திறன் பேசி(Smart Phone)

திறன் பேசி என்பது கணினியில் உள்ள பல முக்கியமான அம்சங்களை நம் கைக்குள் செல்போன்

வடிவத்தில் உள்ள ஓர் கருவியாகும். வெவ்வேறு பயன் மற்றும் தேவைகளுக்காக இருந்த கணினியும்

தொலைபேசியும் தற்போது ஒரு கருவியாக மாறி வருகிறது. இதனால் கணினிப் பகுதியும்

தொலைபேசிப் பகுதியும் இணைந்து ஒரு புதிய வியாபாரப் பகுதியாக (Business Segment)  உருவாகியுள்ளது.

நம் எதிர்காலம்……. திறன் பேசியில் (smart Phone). செல்போன்கள் என்றாலே பொதுவாக சமீப காலத்தில் தேவைக்கு அதிகமாக உபயோகிக்கப் படுகின்றன என்று ஒரு கருத்து உண்டு இந்த ஒரு வியூகம் மக்கள் மனதில் ஏற்பட காரணம் செல்போன் வாங்குவதற்குண்டான கட்டணம் (5 வருடத்திற்கு முன்பைவிட) அதனைப் பயன் படுத்துவதற்கான செலவும் குறைவாக உள்ளதுதான். இருப்பினும் செல்போன் இன்று அனைத்துத் தரப்பினரிடமும் அவர்களின் அன்றாட அத்யாவசிய தேவைகளுக்குப் பயன்படுகிறது.

அறிமுகக் காலத்தில் அடிப்படைத் தேவையான, தொடர்பு மற்றும் குறுஞ்செய்தி பறிமாற்ற வசதி கொண்ட கைபேசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட புளு டூத் (Blue tooth) with GPRS, கேமரா, FM ரேடியோ, மெமரி கார்டு வசதிகள் கொண்ட செல்போன்கள் அதிகமாகப் புழக்கத்திற்கு வந்தன. இந்த ரக போன்களில் உள்ள அனைத்து வசதிகளுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்புப்பெற்று, உபயோகமும் மிக அதிகமாக இருக்கிறது. அடுத்த காலத்திற்கேற்ப அதிக பயனளிக்கும் போன்களே “”திறன் பேசி” என்று அழைக்கப்படும் “Smart Phone”

திறன் பேசி என்பது கணினியில் உள்ள பல முக்கியமாக அம்சங்களை நம் கைக்குள் செல்போன் வடிவத்தில் கொண்டு உள்ள ஓர் கருவியாகும். வெவ்வேறு பயன் மற்றும் தேவைகளுக்காக இருந்த கணினியும் தொலைபேசியும் தற்போது ஒரு கருவியாக மாறி வருகிறது. இதனால் கணினிப் பகுதியும் தொலைபேசிப் பகுதியும் இணைந்து ஒரு புதிய வியாபாரப் பகுதியாக (Business Segment)  உருவாகியுள்ளது. கணினியில் உள்ள இயக்குதளம் போல திறன் பேசியிலும் இயக்குதளம் பொருத்தி பயன்பாட்டிற்கு வந்துள்ளது, அவையில் பிரபலமான ஒரு சில இயக்குதளம் பற்றி ஒரு சிறிய விளக்கம்.

ஆன்ட்ராய்டு (Android)

கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆன்ட்ராய்டை இயக்குதளமாகக் கொண்டு இயங்கும் செல்போன்களை, தயாரிக்கக்கூடிய நிறுவங்கள். (HTC, LG, SAMSUNG, MOTOROLA, SONY, ASUS, MICROMAX, KARBON, SPICE, HUAWEI, VIDEO CON, IDEA CELLULAR, i-BALL, XOLO) போன்றவையாகும்.

ஆன்ட்ராய்டு இயக்குதளத்தில் ஒவ்வொரு படைப்பு பகுதியில் அதிகபடியான (Version) இவற்றிற்கு உணவுப் பொருட்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது உதாரணமாக : (UP Cake – 1.5, Donut – 1.6, Eclair -2.0, 2.1, Froyo – 2.2, Ginger Bread – 2.3, Honey Comb – 3.0, ICE-Cream Sandwitch – 4.1, Jelly Bean – 4.1) மென்பொருள்கள் உள்ளன. இவைற்றில் ஒரு சில  இலவசமாகவும் மன்றும் பல கட்டணமுறையில் பெற்றுக் கொள்ளலாம்.

வின்டோஸ் மொபைல் ( Windows Mobiles)

மைக்ரோ சாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த இணையதளம் மூலம் கணினியிலும் ஒரு சில மென் பொருட்களை இக்கருவி மூலம் அறிமுகபடுத்தியுள்ளது. வின்டோஸ் மொபைல் எனும் இயக்குதளத்தை மையமாக கொண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் –  Nokia, samsung, HTC.

பிளாக் பெர்ரி இயக்குதளம் (Black berry OS)

இந்த இயக்குதளத்தை Black Berry  தயாரிக்கும் கருவிகள் மூலமே இயக்க முடியும். இதைத் தயாரித்த நிறுவனம் கனடாவைச் சேர்ந்த ரிசர்ச் இன் மோசன் (Research in Motion – RIM). இதற்குப் பிளாக்பெர்ரி எண்டர்பிரைஸ் சர்வர் என்னும் இயந்திரம் மூலம் வியாபாரத் தொடர்புக்கு உண்டான மின்னஞ்சல்கள், கேலண்டர், நோட்ஸ், Task இவைகளைக் கம்பியில்லா (wireless )ஏவர்சக்தி மூலம் மைக்ரோசாப்ட், லோட்டஸ் மற்றும் நாவல் நிறுவனங்களின் தொழில் நுட்ப கோள்களுக்கு இடைமுகமாக இருந்து தகவல்களை வேகமாக ஒவ்வொறு 3 நிமிடத்திற்கும் பரிமாற்றியளிக்க கூடியதாக இருக்கிறது.

திறன்பேசியும், வியாபாரப் பெருக்கமும்:

நடமாடும் வலைதளம் (Mobile Website)

ஒரு நிறுவனத்தின் வலைதளம் மூலம் அறிவிக்கப்படும் தகவலை எளிதாக இந்தக் கருவியின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

OR கோட்ஸ் :

இதன் மூலம் நிறுவனங்கள் அளிக்கக்கூடிய (QR  Codes Scanning) செய்து QR கோட்ஸ் Apps    மென்பொருள் மூலம் அதனைப் பார்வையிட்டால் அந்நிறுவனத்தின் தகவல்கள் (தொலைபேசி தொடர்பு, வலைதள முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் பல தொடர்புகளைக் சுலபமாக QR கோட்ஸ் மூலம் பார்த்துக் கொள்ளலாம் மற்றும் GPS-யை இயக்க எந்த ஒரு நிறுவனத்தின் வரைபட முகவரியையும் அறிந்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர் நம்மைத் தேடி வருவது மிக மிக எளிதாகும் எந்த ஒரு இடத்திலிருந்தும் நம் வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

செல்போன் கருவி கணினியின் உபயோகங்களைக் கொடுத்தது அதன்பின் இரண்டும் சேர்ந்து டேப்லட் (Tablet)ஆக உருவெடுத்து  இதில் அழைப்பு வசதியும் கொண்ட கருவிகள் தற்போது அறிமுகமாகி உள்ளது தற்போது இக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் – Samsung, Iberry, Zinc, Swide, HLC, i-ball  ஆகியவையாகும்.

செல்போன்களைப் போல இக்கருவிகளின் விலை குறையும் போது அனைத்துத் தரப்பு மக்களும் இதன் பலன்களைப் பெற்றுப் பயனடையலாம்.  இக்கருவிகளின் செயல்திறன் தொழில்நுட்ப ரீதியாக மேம்படும் போது கணினி மற்றும் செல்போன் கருவிகளின் அனைத்துப் பயன்களை இந்த ஒரு கருவியே முழுமையாக அறிவித்துவிடும்.  நிறுவனங்கள் இக்கருவி மூலம் தொழிலைப் பெறுக்கிக் கொள்ள இன்றே திட்டம் தீட்ட வேண்டும். உதாரணமாக TNPSC  தேர்வுகள் கூட இக்கருவி மூலம் வந்தால் முறைகேடு கனற்ற தேர்வு முறையை உருவாக்கலாம்

கோவையில் தற்போது திறன் பேசி மூலம் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் Just Dial, Le-Meridian Hotel, Indiaproperty.com