“தொழில் முனைவோரே” “தொடர்புகளில் தான் வளர்ச்சி இருக்கிறது”

6gv931iqதொழில் முனைவோரே, வியாபாரிகளே, நிர்வாகிகளே! உங்கள் தொழில் சிறப்படைய, நீங்கள் முன்னேறப் பலருடைய தொடர்பு உங்களுக்குத் தேவை வெற்றி பெற இரண்டு வி­ஷயங்களைச் செய்ய வேண்டும்.

1. மனிதர்களுடன் தொடர்பு          2. அதை மேம்படுத்திக் கொண்டே இருப்பது

ஒரு தொழில் அதிபருக்கு நிறுவனத்திற்குள்ளே உள்ள தொடர்பு பங்குதாரர், நிர்வாகிகள் பணியாளர்கள், வெளியே தொடர்பு அதிகாரிகள், மூலப்பொருட்கள் விற்போர், விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்.

இத் தொடர்புகளில் தான் வெற்றி இருக்கிறது.  கிடைத்த தொடர்புகளை வலுப்படுத்த ( 1 ) எதிரிகளிடம் கூடப் பிரியம் காட்டுங்கள்.நண்பராகிவிடுவார்கள்.  ( 2 ) ஒவ்வொருவரிடமும் ஆர்வம் காட்டுங்கள்; அவர்களும் உங்கள் நட்பில் ஆர்வமாய் இருப்பார்கள் ( 3 ) மற்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை எடுத்துப் பேசுங்கள் ( 4 ) ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை, அல்லது நெருக்கடி, அல்லது விபத்து இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வரலாம்.  அப்பொழுது உதவத் தயாராக இருங்கள்.

நட்பு வலுப்பட தபாலில், இ மெயிலில், அலைபேசியில், வலைத்தளம், மீடியா மூலம் நேசிப்பவர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருந்தால் மட்டுமே அவர்களும் தொடர்பில் இருப்பார்கள்.  பேசும் பொழுதும், தொடர்பிலும் எப்பொழுதும் உங்களைப் பற்றி,உங்களது சாதனை, பெருமை பற்றியே பேசிக்கொண்டிராதீர்கள்.  உங்கள் பிரச்சனைகளை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.  மற்றவர்களிடம் பேசும் பொழுது அவர்களைப் பற்றி, உடல்  நலம் பற்றி, எதிர்காலம் பற்றிப் பேசினால் அவர்கள் உங்களை நேசிப்பார்கள்.

நீங்கள் எளிதில் கோபப்படுவராய், வெறுப்புக் கொள்கிறவராய் இருந்தால் உங்கள் பார்வையில் இருந்து விலகவே ஒவ்வொருவரும் விரும்புவார்கள். இன்முகம், நல்ல அன்பான வார்த்தைகளையும் பேசுபவராக இருந்தால் அனைவரும் உங்களை நேசிப்பார்கள்.  தொழிலும், செல்வாக்கும் வளரும்.

மக்கள் தொடர்பு நமது திறமைகளை மேம்படுத்தும்.  நல்ல அனுபவங்களை நமக்கு வழங்கும்.  நம்  வளர்ச்சிக்கு உறுதுணையாகும்  பொருமை, குறைகாணும் போக்கு, போன்றவற்றுக்கு மனதில் இடம் தராதீர்கள்.   நம் வாழ்வில் வரும் ஒவ்வொருவரும் நம்முடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள்.  எனவே அத்தொடர்பை தொடரச் செய்வது தான் உங்கள் வெற்றி.

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தொடர்புகளில் மட்டுமல்ல மனதளவில், துணிச்சலும், முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

1. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

2. மற்றவர்களை வாழ்த்துபவராக இருக்க வேண்டும்.

3. எதிர் மறைக் கருத்துடையவராக, அதையே பேசுபவராக இருக்கக் கூடாது.

4. ஆக்க பூர்வ சிந்தனைகளை வளருங்கள்.

5. சிறுவர் முதல் பெரியோர் வரை மரியாதையாக அழையுங்கள்.

6. வயது முதிர்ந்தோரை நேசியுங்கள்.  ஆதரவு கொடுங்கள்.

7 வருமானத்தில் சிறு சதவீதம் நற்பணிகள், சமூக சேவை ஆகியவற்றிக்குச் செயல்படுத்துங்கள்.

வெற்றி நிச்சயம்  !!!!    வெல்வது உறுதி    !!!!