முகநூல் பக்கம்…

vl67lqwgரோட்டுல உருண்டு பிரண்டு தண்ணிவிடச்சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணி… ஆள்கிடைக்காம. அவிங்க வீடு போய் கெஞ்சி கூட்டியாந்து நட்டு… விடிய விடியத் தண்ணிகட்டி… விளையவெச்சு நாட்டைக்காப்பாத்தித்தான் ஆகணுமா?
விவசாயி 1 : வெளயவக்கிறவங்க வெலைய வக்கனும்… அதுதான் தீர்வு.

இன்னும் சில கிராமங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
விளைவித்ததை மட்டுமே உண்கிறார்கள்.
உழவுக்காகவும் பாலுக்காகவும் நாட்டு மாடுகளுடன் வாழ்கின்றார்கள்.

செய்தி :
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி
உண்மை நிலை :
குதிரை வெளியேறியபின் இலாயத்தைப்பூட்டி என்ன பலன்?
மரவள்ளிப் பயிரின் பெருவாரியான அறுவடை அக்டோபர் மாதத்திலிருந்து தான் தொடங்கும். சென்ற வருடம் கடும் விலை வீழ்ச்சி. வயலிலிருந்துப் பயிரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுபடியாகாத குறைந்த விலைக்கு மில்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இலாபம் மில் முதலாளிகளுக்கு…
தற்போது அறுவடை இல்லாதச் சமயத்தில் விலையை ஏற்றி மீண்டும் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளைத் தயார் படுத்தும் செயல் நடைபெற்று வருவதாகவே கருத முடிகிறது.
இதுதான் குதிரைக்கு முன் காரட்டைக் காட்டிக் கொண்டே ஓட்டிச் செல்வது என்பதா?
விவசாயி 1 : கடந்த ஆண்டு எந்த எந்தப் பகுதிகளில் எவ்வளவுப் பயிரிடப்பட்டது. எந்த அளவு அறுவடை எடுக்கப்பட்டது. என்ன விலை? எந்த எந்த மாதங்களில் கிடைத்தது போன்ற விவரங்களும் இந்த ஆண்டு எவ்வளவு பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது? போன்ற தரவுகளும் எப்போது விவசாயிக்கு மிக எளிதாகக் கிடைக்கிறதோ அப்போது வரை இந்த கண்ணாமூச்சி – குதிரைக் கேரட் ஏமாற்று வித்தை நடந்துகொண்டே தான் இருக்கும்.
விவசாயி 2 : மேற்கண்ட தகவல்கள் தெரிந்தால் மட்டும் என்ன புதிதாக நடந்துவிடப்போகிறது? ஏமாறுதல் புதிய பாணியில் தொடரும்.

ஞெகிழி தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து…
துணிப்பை தூக்கி துணிவைக் காட்டு…  

பார்த்தீனியக் களைகளை இயற்கையாகக் கட்டுப்படுத்த எங்களது தென்னந்தோப்புக்கு இடையே சணப்பு மற்றும் கொள்ளு விதைப்பின் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது. இவை நன்கு வளர்ந்ததும் மடக்கி உழுவதன் மூலம் நல்ல இயற்கை உரமாகவும் பயன்படுகின்றன. இந்தச் சணப்பு மற்றும் கொள்ளு முளைக்காத இடத்தில் பார்த்தீனியம் செழித்து வளர்ந்துவிட்டது. உரத்திற்கு உரம் மற்றும் களை நிர்வாகம்.

உடல் இளைக்கனும்னா, யோகா, கிரீன் டீ, தேனுல பாலுனு ஆளாளுக்கு கண்டத சொல்றானுவ…!
ஆனா ஒருத்தன் கூட உழைக்கணும்னு சொல்லல

விவசாயம் சார்ந்தப் பணத்தொழில்
இன்றைய இளைஞர்களிடம் நிறையத் தொழில் ஆர்வம் உள்ளது. அதற்குக் காரணம் பணத் தேவை அதிகம் எனலாம், பண ஆர்வமும் அதிகம் எனலாம்.
ஒரே மாதத்தில் லட்சாதிபதி ஆக்குகிறேன் என்று வெற்று வாய்ச்சவடால் விட்டால் கூட ஒவ்வொருவரும் நம்மைத் தேடி வர, நாமும் ஒவ்வொருவரிடமும் 1000, 1000, வாங்கி நாம் லட்சாதிபதி ஆகிவிடலாம்…
அந்த அளவிற்கு இளைஞர்களிடமும் மிக முக்கியமாக ஏதாவது ஒரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமும், விரைவில் பணக்காரன் ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
அதுவும் இன்றைய காலங்களில் விவசாயத்தைச் சார்ந்த தொழிலைப் பணமாக்க வேண்டும் என்று படித்தவர்கள் நினைக்கிறார்கள் – நல்ல முயற்சிதான். ஆனால், விரைவில் விவசாயத் தொழிலில் பணக்காரன் ஆக வேண்டும் என்பதுதான் அறியாமை.
 ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் நான் ஒரு கட்டுக் கீரை, சுமார் ரூபாய் 20 க்கு வாங்குகிறேன் ( இது ஆர்கானிக் கீரை என்று சாக்கடை நீரில் நச்சு மருந்து அடிச்சி இருப்பது வேறு – சென்னையில் ) ஒரு ஏக்கருக்கு 20000 கட்டு என்றால் கூட 20000 x 20 = 400000 ( அதாவது 4 லட்சம் ) 3 மாதத்தில் கிடைக்கிறது.
அப்போ வருடத்திற்கு 4 முறை செய்தால் 4 x 4 = 16 லட்சம். 6 லட்சம் செலவானாலும் லாபம் மட்டும் 10 லட்சம் ஒரு ஏக்கருக்கு என்றார்…
எனக்கு மட்டும் ஒரு ஏக்கர் இருந்தால் வேலையை விட்டுட்டு, 1 ஏக்கரை வச்சே பணக்காரன் ஆகிடுவேன் என்றார் அதுவும் 1 வருடத்தில்.
இன்னொருவர் – எனக்கு 2 ஏக்கர் இருக்கு அதில் நான் ஆடு வளர்க்கப்போகிறேன் உங்கள் அறிவுரை கூறுங்கள் என்றார். நானும் உங்கள் ஐடியாவைச் சொல்லுங்கள் அதில் இருந்து லாப நஷ்டங்களைச் சொல்கிறேன் என்றேன். அவர் சொல்வதைக் கேட்டு தூக்கி வாரிப்போட்டது. அவர் 100 ஆடு வளர்க்கப் போறாராம் 100 ஆடும் 1 ஆடு வருடத்திற்கு 4 குட்டிகள் வீதம் 100 x 4 = 400 குட்டிகள் கிடைக்குமாம், அவை ஒரு வருடத்தில் ஒரு ஆடு வீதம் 10000 என விற்கலாமாம், அப்போ 400 x 10000 = 4000000 ( 40 லட்சம் ). 2 ஏக்கரில் வருடத்திற்கு 40 லட்சமாம் 10 லட்சம் போனாலும் 30 லட்சமாம். இந்தக் கணக்கைச் சொல்லிவிட்டு, அதற்குமேல் ஒன்று சொன்னார் பாருங்க அதுதான் உச்சம்.
உங்களுக்கு அனுபவம் இருப்பதால் என் 2 ஏக்கரை உங்களுக்குக் குத்தகைக்குக் கொடுக்கிறேன். அதை, வைத்து 40 லட்சத்தில் 20 லட்சம் எனக்கு கொடுத்திட்டு மீதி 20 லட்சம் நீங்க எடுத்துக்கோங்க என்றார் பாருங்க அப்போதுதான் நினைத்தேன் படித்தவன் எல்லாம் அறிவாளி இல்லை என்று.
அதனால், இளைஞர்களே கணினியில் கணக்குப் போட்டு விவசாயத் தொழிலுக்கு வராதீர்கள், கணினிக் கணக்கு விவசாயத்தில் ஒத்து வராது. உங்கள் தேடலில், உங்கள் முயற்சியில், உங்கள் அனுபவத்தில் நீங்கள் அடைந்தவை வைத்து முயற்சி செய்யுங்கள். முதலில் விரைவில் பணம் என்ற மனப்போக்கை விடுங்கள், வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
 விவசாயி 1 :  இப்படி கணக்குப் போட்டுட்டு இறங்கினா…
கொட்டும் மழைக் காலை உப்பு விக்கப் போனேன்…
காற்று வீசும் காலம் மாவு விக்கப் போனேன்…
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே ன்னு…
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் னு… கயிறு தேட வேண்டியதுதான்…
கயிறுன்னதும் தப்பா நினச்சிறாதீங்க…
பொட்டி படுக்கையக் கட்டத்தான்…
விவசாயி 2 : நஞ்சில்லா உணவும், நட்டம் இல்லாத விவசாயமும், தன் குடும்பத் தேவைக்கு மட்டும் உணவு உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண்மை வழி சாத்தியம்.
விவசாயி 3 : உண்மைங்க… காற்று, மழை, நீர் ஆதாரம், விதைத் தரம், நோய், விலங்கு, பறவை ( குறிப்பாக மயில் ), சந்தைப் படுத்துதல், என எதுவுமே நம் கட்டுக்குள் இல்லை…
இது போல பல கடல்களைக் கடந்தாலே கரை தொட முடியும்…
இல்லை எனில் மூழ்குவது உறுதி…ங்க
விவசாயி 4 : நிம்மதியாக வாழலாம்… ஆசையின்றி இறங்கினால்…
ஆனா… ஆசைபட்டு இறங்கினால்… அல்லல்பட்டுப் போவீங்க…
ஆமா… எனக்குத் தெரிஞ்சதச் சொல்லிட்டேன்…ங்க
விவசாயி 5 : அதனால், இளைஞர்களே…முதலில் விரைவில் பணம் என்ற மனப்போக்கை விடுங்கள். ஒவ்வொரு எழுத்தும் சத்தியமான அனுபவ உண்மை.  கணினித் துறையில் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்க நிம்மதியைக் காவு கொடுத்த நண்பர்கள் லாபநட்டம் பார்க்காமல் இயற்கை வேளாண்மையைச் செய்ய, இழந்த நிம்மதி பல மடங்காகத் திரும்ப வரும். இது உறுதி.

ICU ல கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன் கொடுத்துக் காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி சொல்லும் நாம்.
வாழ்நாள்முழுதும் ஆக்ஸிஜன் கொடுக்கும் மரத்தை வெட்டி வீழ்த்துகிறோம்.

பசித்தால் பணத்தைச் சாப்பிட முடியாது. இதை யோசித்தால் விவசாயத்தைக் காப்பாற்றலாம்.

கலிகாலம்… தேங்காய் காய்ப்பதை விட்டு தென்னங்கன்று காய்க்கிறது?
விவசாயி 1 : சூழல் கேடுகளால் தாவரங்களில் மட்டுமல்ல, மனித வர்த்தகத்திலும் இப்படிப்பட்ட வக்கிரங்களை அதிகம் காணலாம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.
விவசாயி 2 : இது எந்த ஊரில்… ஒரு வேளை தென்னை கிளை விடுகின்றது என நினைக்கின்றேன்… கிளையுள்ள தென்னை ஒரு சில இடங்களில் பார்த்துள்ளேன்.

அவசரம்
ஆறு குளம் ஏரிகள
அவசரமாத் தூரு வாரி
அடுத்து பெய்யும் மழைத் தண்ணிய
அதுல நாம சேர்த்து வச்சா…

நாடும் வீடும் செழிச்சிடுங்க
நல்லா பயிரும் வெளைஞ்சிடுங்க
நாம எல்லா குடிக்கிறதுக்கு
நல்ல தண்ணி கெடச்சிடுங்க…!

காலங் கடந்து போச்சுதுன்னா
கண்ணீர் விட்டு நிப்போமுங்க – அதனால
கட கடன்னு திட்டம் போட்டு
கடமைகளச் செய்வோமுங்க…!!

2 கோலி குண்டு சைஸ் இருக்குற மிட்டாய் ய 40 ரூபாய்க்கு பேரம் பேசாம வாங்குற ஆளுங்க…
1 லிட்டர் மரச்செக்குக் கடலை எண்ணெய் 200 ரூபாய் னா விலை அதிகம் னு சொல்றாங்க.
அதுக்கு தா ‘Don’t pay for a Doctor, pay for a Farmer.’ என்பது வந்தது.

மக்காச்சோளக் களியும் நாட்டுக்கோழி குழம்பும் கலந்த இரவு உணவு
உங்கள் முன் இவ்வாறான ஓர் உணவு வைக்கப்பட்டால் எவ்வாறு உணர்வீர்கள்… ஈரோட்டிலிருந்து அந்தியூர் வழியாக மைசூர் செல்லும் வழியில் உள்ள ஒரு விதை வங்கிக்குச் சென்றபோது மார்டல்லி கிராமத்தில் கிடைத்த உணவு விருந்து தான் இது…அந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவுகளில் இதுவும் ஒன்று… நம் மக்கள் எந்தப் பயிரிட்டாலும், அந்தப் பயிரின் உணவு, அவர்களுடையப் பசியை ஆற்றுவதில்லை. ஆனால் இவர்களின் விவசாயத்தில் மக்காசோளம் நிலத்தில் பயிரிடுவது மட்டுமல்ல… அன்றாட உணவிலும் உள்ளது. அங்கே சீமை மாடுகள் மக்களிடம் இல்லை… சரி அதை விட்டுத்தள்ளுவோம். அது அவர்களின் வாழ்க்கை முறை… சிவனேன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க… மக்களோட விவசாயமுறை மாறும் போது தான் உணவு முறையும் மாறுது… இங்கு ஏதுமே மாறல…
நமக்குக் கிடைத்த நல்ல உணவின் பட்டியலில் களியும், கறியும் கலந்த உணவைச் சேர்த்துக்கலாம். நமக்குச் சோறு தானே முக்கியம்…
விவசாயி 1 : எப்படி செய்யறதுன்னுச் சொன்னால் நாங்களும் வீட்டில் செய்து சாப்பிடுவோம்ல…
விவசாயி 2 : மக்காசோளத்தை அரைத்து வந்து வைத்துக்கொள்கிறார்கள். பிறகு நாம் செய்முறையெல்லாம் சாதரணமாகக் கம்மங்களி, ராகிக்களி போல தான் அண்ணா…
விவசாயி 3 : நான் அந்த ஏரியாவிற்குச் சென்றிருக்கிறேன். ராமாபுரம் என்ற ஊர். அங்கு இரவு ராகி களியும் தலைக்கறியும் தந்தார்கள். மிகவும் அருமையாக இருந்தது…

“நம்ம விதை நாட்டு விதை
தேடித் தேடித் தேடி விதை”

பல வருடங்களாக கிழுவை மரம் மூலம் மிகுந்த அடர்மிக்க உயிர்வேலி அமைத்து தென்னந்தோப்பை பாதுகாத்து வரும் விவசாயி, எப்போதும் உயிர்வேலி வாடாமலிருக்க தனி வாய்க்கால் அமைத்துப் பாசனம் செய்து வருகிறார்.
ஐடியா 1 : அதைவிடச் சுலபமாக வேலியோரம் சொட்டுநீர்ப் பாசனம் ஒரு லைன் அமைத்தால் போதும். எப்போதும் வேலி காயாமல் பசுமையாகவே இருக்கும்.
ஐடியா 2 : இம்மரத்தின் குச்சிகளை நட்டால் போதும். அது நன்கு துளிர்த்து வளரும்.

வாழும் கிராமம் திட்டநிகழ்வின் முதல் தொடக்கமாக புளியானூர் கிராமத்தின் குளம் மற்றும் ஏரிக்கரைகளில் ‘பனை விதைத்தல்’ தொடங்கியிருக்கிறோம்.
சிறுகச்சிறுக சேகரித்த 2000 பனங்கொட்டைகளில் 800 க்கும் அதிகமான விதைகள், சென்னையைச் சார்ந்த பிரவீன், ‘ஆற்றல்’ பிரவீன் குமார் மற்றும் ‘ஆக்கம்’ சங்கர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் வந்திருந்த மதுரை மன்னார் கல்லூரி சமூகப்பணி பட்டதாரி மாணவர்கள், கிராமத்துப் பள்ளிக்கூடப் பிள்ளைகளின் கூட்டுழைப்போடு கடந்த சனி, ஞாயிறுகளில் விதைக்கப்பட்டது. தற்சார்பை நோக்கிய பயணத்தில் இன்றியமையாத ‘பனை விதைத்தல்’ தொடர்ச்சியாக வாரத்தின் இறுதி இருநாட்களில் விதைக்க உள்ளோம்.
உயிர்க்க காத்திருக்கும் நிலத்தையும், விதையையும் இணைத்து வைக்க தன்னார்வலர்களையும், நண்பர்களையும் எப்போதும் போல இப்பவும் எதிர்நோக்குகிறோம். தொடர்ந்து இம்முயற்சியைக் கொண்டு செல்ல, வாய்ப்புள்ளவர்கள் பனங்கொட்டைகளைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குக்கூ காட்டுப்பள்ளி
புளியானூர் கிராமம்
99421 18080 / 97501 92229

குரல்

உலகத்தில் உள்ள மொத்த உயிர்ப் பன்மயத்திலே அமேசான் காடுகள்ல மட்டும் 50 சதவீதம் இருக்குன்னா பாத்துக்கோங்க. அந்தக் காடுகளோட பரப்பளவு மட்டும் 1325 கோடி ஏக்கர். பிரேசில், பொலிவியா, கொலம்பியான்னு ( தென் அமேரிக்க நாடுகள் ) பல நாடுகளும் செழிப்பாக்கிப் பாய்கிற நதிகள். அங்கிருந்து 2000 வகையான மலைஜாதிப் பழங்குடியினர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? 70 லட்சம் பேர் ஆனா இன்னிக்கு அந்தக் காட்டோட நிலைமை என்ன ?

கோ.நம்மாழ்வார்
            
குரல் ஒலிக்கும்…

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →