முக நூல் பக்கம் – முருங்கை கீரை

drumstick-leavesமுருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரை இடித்துச் சாறு பிழிந்து தேனுடன் பாலைச் சேர்த்து அதைக் கொதிக்க வைத்துகுறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.

முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையை நன்றாகப் பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது
வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும் சிறுநீரைத் தெளிய வைக்கும்.

முருங்கை இலைக் காம்பு

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் கறிவேப்பிலை,
பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து சூப் வைத்து அருந்தினால்,
நரம்புகள் வலிமை பெறம்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியாகும்.  வறட்டு இருமல்
போகும்.

முருங்கை விதை

முற்றிய முருங்கைக் காய் விதைகளைத் தனியாக எடுத்து அதை நன்றாகக் காய வைத்து
லேசாக நெய்யில் வதக்க வேண்டும், பிறகு அதைப் பொடியாக்கிப் பாலில் கலந்து சாப்பிட்டு
வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின்
எண்ணிக்கை அதிகமாகும்.  உடல் வலுவடையும்.

முருங்கைக் காய்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும்.  வயிற்றுப் புண்ணைப் போக்கும் மேலும் மூல
நோய்க்கு மிகச் சிறந்தமருந்தாகவும், சளியைப் போக்கும் தன்மை கொண்டதாகவும்
இருக்கிறது.

முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களைக் கொண்டது.  முருங்கைக் காய் பொரியல்
அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைப் பிஞ்சு

முருங்கைப் பிஞ்சை எடுத்து அதைச் சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு
வந்தால் இரத்தம் சம்பந்தமான அனைத்து நோய்களும் சரியாகும்.  இரத்த சிவப்பணுக்கள்
எண்ணிக்கை அதிகமாகும்.

முருங்கைப் பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது, இது எலும்புகளுக்கு வலுவை
அளிக்கின்றது.  எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.

முருங்கைப் பூ

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையைப் போக்கும் தன்மை கொண்டது.  முருங்கைப் பூவை
பாலில் வேகவைத்து – பிறகு அந்தப் பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள்
குளிர்ச்சி அடையும்.

முருங்கை கீரை

முருங்கை இலையை சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.
முருங்கை கீரையில் அதிகமாக இரும்புச் சத்து மற்றும் கால்சியமும் உள்ளன.  எனவே இதைச்
சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →