பட்டுக் கூட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் – – குறைந்த முதலீடு ! அதிகலாபம் ! வளமான வாழ்வு !

derk06jvதமிழர்களின் பாரம்பரியத்திற்குரியது பட்டு. பட்டுப் புழுவின் உமிழ்நீரான பட்டுக்கூட்டை நூற்பதின் மூலம் கிடைக்கும் ஓர் உயர் ரக இழையாகும் (நூல்). இப்பட்டுப் புழுவானது, மல்பெரி எனும் மரப் பயிர் இலைகளில் செரிந்துள்ள சத்துக்களைப், பட்டுப் புழுவானது வளர்ச்சிக்காகவும், கூடுகட்டுவதற்காகவும் பயன்படுத்துகிறது.

பட்டுப்புழு தன்னுடைய நிலை மாறுதலின் பொழுது, தன்னைக் காத்துக் கொள்ளச் சுற்றிலும் பட்டு நூலினைக் கூடாக நூற்கும். இதனையே பட்டுக் கூடு என்பர். பட்டுக் கூடு இருவகைப்படும். அதில் ஒன்று, பட்டு நூலினை நூற்பதற்கும் (ஆடை) மற்றொன்று விதைகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில், விதைக்கான பட்டுக்கூடுகள் வெட்டப்படுவதால், இவற்றை நூற்க முடியாது. இவ்வாறு வெட்டப்பட்ட கூடுகளிலிருந்து உருவாக்கப்படும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றன. ஏனெனில், இப்பொருட்கள் காலத்திற்கும் நிறம் மங்காமல் நீடிக்கும்.

இயற்கையான நிறமூட்டுதல் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். மேலும், காகிதப் பூக்கள் போலில்லாமல், இயற்கைத் தோற்றமுடையதால் பலவிதமான நிகழ்வுகளிலும் (திருமணம், பரிசளிப்பு, பிரியாவிடை…) பயன்படுத்தலாம்.

வண்ண வண்ண பூக்குவளைகள், பூங்கொத்துகள், மாலைகள், சுவர்த் தோரணங்கள் எனப் பல்வேறு அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப் பொருட்களைப் பட்டு முட்டை வித்தகத்தின் மூலம் கிலோ ஒன்றிற்குத் தோராயமாக ரூபாய் 1000 வீதம் (2200 கூடுகள்) வாங்கலாம்.

ஒரு கிலோ கூடுகளிலிருந்து சுமார் 30 மாலைகள் (பெரிது) தயாரிக்கலாம். மாலைக்குத் தோராயமாக ரூபாய் 250 வரை விற்கலாம். இது ஒரு சிறந்த குடிசைத் தொழிலாகும். இவ்வாறு செய்யப் பெற்ற உப பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தும், தொழிலை மேம்படுத்தலாம். வீட்டிலுள்ளபடியே இத்தொழிலின் மூலம் முதலீட்டைக் காட்டிலும் மும்மடங்கு வருவாய் ஈட்டலாம்.

விற்பனை வாய்ப்பு
இக்கைவினைப் பொருட்களைப் பொருட்காட்சிகளிலும், பேன்சி ஸ்டோர்களின் உதவியுடனும் விற்பனை செய்யலாம். மேலும், இக்கைவினைக் கலையைத் திறம்படக் கற்க சேலத்தில் திரு. சி.அ. சிதம்பரம்  “Lion International Agency” எனும் நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

மேலும் தொடர்புக்கு,

திரு. சி.அ. சிதம்பரம்
“Lion International Agency”
எண்.49 / 10 – C / 2, 3வது தெரு,
சுப்பிரமணிய நகர்,
சேலம் – 636 005.
தொடர்பு எண்: 93642 00863