மானியம் ஏதேனும் உண்டா?

பதில் – 3

வட்டி மானியம், மற்றும் முதலீடு மானியம் தொடர்பாக District Industrial Center ல் தகவல் பெற்று பயனடையலாம்.

கேள்வி – 4

நான் ஒரு ஏற்றுமதி தொழிலை துவங்க எண்ணியுள்ளேன். நான் சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டும்?

பதில் – 4

TIN பதிவும் IE Code ம் பெற்று நீங்கள் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும்.

About தேவராஜ்.ஈ. CA

View all posts by தேவராஜ்.ஈ. CA →