தொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை ! பொறுமை !பொறுமை !

0jasmol7வாழ்க்கை நெடுகிலும்
தொடர்கிறது காத்திருப்பு !

நாம் காத்திருப்போம்
ஒன்றைப் பெறுவதற்கு !!!!
-பா.கண்ணன்.

இதை எழுதிய பா.கண்ணன் எனும் சிந்தனையாளர் கூறுகிறார்,

“ படிக்க 11 ஆண்டுகள்;
வார விடுமுறைக்கு 7 நாட்கள்;
ஊதியம் பெற 30 நாட்கள்;
குழந்தை பெற 10 மாதம்”

காத்திருக்கிறோம். அதே போல் மகத்தான வெற்றியைப் பெற, சாதனை புரிய, தொழிலில் முன்னேற ஆண்டுக் கணக்கில் தயாரிப்புகள், பயிற்சிகள் தேவை. நிறையவே பொறுமை வேண்டும். “உச்சியைத் தொட” இது நமது தமிழகத் தொழில் முனைவோரைப் பார்த்துக் கூறுவதாகத்தான் நினைக்கிறேன்.இன்று இளைஞர்கள், யுவதிகளும் புதிய தொழில் தொடங்குகிறார்கள்; அரசு வங்கிக் கடன் பெறுகின்றனர். பயிற்சி பெறுகின்றனர். ஆனால் பெரிதாக வளரப் பொறுமை இல்லை. பொறுமையாக முன்னேற வேண்டும். சிறுகச் சிறுக வங்கிக் கடனைக் கட்ட வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டும். சிறிய அளவில் தொடங்கி விளம்பரம் செய்து தன் வாடிக்கையாளர்களிடம் பெயர் பெற வேண்டும். அதன் பின் தான் வெற்றியைத் தொட முடியும். நிலம் வாங்கலாம் ; வீடு கட்டலாம் ; கார் வாங்கலாம் ; சுற்றுலாச் செல்லலாம்.

எனக்குத் தெரிந்த என் கல்லூரி நண்பர் சென்னையில் இருக்கின்றார். பிரபல கிளீனிங் பவுடர் தயாரிப்பு நிறுவனத்தை 1975 ல் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.

அவர் கூறுவார், “Slow and steady ” மெதுவாக முன்னேறு முன்னேற்றம் உறுதி” மேலும் அவர் தொடங்கிய நிறுவனம் 40 ஆண்டுகளுக்குப் பின்னும் விளம்பரம் செய்கிறது. ஏன் அதிக மக்கள் மேலும் மேலும் அவரது பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக.

தினமலர், தினத்தந்தி, TVS, VGP, வசந்த் & கோ இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரே நாளில் முன்னேறி விட்டனவா. 50 ஆண்டு கால உழைப்பு ! உழைப்பு ! உழைப்பு !

முன்னேற்றம் நோக்கிய

பொறுமை ! பொறுமை ! பொறுமை !

எனவே தினமும், தினந்தோறும் இந்த நிறுவனங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன.

சில வாய்ப்புகள் தானே உருவாகும். ஆனால் சில வாய்ப்புகளைக் காத்திருந்துதான் பெற வேண்டும். எனவே புதிய தொழில் முனைவோரே!
முன்னேற்றம் ஒரு நாளில் வராது உங்கள் பொருள் தரமானது என மக்கள் வாங்கிப் பயன்படுத்தி, மக்கள் மனதில் பதிய வருடக் கணக்கில் ஆகும். நல்ல தரம் வேண்டும். சிறந்த ஊழியர்கள் கிடைக்க வேண்டும். நன்கு விற்பனை செய்யும் ஏஜண்டுகள் கிடைக்க வேண்டும். அதன் பின்பு தான் முன்னேற்றம் தானே வரும். அதுவரைப் பொறுமையாக உழையுங்கள். வீண் செலவு செய்யாமல் கடனைக் கட்டி, மக்களிடம் நன் மதிப்பு பெற உழையுங்கள்

பொறுமை வெற்றி பெறுமா? வெற்றி பெறும்

தமிழ்நாட்டில் உள்ள (முக்கிய) இன்குபேட்டர்கள்

1. சத்ய பாமா பல்கலைக் கழக டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்கள், ஜேப்பியர் நகர், ராஜிவ் காந்தி சாலை, சென்னை 600 119. போன் 24503308 E -mail – kavisheela@yahoo.com

2. கோவை இன்னோவே­ன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டர், குமரகுரு தொழில் நுட்ப கல்லூரி, சின்னவேடம்பட்டி, கோவை – 49. போன் 0422 – 2661100 E-mail – vishwanath@kctbs.ac.in

3. டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், தியாகராஜர் இஞ்சினியரிங் கல்லூரி, மதுரை -15 போன் 0452-2482240 E-mail –  murali@tec.edu.

4. II T சென்னை இன்குபேட்டர் செல்,II T. M Research Park, Chennai-36.ph: 66469869  Email – Office@incubation.intimatin   

5. V.I.T..டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், V.I.T.. பல்கலைகழகம், வேலூர் – 14 போன் 0416 – 2202303 E-mail: tbicoordinator@unit.ac.in

6. பெரியார் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம் தஞ்சாவூர் ம்வீ. போன் 04362 – 264520, E-mail :info@periyartbi.org.

7. அதியமான் இஞ்சினியரிங் கல்லூரி இன்குபேட்டர், டாக்டர் எம்.ஜி.ஆர். நகர் ஒசூர் – 635109, கிருஷ்ணகிரி ம்வீ. போன் 04344 260570, E-mail principal@adhiyamaan.ac.in

8. B.I.T. டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், சத்யமங்கலம், ஈரோடு ம்வீ. 638 401. போன் 04295 – 221298. E-mail: tbibit@rediffmail.com.

9. IITM. ரூரல் டெக்னாலஜி & பிசினஸ் இன்குபேட்டர்,IITM ரிசர்ச் பார்க், தரமணி, சென்னை 113, போன் 044-66469872.E-mail: ivaidye@rtbi.in

10. அண்ணா பல்கலைக் கழக டெக்னாலஜி இன்குபேட்டர், சென்னை – 25, போன் 22350772 E-mail : meenakshi@annauniv.edu