துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

நமது கோவை மாவட்டம் சூலுஏர் பிரிவு அருகே துப்பாக்கி முனையில அதிரடி kinappingகொள்ளை முயற்சியை போலீஸ் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து முறியடித்தனர்.  கோவை வணிகம் சிறப்பு நிருபர் தெரிவிக்கையில், திரு.லோகநாதன் (வயது 30) என்பவர் பாரத் பெட்ரோல் பங்கில் (இளங்கோ சர்வீஸ் ஸ்டேஷன்) காசாளராக பணி புரிந்து வருகிறார்.  அவர் அன்றைய (21.05.13) தேதியில் வசூல் ஆன பணத்தை எடுத்துக் கொண்டு சுமார் ரூ.24.60 லட்சம் வங்கியில் செலுத்துவதற்காக (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – நஞ்சப்பா ரோடு) தனது ஜீப் டிரைவரோடு (திரு.ஈஸ்வரன்) சென்று கொண்டு இருந்தார். அப்போது சுமார் காலை 11.30 மணியளவில், கொள்ளை கும்பல் ஒன்று காரில் வந்து

ஜீப்பிற்கு பின்புறம் மோத – பின்பக்கம் ஜீப்பிற்கு சேதாரமானது. இதை கண்டறிவதற்காக ஜீப்பிலிருந்து கீழ் இறங்கிய உடன் கொள்ளைக் கும்பல்  அவர்களிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி அவர்களிடம் இருந்த ரூ.24.60 லட்சத்தை  பிடுங்கியவுடன் காரில் பறந்தனர்.  உடனே திரு.லோகநாதன் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் (திரு. இளங்கோ) தொலைபேசி மூலம் தெரிவித்தார்.  அவர் உடனே காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். துரித நடவடிக்கையில் காவல் துறை தகவல் கிடைத்ததும் காவல் துறை சாலை வழி போக்குவரத்தை  கண்காணித்தனர். கொள்ளைக் கும்பலை தொடர்ந்தே ஈஸ்வரன் மற்றும் லோகநாதன் சென்று கொண்டு இருந்தனர்.பெட்ரோல் பங்க் உரிமையாளர் வாகராயம்பாளையம் பேரூராட்சியின்  தலைவர் திரு.சித்திஸ்வரன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் பொது மக்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் கொள்ளை கும்பலை மடக்க பெறும்  முயற்சியாக பாறைகள் மற்றும் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி வழி மறித்தனர்.

நேரில் இச்சம்பவத்தை கண்டவர்கள் கொள்ளை கும்பலை விரட்டி சென்ற போது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஓரு புறம் பொதுமக்கள் மற்றும் ஈஸ்வரன் மற்றும் லோகநாதன் மறு புறம் தகவல் அறிந்த கருமத்தப்பட்டி காவல் துறையினர் வந்து சாலையை மறித்தனர்.  வாளப்பாளையம் வந்தவுடன் கொள்ளையர்களின் கார் நிலை தடுமாறி அங்கிருந்த பள்ளத்தில்  கவிழ்ந்தது.  அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரண்டு  கைதுப்பாக்கி, அரிவாள், போலியான வண்டி (கார்) நம்பர் பிளேட்டுகள்  போன்றவைகள்  கைபற்றப்பட்டன.

கொள்ளையர்கள் நான்கு பேரில் இரண்டு பேரை மட்டுமேகைது செய்த போலீசார் மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.  கொள்ளையர்களின் பெயர் பழனிச்சாமி,  சுந்தரம் (டிரைவர்) – கோபிசெட்டிபாளையம், மற்றும் சக்திவேல். நான்காவது நபரின்  பெயரை விரைவில் தெரிவிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து உயர்மட்ட காவல் துறை அதிகாரி தெரிவிக்கையில் – ஐந்து தனிப்படை அமைத்து தப்பிய கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் மற்றும் அவர்கள் துப்பாக்கி எப்படி வாங்கினார்கள் என்றும் விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →