பாம்புகள் ஜாக்கிரதை……

snake‘பாம்பென்றால் படையும் நடுங்கும் ‘.ஆனால் இவ்வுலகில் அதை அன்பாகவும் அதுவும் ஒர் உயிரினம் என்று நினைப்பவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்.  அதில் ஒருவர் தான் திரு.லு.ரத்தீஸ்
அவர்கள் (பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு) பாம்பு பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்துவதோடுஅவற்றின் அவசிம் குறித்தும் நமக்கு கூறுகிறார்.

நாங்கள் முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்,தீயணைப்புத்துறை, வனத்துறை, மலைவாழ் மக்கள், கிரகப்பிரவேசம், திருமண நிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு இடங்களுக்கு பவர்பாய்ண்ட் பிரஸ் ஸ்டே­ன், மற்றும் பொது இடங்களில் பாம்புகளைக் காப்பாற்றும் பொழுது அங்கிருக்கும் மக்களுக்கு என்ன வகையாக பாம்பு என்று விளக்குவதோடு அது விஷ­ம் (Veom) உள்ள / அல்லாத பாம்பா , எந்த வகையைச் சார்ந்தது அதன் குணாதிசயங்கள் போன்ற தகவல்களை வழங்குவோம்.  மேலும் பாம்புகளைக்
காப்பாற்றுவதற்கு (Rescue) ஒரு குழுவும் ஏற்படுத்தியுள்ளார்.  அக்குழுவில் சுமார் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுவாக எல்லா இடங்களுக்கும் பாம்புகளைக் காப்பாற்ற நான் செல்ல வேண்டியதில்லை.எங்கள் குழுவில் இருக்கும் நபர்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இடங்களுக்குச் சென்று காப்பாற்றுவார்கள்.  அப்படிச் செல்லும் நேரத்தில் புதிதாகப் பயிற்சிஎடுக்க வரும் நபர்களை அவர்களுடன் செல்ல அறிவுருத்துவோம்.  பல பயிற்சிக் களங்களை கண்டவுடன் அவர்களும் நன்கு தேர்ச்சி பெற்றுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதனால் பாம்புகள் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாம்புகள் எங்கு இருக்கும்?

பாம்புகள் சாலையோரங்களில் சுவரை ஒட்டியே செல்லும். மற்றும் செடி, புதர் மண்டிக் கிடக்கும் இடங்களிலேயே செல்லும்.   அதன் உணவான எலிகள் அங்கே இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் பாம்புகளின் மறைவிடங்கள் இருக்கும் தொழிற் கூடம், என்றால் குப்பைகள் மற்றும் பழைய சாமான் இருக்கும் இடங்கள், வீட்டிற்குள் புகம் பொழுது பீரோ என்று மறைவாக இருக்கும் இடத்திலேயே சென்று விடும்.  இதைக் கண்டறிவதே முதல் களப் பயிற்சி என்று கூறுகிறார்.  இதை மகுடி ஊதிப் பிடிப்பது என்பதெல்லாம் தவறான முறையைக் கையாள்வதாகும் என்றார்.

சேவை செய்து வருகிறோம்

கோவை மாவட்டத்தில் காவல்துறை, வனத்துறை போன்ற இடங்களுக்குத் தொடர்பு கொண்டாலும் பாம்புகள் பற்றிய புகார்கள் வந்தால் தங்களின் தொலைபேசி எண்களைக் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.  நாங்கள் 24 மணி நேரமும் இந்தச் சேவையைச் செய்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.  அதே போன்று இதைப் பிடிப்பதற்கு மக்களிடம் எந்தப் பண உபகாரமும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, எங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிறப்புவதற்காக மட்டும் ரூபாய் 100/-கேட்டுப் பெற்று வருகிறோம்.  இதற்கு அவர் சொன்ன காரணம் தாங்கள் பிடித்த பாம்பைப் பத்திரமாக எடுத்துச் சென்று அருகாமையிலுள்ள, (ஆனைகட்டி மலை) காடுகளில் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவோம் என்றனர்.  இதற்குச் சில வழிகளைப் பின்பற்றுகின்றனர்.  பாம்பு பிடிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் பொது மக்களிடம் கடிதம் ஒன்றை எழுதி அதில் எந்த வகையான பாம்பு, அவர்களிடம் பெற்ற தொகை, நேரம், இடம் என்ற அனைத்துத் தகவல்களையும் அதில் சேகரித்து  வனத்துறைக்கு ஒரு நகலை வழங்கி அவர்களிடம் அனுமதி பெற்றே வனத்திற்குள் பாம்புகளை விடுவோம் என்றார்.  மேலும் மக்கள் தாங்கள் பார்க்கும் பொது இடங்களில் பாம்புகள் அடிபட்டு இருந்தாலோ அல்லது பொது மக்களுக்கு இடையூறாக இருந்தாலோ தங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்றும் கூறினார்.

பாம்பு எப்போது கடிக்கும்?

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மனிதர்களைக் கண்டால்  துரத்தி வரும்; சில நேரங்களில் கடித்து விடும் .  ஆனால் பாம்பு எப்போதும் மனிதர்களைக் கண்டால் விறைந்து நகர்ந்து விடும்.   எந்தச் சூழ்நிலையிலும் பாம்பு விரட்டி வந்து யாரையும் கடித்ததில்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார்.இரை எடுத்துக் கொண்ட பாம்பே நகர்ந்து செல்ல இயலாமல் இருக்கும்.  அதுபோன்ற சூழ்நிலைகளில்தான் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்.

பாம்புகள் இருப்பதினால் கிடைக்கும் நன்மைகள்

விவசாயத்திற்குப் பெரும் அளவு நன்மை கிடைப்பதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  பொதுவாக
எலிகளை வேட்டையாடுவதில் ஆந்தை, கழுகு மற்றும் பூனைகள் இருக்கும் ஆனால் அவை அனைத்து விலங்குகளுக்கும் இல்லாத சிறப்பு பாம்புக்கு உண்டு.  அது எப்படி?  ஒரு ஆந்தை வருடத்திற்கு சுமார்  3000 எலிகளை வேட்டையாடும், மற்ற விலங்குகளும் சரிவிகிதத்தில் வேட்டையாடுபவையே.ஆனால் பாம்புகள் மட்டுமே பொந்துக்குள் சென்று எலிகளை வேட்டையாடுவதும் எலிகளின்
எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதும் மிகவும் குறிப்பிடதக்கது.  எலிகளினால் அப்படிஎன்ன பிரச்சனை விவசாயிகளை வந்தடைகிறது என்றால், எலிகள் தனது பாதுகாப்பிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் விவசாய நிலத்தில் வங்குகள் பதித்து இருக்கும்.  இதனால் பயிர்களுக்குத்
தேவையான நீர் கிடைக்காமல் நீர் மேலாண்மை பாதிக்கப்பட்டு நீர் பற்றாக்குறையும் ஏற்படும் மேலும் அது தனது உணவிற்காகப் பயிர்களின் வேர்களை உண்டு உயிர் வாழ்வதுடன் பயிர்களையும்
சேதப்படுத்தி உணவு உற்பத்தியையும் கெடுக்கும் அளவுக்கு வல்லமை படைத்தவைகள் எலிகள் என்று சொன்னால் அது மிகையல்ல.  சில வகைப் பாம்புகள் பூச்சிகளை மட்டுமே உண்ணும்,சில வகை பாம்புகள் தவளை, மீன் போன்றவற்றையே உண்ணும் பாம்புகளிடம் இருந்து எடுக்கப் படும் வி­ம் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு ( புற்றுநோய், வலிப்பு,இதயநோய் போன்றவற்றிற்கு).  பாம்புக் கடிக்கு மருந்தானப் பாம்புகளிடமிருந்து எடுக்கப்படும் வி­த்தையே
பயன்படுத்துகின்றனர் (Anti venom)

பாம்பு வகைகள்

இந்த உலகில் சுமார் 2700 வகையான பாம்புகள் இருக்கின்றன.  நமது இந்தியாவில் 272முதல் 275 வகையான பாம்புகளும் இருக்கின்றன.  அதில் 7 வகையான பாம்புகளுக்கு மட்டுமே
மனிதர்களைக் கொல்லக்கூடிய வி­த்தன்மை உள்ளது.  அதிலும் 4 வகையான பாம்புகள் மட்டுமே நிலப்பரப்பில் வாழ்பவை

1. நாகப்பாம்பு
2.கண்ணாடிவிரியன்
3.சுருட்டை விரியன்
4. கட்டு விரியன்

மீதமுள்ள 3 வகையான பாம்புகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருப்பவை.

1. ராஜ நாகம்
2.குளிப் பாம்பு
3. பவளப்பாம்பு

இந்த 7 வகை பாம்புகளைத் தவிர நடு நிலை வி­முள்ள பாம்புகளும் உள்ளன. (Mild venom)
1.பச்சைப் பாம்பு
2.பூனைப் பாம்பு
3.பறக்கும் பாம்பு

இந்த வகையான பாம்புகள் சிறு உயிரினங்களை மயக்கமடையச் செய்து, தனக்கான உணவைச் சேகரிக்கக் கூடியவை.  இது போன்ற பாம்புகள் மனிதர்களைத் தீண்டினால் தொற்று நோய்
ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம் என்றார்.

வி­ஷமற்ற பாம்பு வகைகள்

மேலே கூறப்பட்ட பாம்பு வகைகளைத் தவிற மற்ற அனைத்தும் வி­மற்றவையே. அதில் சில

1. சாரைப்பாம்பு
2.தண்ணீர்ப் பாம்பு
3.கொம்பேரி மூக்கன்
4. மலைப்பாம்பு
5. குட்டைப் பாம்பு – சுருட்டை விரியன் பாம்பும் குட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஷ­முள்ள பாம்பு

நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய பாம்புகள் (neuro toxin venom)

1.நாகப் பாம்பு
2. கட்டுவிரியன்
3. ராஜ நாகம்
4. பவழப் பாம்பு

அதே போல் நாகத்தில் இரண்டு வகைகள் உள்ளன.  தென் இந்தியா மற்றும் வட இந்தியா நாகம்.(Mono cled cobra) (”U” shaped spectacle cobra)நீர் வீழ்ச்சி நாகம்  (Falls cobra)

நடுநிலை வி­ஷமுள்ளது

கருநாகம்  – பாம்பு முழுவதும் கருப்பாக இருக்கும்
மஞ்சள் நாகம்   – பாம்பு முழுவதும் மஞ்சளாக இருக்கும்.

ராஜ நாகம்நாகங்களில் மிக நீளமாக வளரக்கூடியது.உலகிலேயே அதிக வி­ம் உள்ள பாம்பு இதன் உணவு பாம்புகள் மட்டுமே சாரைப் பாம்புகளுக்குப் பிடித்த உணவு எலிகள், ஆகவே எலிகளைப் பிடிக்கச் சாரைப் பாம்புகள் வயல் வெளிகளில் சுற்றித் திரியும்

வி­ஷத்தின் வேறுபாடுகள் (நாகம் மற்றும் ராஜநாகம்)

ராஜநாகப் பாம்பின் வி­ வீரியத்தை விட நாகத்தின் வி­ வீரியம் அதிகம்.  ஆனால் அதன் அளவுகளிலே வேறுபாடு உள்ளது  அதாவது ராஜநாகத்தின் வி­ வீரியம் குறைவானாலும் அதன் அளவு (நச்சு நீர்) அதிகம்.  அதுவே நாகத்தில் வி­ வீரியம் அதிகமானலும் அதன்
அளவு (நசசு நீர்)   ராஜநாகத்தை விடக் குறைவு.

பவளப் பாம்பு – வி­த்தின் வீரியம் அதிகம்
சுமார் இரண்டு அடி வரை இருக்கும்.
நாகத்தை விடப் 16 மடங்கு வி­த்தின் வீரியம் அதிகம்

இரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகள்

1.சுருட்டை விரியன்
2.கண்ணாடி விரியன்

பாம்பு  தீண்டிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

பாம்பு கடித்த இடத்தில் வலி மற்றும் கடுகடுப்புத் தன்மை இருக்கும், அதிலும் நரம்பு மண்டலங்களைத் தாக்கும் பாம்புகளை விட, ரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகளே அதிக வலி ஏற்படுத்தும்
என்கிறார்.  முதலில் கடி பட்ட இடத்தைக் கட்டுவதோ அல்லது கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைப் பயன் படுத்துவதோ, வாய் வைத்து உறிஞ்சுதல் போன்ற எந்தச் செயல்களும் செய்தல்
கூடாது.  பாம்பு தீண்டியவர்களைப் பதட்டமடையச் செய்தல் கூடாது.  பாம்பு தீண்டிய இடத்தினை,கை கால் உடம்பு போன்ற எந்த உறுப்பாக இருந்தாலும் அசைக்காமல் அருகில் உள்ள
மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லுதல் அவசியம்.  அதிலும் திரு.ரத்தீஷ் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவ மனையே சிறந்தது.  அங்கு ஒவ்வொரு நாளும்
சுமார் 2 நபர்களையாவது பாம்பு தீண்டியவரைக் காப்பாற்றி வருகிறார்கள்.  ஆகவே அவர்களக்கு மிகுந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.  என்றும் விளக்கினார். (இதில் முக்கிய குறிப்பாக பாம்பை தீண்டிய நபரை முதலில் அருகாமையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுதல் அவசியம்)  மேலும் ஒரு தகவலைத் தந்தவராக ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில்
அமைந்துள்ள தன்வந்திரி மருத்துவமனையைக் குறிப்பிட்டார். அங்கு டாக்டர் திரு.கணபதி டாக்ளாகாலஜீ (நச்சு முறிவு) ஸ்பெ­லிஸ்ட்.  இது போன்ற பாம்புக் கடியைக் குணப்படுததுவதில்
சிறப்பு வாய்ந்தவர் என்றம் தெரிவித்தார்.

 • பாம்புக்கு நினைவாற்றல் குறைவு சுமார் 12டி நிமிடம் மட்டுமே இதற்கு நினைவுகள் இருக்கும்.

  (பாம்புகள் பழி வாங்கும் என்பது மூட நம்பிக்கையே).

 • பாம்பு பால் குடிக்காது,பாம்புக்கு ஜுரண சக்தி மிகவும் குறைவு

 • பாம்பு கடி பட்ட இடத்தில் கிருமி நாசினி (antibiotic),  மஞ்சள், சோம்பு, டெட்டால் கொண்டுசுத்தம் செய்ய வேண்டும்.

 • பார்ப்பதற்குக் குட்டை பாம்பும் கட்டு விரியனும் ஒன்று போல் இருக்கும்.

 • பாம்புக்குக் காது கிடையாது.

 • உலகிலேயே கூடு கட்டி வாழும் பாம்பு ராஜநாகம் மட்டுமே (முட்டையிடும் காலம் மட்டுமே –

  மூங்கில் காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிப் பகுதிகள்)

 • சாரை மற்றும் நாகப் பாம்புகள் சுமார் 14 வருடம் முதல் 16 வருடம் வரை உயிர் வாழும்தற்போதைய சூழ்நிலையில் சுமார் 7 வருடம் என்பதே சவாலாக இருக்கிறது என்று கூறினார் -சுற்றுப்புறச் சூழல் காரணமாக இந்த நிலை உள்ளது.

 • கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மண்ணுளி, பச்சைப்பாம்பு போன்ற வகைகள் குட்டி

  போடுபவை

 • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிப்பு நடப்பதனாலே சுற்று சூழல் பாதிக்கப்படுவதாகவும் நகரங்களுக்குள் பாம்புகள் நுழைவதும் நடக்கிறது என்று வேதனையுடன்தெரிவித்தார்.

 • ‘அனகோண்டா’ வகை பாம்புகள் நஞ்சற்ற வகைகள் (non venoms) ஆகும்.

விவசாயிகள் கவனத்திற்கு

விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோழிகளை வளர்க்கலாம்.  இவைகளால் பாம்புகளைப் பிடிக்காவிட்டாலும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும்.  மேலும் இரவு  நேரங்களில்
கையில் மின் விளக்கு மற்றும் தடி மூலம் நிலத்தைத் தட்டி ஓசை எழுப்புதல் (அதிர்வலைகள் எழுப்புதல்) காலணி பயன்படுத்துதல் (பி.வி.சி. காலணிகள் – கோவை மாவட்டம் – காவலர் சீறுடைகள் விற்பனைக் கடைகள் – காட்டூர் வீதி (பாப்பநாயக்கன்பாளையம்) – காக்ஸ் வீதி (கோவை) போன்ற முறைகளால் நாம் தற்காத்துக் கொள்ள முடியும் மேலும் பாம்பு என்பது. மனிதனின் உணவுச் சங்கலியில் அதற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு ஆகவே, பாம்புக்குப் பாதுகாப்பு அளித்திட அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  பயிற்சி மற்றும் பாம்புகள் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்திடத் தொடர்பு கொள்ளவும்

K.ரத்தீஷ்
(பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு,)
97873 32814
97502 09000

பாம்புக்குப் பால் ஊற்றுவதற்கும் முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன?

உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட வி­யமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.  பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்,ஆதிகாலத்தில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தவை பாம்புகள்.  காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு.  மனிதனைவிடப் பாம்புகள் அதிகமாகக் காணப்பட்டன.  ஒரு உயிரினத்தைக் கொல்லும் உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை.  அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.  ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.  பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமானது.பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.  பெண் பாம்பு  வாசனையைக் கட்டுப்பத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனையைத் தடுக்கிறது.  ஆகவே,அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.  இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.  அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →