தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்…

agriஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% சதவிதமாகவே உள்ளது. இதனால் இந்திய அரசின் வனக்கொள்கையின் அடிப்படையில் ஓரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 33 % வனங்களின் பரப்பாகஇருக்க வேண்டும். இந்தியாவின் வனங்களின் அளவு குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதனுடைய உற்பத்தித் திறனும் குறைவாக (i.e) 0.5 m3/ha/year உள்ளது. நாட்டின் வனப்பரப்பும் அதன் உற்பத்தித் திறனம் குறைவாக உள்ளதால், வனப்பொருள்களின் தேவையை நம்மால் உடுகட்ட முடிவதில்லை. வனப்பொருள்களின் தேவைக்கும் அதன் உற்பத்திக்கும் இடையே பெருமளவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வனங்களை மட்டும் சார்ந்திராமல், விவசாய நிலங்களில் வேளாண் மற்றும் பண்ணைக் காடுகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களையும் மக்களுக்குத் தேவையான கட்டுமான மற்றும் எரிபொருள் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் என்ற ஓரு புதிய திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகம் செய்து அதன் மூலம் வனங்களின் பரப்பை அதிகப்படுத்தத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களும் இணைந்து ஓப்பந்த முறைச் சாகுபடித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகின்றன.
மரம் சார்ந்த தொழிற்சாலைகள்:
தமிழகத்தில் தடிமரம், காகிதம், தீக்குச்சி, பிளைவுட் போன்ற பல்வேறு மரம் சார்ந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாகக் காகிதம் மற்றும் தீக்குச்சித் தொழிற்சாலைகளுக்கு மரங்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 39 காகித இலைகள் இருந்தாலும் 2 காகித இலைகள் மட்டும் மரத்தை மூலப்பொருளாக நம்பியே உள்ளன. இந்தக் காகித இலைகளின் தேவை மட்டும் சுமார் எட்டு லட்சம் டன் மரக்கூழ் மரமாகும். மேலும் தமிழகத்தில் சுமார் 6000 க்கும் மேற்பட்டட தீக்குச்சித் தொழிற்சாலைகள் மரங்களைச் சார்ந்தே உள்ளன. இந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கும் தேவையான மரம் சார்ந்த மூலப்பொருட்களை வனங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பெற முடிவதில்லை. இதலால் காகிதம் மற்றும் தீக்குச்சி மரங்களை வனங்கள் இல்லாத பகுதிகளில் அறிமுகம் செய்து ஓப்பந்த முறையில் மரச்சாகுபடி செய்வதற்கு இந்தக் காகிதம் மற்றும் தீக்குச்சித் தொழிற்சாலைகள் பெருமளவில் உடுபடுத்தப்பட்டு ஓப்பந்த முறைச் சாகுபடியைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது.
மரம் சார்ந்த ஓப்பந்த முறைச் சாகுபடி (CONTACT TREE FARMING )
ஓப்பந்த முறைச் சாகுபடி வேளாண் துறையிலும், தோட்டக்கலைத் துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெருமளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனால் தொழிற்சாலை சார்ந்த மரங்களில் ஓப்பந்த முறைச் சாகுபடி என்பது அறிமுக அளவிலேயே இருந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் தரமான மற்றும் அதிக மகசூல் தரும் ரகங்கள் இல்லாததும் மற்றும் சந்தை விலை பற்றிய சந்தேகங்களும் இகும். இனால் வனக்கல்லூரி மற்றும் இராய்ச்சி நிலையத்தில் காகிதம் மற்றும் தீக்குச்சி மரங்களில் உயர்தர மரங்களைக் கண்டறிந்து அவற்றை குளோனல் முறையில் உற்பத்தி செய்து அதிக மகசூல் தரும் வனத் தோட்டங்களை உருவாக்கி, அதைத் தொழிற்சாலைகளுடன் இணைந்து மாதிரித் தோட்டங்களாக உருவாக்கியுள்ளது. அதன் பலனாக, விவசாயிகள் அதிக அளவில் ஓப்பந்த முறைச் சாகுப்படியால் உர்க்கப்பட்டு சுமார் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 16 மாவட்டங்களில் குறு மற்றும் பெரு விவசாயிகள் ஓத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

KTP1

ஃப்பந்த முறைச் சாகுபடித் திட்டங்கள்

மரம்சார்ந்த ஓப்பந்த முறைச் சாகுபடியில் நான்கு விதமான திட்டங்களை அறிமுகம் செய்து விவசாயிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1. வேளாண் மற்றும் பண்ணைக் காடுகள் திட்டம் (AGRO AND FARM FORESTRY)
இந்தத் திட்டத்தின் மூலம் குறு நில விவசாயிகள் பயன் பெறலாம் (1 ஏக்கர் வரை). இந்த திட்டத்தில் நில மேம்பாடு, சீர்திருத்தம், மர வளர்ப்பு, மர மேலாண்மை மற்றும் மர அறுவடை வரை உள்ள அனைத்துச் செயல் முறைகளும் விவசாயிகளே தங்கள் செலவில் செய்து முடிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் தரமான குளோனல் முறையில் உற்பத்தி செய்யபட்ட நாற்றுகள் மானிய விலையில் விவசாயிகளுக்குத் தொழிற்சாலைகள் மூலம் வழங்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வனக்கல்லூரி விஞ்ஞானிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள். மரங்கள் முதிர்ந்த காலத்தில், தொழிற்சாலைகள் தங்கள் சொந்தச் செலவில் மரங்களை வெட்டி, மரங்களுக்குக் குறைந்தப்பட்ச இதார விலையாக ரூபாய் 1800 முதல் 2100 வரை ஓரு டன்னுக்கு அல்லது அறுவடை காலத்தின் பொழுது சந்தை விலை, இதில் எது அதிகமோ அதை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
2. மூலதனக் காடுகள் (CAPTIVE PLANTATION)
இந்த திட்டமானது மரம் தொழிற்சாலை களுக்காக அவர்களுக்குத் தேவையான தரமான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கான திட்டம். இந்த திட்டத்தில் நான்கு செயல் முறைகள் தீட்டப்பட்டு அதில் கீழ்க் கண்ட இரண்டு திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுத் தொழிற்சாலைப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
A) வருவாய்ப் பங்கீட்டுத் திட்டம் (BENEFIT SHARING)
இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 25 ஏக்கர் நிலப்பரப்பை ஓரே இடத்தில் பெற்று இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், ஓப்பந்த முறை அறுவடை வரை உள்ள அனைத்துச் செலவினங்களையும் ஏற்றுக் கொண்டு மரங்கள்அறுவடை செய்த பிறகு கிடைக்கும் வருவாயை நில உரிமையாளர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறது. இந்த வருவாய்ப் பங்கீடு என்பது நீர் இதாரம் உள்ள இடங்களுக்கு 40 சதவீதமும், மானாவரி இடங்களுக்கு 30 சதவீதமும் நில உரிமையாளர்களுக்கு வருவாய்ப் பங்கீடாக வழங்கப்படுகிறது.
B) குத்தகைச் சாகுபடித் திட்டம் (LEASED LAND MODEL)
இத்திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை மரம் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையிவல் வழங்கி மர வளர்ப்பில் உடுபடலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நீர் இதாரம் உள்ள இடங்களுக்கு ஓரு ஏக்கருக்கு ஓரு வருடத்திற்கு ரூ.3000 மும், மானாவரி நிலங்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ. 1000 மும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் ஓப்பந்தம் செய்துகொண்ட நாளிலிருந்து ஓரு மாத காலத்திற்குள் ஓப்பந்தத் தொகை வழங்கப்படும். குறைந்த பட்ச ஓப்பந்த முறைக் காலமாக சுமார் 6 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓப்பந்த முறை வேளாண் காடுகள் பகுதி இரண்டில் தொழிற்சாலை சார்ந்த மரங்கள் தொழில் நுட்பங்கள் பற்றி மற்றும் சாகுபடி முறைகள் பற்றி விரிவாகக் காணலாம்.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →