முகநூல் பக்கம்…..

facebookதண்ணீர் தண்ணீர்

ஊர்ல நம்ம வீட்டுலயும்’ வாட்டர் ப்யூரிஃபையர்’ போட்டாச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெ´னுங்கதான் ஓடிட்டிருக்கு. உங்க ‘ மினரல் வாட்டர் ‘ எல்லாம் தோத்துடும். சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும்ல ‘ “ என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃ பையர் பயன்படுத்தறீங்களா?” “ பின்ன என்னப்பா … பத்து, பதினைஞ்சு வரு­த்ததுக்கு முன்ன வாய்க்கா தண்ணியைக்கூட அள்ளி அள்ளி குடிச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடிநீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்கற தண்ணியைக்கூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத்தமான தண்ணியா குடிக்கணும்ல “ நகரங்களில் மட்டுமல்ல …இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின்றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது போல ‘ தண்ணீர் சுத்திகரிக்கும்’ இயந்திரங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள். நியாயம்தான்.. சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டுமொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றிக் கவலைப்படாமல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு… எந்த அளவுக்குச் சரி?

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம் இந்ச் சீமைக் கருவேல் மரங்களை வெட்டுவது.

அமெரிக்க தாவரவியல் பூங்கா வளர்க்கக்கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிப்பட்டியலே வெளியிட்டு உள்ளது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமைக் கருவேல மரங்கள். அந்த மரத்தை வெட்டினால் தான் நம்மண்ணின் மாண்பைக் காக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் நமக்குக் கொடுக்கும் செய்தி. ஆகவே, கருவேல மரங்களை அழிப்போம், நம் மண்ணின் மாண்பைக் காப்போம்!!

அருமையான நீர் சேமிப்பு ஐடியா…

நடுகிற நாற்றுக்கு அருகிலே, அந்த நாற்றின் வேருக்கு அருகில் வருகிற மாதிரி ஒரு இன்ச் பைப், ஒரு அரை அடி ஆழத்திற்கு பதித்துக் கொள்ள வேண்டியது. பூமிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பைப் இருக்கட்டும். அதற்கு மேலே 2 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை நிரப்பி, அதன் மூடியிலே ஒரு சிறு துளையிட்டு அதன் வழியாகச் சொட்டு, சொட்டடாக நீர்வடிகிறமாதிரிமைத்துக்கொள்ள வேண்டியது. இப்படி வடிகிற தண்ணீர் அந்த ஓஸ் பைப்பின் வழியாக மண்ணிற்குள் சென்றுவேர்ப்பகுதியில் நீர்க்கசிவு இருந்து கொண்டே இருப்பது போலச் செய்யும்… சுமார் நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பாட்டிலை நிரப்பினால் போதும் வாரத்திற்கு இரண்டு முறை மாதத்திற்கே 16லிட்டர் தண்ணீர், அதாவது ஒரு குடம் தண்ணீர் இருந்தால் போதும். எவ்வளவு சிக்கனம் பாருங்கள்.. பாட்டில் கீழே விழுந்து விடாமல் இருக்க, அதன் அருகே ஒரு குச்சியை நட்டு அதில் அந்த கேனைக் கட்டிவிட வேண்டும். இதைச்சுற்றி மரக்கூண்டினை வைத்து விட்டால் போதும்… பாதுகாப்பாக நட்டுவைத்த அத்தனை நாற்றுக்களுமே வளர்ந்துவிடும் இணைக்கப்பட்ட இந்த படம் இதை இன்னமும் எளிதாகச் சொல்லும். என்ன? இனி இந்த எளிய வழியைப் பின்பற்றலாம்தானே??? மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. கோடையில் மரங்களைக் காப்பாற்ற வெகுவாய் உதவும்.. “ மேலே சிரம் வைத்தவனெல்லாம் மனிதனில்லை. கீழே மரம் வைத்தவனே மனிதன்”

அன்பார்ந்த விவசாய பெருமக்களே

மண் மாதிரி ஆய்வின் முடிவின் அடிப்படையில் உரமிடுவீர். பரிந்துரைக்கு மேல் தழைச்சத்து உரம் இட்டால் இலை சுருட்டுப்புழு போன்ற பூச்சி தாக்குதல் அதிகமாகக் காணப்படும். மேலும் தழைச்சத்து உரத்தினைப் பிரித்து வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுவதின் மூலம் அதன் பயனை முழுமையாகப் பெறமுடியும்.

காற்றாழை

உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்கக் கூடியது. கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங் கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.
இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும். வெயில் காலத்தில் சிலருக்குக் கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழைத் துண்டை வைத்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு. சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு,உடலுக்குப் பல நன்மைகளும் கிடைக்கும். கோடையில் கோடை உழவு செய்வதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம், மழை நீரைச் சேகரிக்கலாம்.

காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பு, வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு,பூண்டு, உட்பட 14 இயற்கைப் பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாகக் கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்குத் தண்ணீர் பாய்ச்சவும். இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருவாகிறது. ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையிலான இயற்கை உரம்போதும். இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது. இயற்கை உரங்களால் ளைவிக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங்காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.

மாமரத்தில் இடை உழவு செய்வதன் மூலம் மரத்தைச் சுற்றி மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கலாம். வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேம்பு கலந்த பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் தெளித்தும், ஒட்டுண்ணிகள் வெளியிட்டும் நம் உழவர் நண்பர்களைக் காப்போம். ராகியில் வரிசை நடவு முறையைப் பின்பற்றி மகசூலை 20-30 % அதிகரிப்பீர் உரம் வாங்கும் போது உர மூட்டையில் உள்ள அதிகபட்ச உர விலை சரி பார்த்து ரசீது கேட்டு வாங்கவும். உர விற்பனை சம்பந்தமான புகார் இருப்பின் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனருக்குத் தகவல் தெரிவிக்கவும். உளுந்து, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகிய பயறு வகைப் பயிர்களை சேமிச்சு வைக்கும் போது சாக்கு/டிரம்மில் முதல் கைப்பிடி அளவு உப்பை அடியில் போட்டிட்டு, அதன் மேல் பயறுகளைக் கொட்டி சேமிக்கணும். இப்படிச் செய்தால், பூச்சி, பொட்டு எதுவும் வராது. “ இயற்கை உரங்கள் அவசியம் பயன்படுத்தப்பட வேண்டுமா?” “இயற்கை உரம்தான் மண்ணுக்கு நல்லது. ஆனா, இந்தக் காலத்துல எப்படி இயற்கை உரம் கிடைக்கும்னு எல்லாரும் கேட்கிறாங்க. தக்கை பூண்டும், மணிலா அகத்தியும் பசுந்தாள் உரம் கொடுக்கிறதுல முதலிடம் வகிக்குது. அறுபது நாட்கள்ல ஒரு ஏக்கர் நிலத்துல 8 முதல் 25 டன் பயோ-மாஸ் (தழைச்சத்து) இதன் மூலமாகக் கிடைக்குது. ஒரு நாளைக்கு சுமார் 3 கிலோ நைட்ரஜன் தழைச்சத்தை மண்ணில் உருவாக்குது. அப்புறம் எதுக்கு ரசாயன உரங்கள்.

தக்கைப் பூண்டு விதைகளை 20 கிலோ வாங்கி ஒரு ஏக்கர்ல விதைக்கலாம். ஒரு கிலோ  25 ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு 500 ரூபாய்தான் செலவு பிடிக்கும். இந்தச் செலவுலயே 25 டன் பசுத்தாள் உரத்தை உற்பத்தி செய்யமுடியும். இயற்கை உரங்களை விலைக்கு வாங்கிப் போட்டா கட்டுப்படியாகாது. நாமே உற்பத்தி செய்துக்கறதுதான் சரியான முறை. இயற்கை உரம்ங்கறது தாய்ப்பால் கொடுக்கறது மாதிரி ஆரோக்கியமானது. ரசாயன உரம்ங்கறது புட்டிப் பால் கொடுக்கறதுக்குச் சமம்”. ஒரு மூட்டை அரிசியில் 10 -15 காய்ந்த மிளகாய்களை போட்டு வைத்தால் வண்டு தாக்குதல் இருக்காது.

கோடையில் கோழிகளுக்குத் தண்ணீர்ப் பராமரிப்பு

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினைத் தணித்துக் கொள்ள முடியும். இதற்காகக் கோழியின் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க, தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்ததால் வெப்ப அயர்ச்சிக் குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதில் குறைந்த செலவில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய்ப் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும். கேரளாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்பு… பனை மரத்தில் “ பெண் மரத்தை “ உருவாக்க.. ஒரே ஒரு வட்டு உள்ள நொங்கு விதையை பயன்படுத்தலாம்…

 பனையை வெட்டினால்… நதிகள் வறண்டு போகும்…!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய  தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்து வேர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தைத் தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையைத் தேடிச்செல்லும்.. அதுமட்டுமில்லாமல் தனது வேரைக் குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்பாதைக்குக் கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப் பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜீவ நதியாக ஓட  வழிவகை செய்யும். இந்தப் பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை… நதிகளைக் காப்பாற்றப் பனைமரங்களை வெட்டுவதைத் தவிர்க்கவும்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →