புதிய நெல் சாகுபடி முறைகள்

PaddyField கால்கிலோவிதை நெல்லைப் பயன்படுத்திஒரு எக்கரில் நான்குடன்மகசூல் எடுத்து சாதனை புரிந்த சாகுபடி முறைகளைப் பற்றிய விபரம்.  நெல் ரகங்கள் மிகவும் சன்ன ரகமாக இருந்தால் ஒருஏக்கர் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல் போதும்.மோட்டா ரக நெல் விதைகளாக இருந்தால் அரை கிலோ நெல் விதை போதும்.  ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ஐந்து சென்ட் சேற்று நாற்றங்கால் போதும். ஐந்து சென்ட் நாற்றாங்காலுக்கு 500 கிலோ மக்கிய தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் உரம் அல்லது தழை உரம் போட்டு நன்றாக உழுது சமம் செய்ய வேண்டும்.

அடி உரம் ஐந்து  கிலோ முதல் பத்து கிலோ வரை டி.ஏ.பி உரம் போட்டு நாற்றங்காளைத் தயார் செய்ய வேண்டும். அதில் அரை கிலோ நல்ல தரமான நெல் விதையைச் சீராக விதைக்க வேண்டும்.  விதைப்பு செய்த 15 வது நாளில் இருந்து 25 வது நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும்.  நடவு வயல் மிகவும் வளமானதாக இருக்க வேண்டும்.  அதற்கு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் தழை உரம் 5 டன் போட்டு உழுது வயலை மேடு பள்ளம் இல்லாமல் நன்கு சமன் படுத்த வேண்டும்.  அடியுரம் ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.எ.பிஅல்லது 17.17.17 காம்ளக்ஸ் 100 கிலோ இடவும்.  இரசாயன உரங்களை மண் பரிசோதனை அடிப்படையில் இடவும்.

ஒரு கயிற்றில் ஐம்பது செ.மீ. என்ற அளவில் அடையாளம் போட்டுக் கொண்டு நடவு செய்யவும். இடைவெளியும் 50 செ.மீ என்ற அளவில் அதாவது வரிசைக்கு வரிசை இடைவெளி 50* 50 செ.மீ. அளவில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டும் வைத்து ஒரு சதுர மீட்டருக்கு நான்கு நாற்றுகளை மட்டும் வைத்து நாற்றுகளை மேலாக நடவு செய்ய வேண்டும்.  அசோஸ் பைரில்லம். பாஸ்பேட் பாக்டிரியாவை நனைத்து நடவு செய்யவும்.  இற்றை நாற்று முறையில் 50 * 50 செ.மீ.. என்ற அளவில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 16 ஆயிரம் நாற்றுகள் மட்டும் போதுமானது.  மிகவும் சன்ன ரக நெல் விதையாக இருந்தால் 16 ஆயிரம் நெல் மணிகளுடைய எடை சுமார் 208 கிராம்முதல் 250 கிராம் வரை இருக்கும்.  மோட்டா ரகமாக இருந்தால் 320 கிராம் முதல் 350 கிராம் வரை தான் எடை இருக்கும்.  ஆகையால்த் தான் ஒரு ஏக்கர் நடவு செய்ய எந்த ஒரு நெல் ரகமாக இருந்தாலும் அரை கிலோ நெல் விதை போதும்.  மற்ற விவசாயிகள் அதிகமாக நெல் விதைகளை நெருக்கமாக விதைப்பதால் தரமான, வாளிப்பான நாற்றுகள் கிடைப்பதில்லை.  மேலும் “ஒற்றை நாற்று முறையில்” நடவு செய்யும் போது ஒவ்வொரு நாற்றுகளாக எடுத்து நடவுச் செய்ய சிரமமாக இருக்கும்.  அதனால்த் தான் ஒரு குத்துக்கு நான்கு ஐந்து நாற்றாக வைத்து நடவு செய்கிறார்கள்.  அதிகமாக நாற்றுகளை வைத்து நடவு செய்யும் போது பயனுள்ள தூறுகள் வாளிப்பான கதிர்கள் அதிகமாகக் கிடைப்பதில்லை பயிர் இடைவெளியை நெருக்கி நடவு செய்வதால் நெல் அறுவடைக்கு முன்பே விளைச்சல் கீழே சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

எனது கண்டுபிடிப்பான புதிய நெல் சாகுபடி முறையில் ஒரு நாற்றில் இருந்து பயனுள்ள தூர்கள் அதிகமாக வரும்.  50* 50  செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்யும் போது அதிகமாக இடைவெளி இருப்பதால் ஒரு குத்துக்கு 50 கதிர்கள் முதல் 120 கதிர்கள் வரை இருக்கும். ஒரு கதிருக்கு நெல் மணிகள் 100 முதல் , 400 நெல் மணிகள் வரை இருக்கும் எந்த ஒரு நெல் ரகமாக இருந்தாலும் அறுவடை வரை கீழே சாயாது.  மற்ற நெல் சாகுபடி முறையை விட இந்த புதிய நெல் சாகுபடி முறையில் விதை நெல் அளவு மிகவும் குறைவு.  வேலையாட்கள் குறைவு இடைவெளி அதிகமாக இருப்பதால் எலிகளின் சேதத்தைத் தவிர்கலாம்.  பூச்சி, நோய்கள் அதிகம்
தாக்காது.  மருந்துகள் தெளிப்பது, களை எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.  அறுவடையை எளிதாகச் செய்ய முடியும்.

ஒரு கயிற்றில் ஐம்பது செ.மீ. என்ற அளவில் அடையாளம் போட்டுக் கொண்டு நடவு செய்யவும். இடைவெளியும் 50 செ.மீ என்ற அளவில் அதாவது வரிசைக்கு வரிசை இடைவெளி 50 யீ 50 செ.மீ. அளவில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டும் வைத்து ஒரு சதுர மீட்டருக்கு நான்கு நாற்றுகளை மட்டும் வைத்து நாற்றுகளை மேலாக நடவு செய்ய வேண்டும்.  அசோஸ் பைரில்லம். பாஸ்பேட் பாக்டிரியாவை நனைத்து நடவு செய்யவும்.  இற்றை நாற்று முறையில் 50 யீ 50 செ.மீ.. என்ற அளவில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 16 ஆயிரம் நாற்றுகள் மட்டும் போதுமானது.  மிகவும் சன்ன ரக நெல் விதையாக இருந்தால் 16 ஆயிரம் நெல் மணிகளுடைய எடை சுமார் 208 கிராம் முதல் 250 கிராம் வரை இருக்கும்.  மோட்டா ரகமாக இருந்தால் 320 கிராம் முதல் 350 கிராம் வரை தான் எடை இருக்கும்.  ஆகையால்த் தான் ஒரு ஏக்கர் நடவு செய்ய எந்த ஒரு நெல் ரகமாக இருந்தாலும் அரை கிலோ நெல் விதை போதும்.  மற்ற விவசாயிகள் அதிகமாக நெல் விதைகளை நெருக்கமாக விதைப்பதால் தரமான, வாளிப்பான நாற்றுகள் கிடைப்பதில்லை.  மேலும் “ஒற்றை நாற்று முறையில்” நடவு செய்யும் போது ஒவ்வொரு நாற்றுகளாக எடுத்து நடவுச் செய்ய சிரமமாக இருக்கும்.  அதனால்த் தான் ஒரு குத்துக்கு நான்கு ஐந்து நாற்றாக வைத்து நடவு செய்கிறார்கள்.  அதிகமாக நாற்றுகளை வைத்து நடவு செய்யும் போது பயனுள்ள தூறுகள் வாளிப்பான கதிர்கள் அதிகமாகக் கிடைப்பதில்லை பயிர் இடைவெளியை நெருக்கி நடவு செய்வதால் நெல் அறுவடைக்கு முன்பே விளைச்சல் கீழே சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

நல்ல முறையில் சாகுபடி செய்தால் ஒரு குத்துக்கு சராசரியாக 80 கதிர்கள் வரை இருந்தால் ஏக்கருக்கு 4 டன் மகசூல் எடுக்க முடியும்.  சரியாகச் சாகுபடி செய்ய முடியாமல் ஒரு குத்துக்குச் சராசரியாக 40 கதிர்கள் வரை மட்டும் இருந்தாலே ஏக்கருக்கு இரண்டு டன் மகசூல் சுலபமாக எடுக்க முடியும்.

‘ வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயர அரசுயரும் ‘

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →