டேக்ஸ் கார்னர்…

m7mq2fjcகேள்வி – 1

என் தொழிற்சாலையில் உற்பத்தியில் சேதாரமான இரும்பு, செம்பு, தகரம் போன்றவற்றை நாங்கள் ஒரு சில வேளைகளில் Scrap க்கு விற்பதும் உண்டு.  பிற வேளைகளில் எங்கள் வார்ப்பாலைகளிலே மீண்டும் பயன்படுத்துவதும் உண்டு.  இதை ஒழுங்காகக் கணக்கு வைத்து பராமரிப்பது எப்படி?

பதில் – 1

அன்றாடம் உற்பத்தியாகும் Scrap அதற்கென Stock Register ல் குறித்துவைக்க வேண்டும்.  இதிலிருந்து சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தால் முன்இருப்பு + உற்பத்தியிலிருந்து கழிக்க வேண்டும்.  அதுபோலவே, விற்பனை செய்யும் Scrap யையும் கழிக்க வேண்டும்.  எந்நேரமும் கையிருப்பு சரக்கும் Register ல் உள்ள எண்ணிக்கையுடன் ஒத்துப் போக வேண்டும்.

கேள்வி – 2

நான் பணிபுரியும் நிறுவனம் எனக்கு இலவச உடற்பரிசோதனை, கண்பரிசோதனை ஆண்டுக்கு ஒரு முறை செய்து தருகிறார்கள் அந்தப் பலனை நான் அடைவதால் எனக்கு வரிச்சுமை உண்டா?

பதில் – 2

இலவசமாக நிறுவனம் செய்து தரும் பரிசோனை அனைத்தும் வருமான வரிச் சட்டத்தின்படி வருமான வரிக்குட்படும்.

கேள்வி – 3

நான் ஓர் மருந்துக் கடையை துவங்க நினைக்கிறேன்.  அதற்கு விதிமுறைகள் மற்றும் கணக்கு வழக்குகளைப் பற்றி ஒரு ஆலோசனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் – 3

மருந்துக் கடை துவங்க முதலில் TIN எடுக்க வேண்டும்.  பிறகு Drug licence எடுக்க வேண்டும்.  கொள்முதல், விற்பனை, செலவு மற்றும் வங்கி அனைத்திற்கும் கணக்கு சரியாக வைத்திருக்க வேண்டும்.

கேள்வி  – 4

ஓர் தேயிலைத் தோட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிவர கணக்குக்கு எப்படி கொண்டு வருவது?

பதில் – 4

வன விலங்குகளினால் ஏற்படும் நட்டத்தை செலவுக் கணக்கில் பற்று வைத்துக் கணக்கெழுத வேண்டும்.  இது தேயிலைத் தோட்டம் சரிசெய்வதற்கான பதிவே ஆகும்.  உற்பத்தி குறைவிற்கு எந்த வித பதிவும் தேவையில்லை.

About தேவராஜ்.ஈ. CA

View all posts by தேவராஜ்.ஈ. CA →