தமிழ்நாடு வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் சீர்த்திருத்தம்

buildingநமது தமிழகக் கட்டிடச் சட்டத்தில் (வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் The Tamiladu Buildings (Lease and Rent Control 1960 )) தமிழக அரசு விரைவில் திருத்தங்கள் கொண்டு வர முனைந்துள்ளது.  வீடுகள் வாடகைக்கு விட்டு வரும் அனைவரும் பயந்து வருவது இரண்டு வி­யங்களுக்குத் தான்.  முதலில் இவர்கள் காலி செய்ய வேண்டிய போது உரிய காலத்தில் அந்த வீட்டையோ கடையையோ காலி செய்து தருவார்களா என்றும்,  இரண்டாவது வாடகையைக் குறித்த காலத்திற்குப் பின் உயர்த்திக் கேட்டால், கிடைக்குமா?  மேலும் சம்மந்தப்பட்ட சொத்தை நன்றாகப் பராமரிப்புச் செய்வார்களா என்றும் தான்.  தற்போது உள்ள சட்டத்தில் வாடகைக்குக் குடியிருப்போவோருக்குத்தான் சாதகமாக உள்ளதாக பல வீட்டு உரிமையாளர்கள் கூறுகின்றார்.  நீதி மன்றங்களில் பல வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதே இதற்குச் சான்று.

மத்திய அரசின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2015 (நாட்டில் உள்ள பல பழைய சட்டங்களைச் சீர்திருத்திச் அமைப்பது போல) இச்சட்டத்தையும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சமநிலைக்கு கொண்டு வர பல மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.  பல அரசுக் கட்டிடங்களுக்கு வாடகையும் பல ஆண்டுகளாக தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கிடைக்காமல் இருப்பதும் இந்தப் புதிய சட்டத்தின் கீழ் நிவர்த்தி பெறும்.   வாடகை ஒப்ந்தத்தில் வாடகை காலம் மற்றும் வாடகையை உயர்த்துவதற்கான வாசகங்கள் இருந்தும் பல நேரங்களில் அதை நடைமுறைப் படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.  அதற்குத் தற்போது உள்ள சட்டத்தில் வாடகைக்குக் குடியிருப்போருக்கே அதிகப்படியாக சாதகமாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர்.  பல வழக்குகளில் வீட்டுக்காரர்களுக்கு வீட்டை காலி செய்ய முடியாமல் உள்ள நிலையை நாம் அனைவரும் கண்டிப்பாக் கண்டிருப்போம்.

அப்படியிருக்கையில் இந்தப் புதிய சட்டத்தில் ஒப்பந்தத்தில் குறித்த காலத்திற்கு மேல் வாடகைக்கு இருப்போர் வாடகை ஒப்பந்தத்தைப் புதிப்பித்தாக வேண்டும்.  வீட்டைக் காலி செய்யத் தாமதங்கள் மற்றும் இடையூறு செய்வது மிகவும் கடினம்.  மேலும் வீட்டு உரிமையாளருக்கு வாடகை உயர்த்தி கேட்க உரிமையும் உண்டு.  வாடகைக்கு வரும் முன் இனிமேல் மூன்று மாத வாடகையை ( தற்போது ஒரு மாதம்) முன்பணமாகத்  தர  வேண்டியதும் சட்டமாகிறது. அவ்விடத்தில் வாடகைக்குத் தொடர்ந்து இருக்க புதிதாக செய்து கொண்ட ஒப்பந்தமே பொருந்தும். பழைய ஒப்பந்தம் புதுப்பிக்காவிட்டால் பழைய ஒப்பந்தமுறை பொருந்தாததனால் புதுப்பித்தல் அவசியமாகிறது.

இந்தச் சட்டம் தமிழக அரசு விரைவில் பரிசீலனை செய்து அமலுக்குக் கொண்டு வர முனைந்துள்ளது.

மாற்றுப் பார்வை

இந்தியாவில் பெரும்பாலானோர் ஏழைகள் தான்.  அதில் வீடு இல்லாதவர்கள் தான் ஏராளம்.  அவர்களிடம் முன்று மாத வாடகை முன் பணம் கேட்டால் அந்தப் பணத்தை அவர்கள் செலுத்த முடியுமா?  வாடகை ஒப்பந்த காலம்  முடிந்த  பின்னர் வாடகை  உயர்வைத் தாங்கி கொள்ள முடியுமா என்ற அடிப்படையான கேள்விகள் உள்ளன.  அடுத்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டு மனை என்ற மத்திய அரசு கொள்கை வடிவமைத்துள்ளதும் சொந்த வீட்டுக்கடன் வட்டித் தொகை மானியம் அளித்து வந்தும் அனைவருக்கும் வீடு என்ற நிலையை அடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே யதார்த்தம்.  இந்த ஏழை மக்கள் பெரும்பாலானோர், படிக்காதவர்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு, இல்லாதவர்கள். அவர்கள் வேலை செய்யும் நேரமும் அதிகம் ஆகையினால் இச் சட்டம் அமல்படுத்துவது கவனமாகச் செய்ய வேண்டியதொன்றாகும்.

வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பது மறுக்க முடியாது.  ஒருவரின் உழைப்பில் உருவான ஒரு சொத்தைக் கொண்டு இன்னொருவர் அதற்குரிய வாடகையையும், பராமரிப்பும் செய்யாமலிருப்பது தர்மம் அல்ல, அதே போன்று ஒருவரிடம் அளவுக்கு மீறிய வாடகையோ அல்லது வாடகை உணர்வையோ கேட்பது சரி என்றாகாது.  ஆகையினால் இந்தப் புதியச் சட்டம் இந்த இடைபாடுகளைச் சரி செய்யும் வண்ணம் என்றும் அனைவரும் எதிர்பார்த்துக் அனைவரும்காத்திருக்கின்றனர்.