மொழி

413-Thiruvalluvar-Statue-kkஒரு குழந்தை பிறந்தவுடன் ‘ தாய்ப்பாலை’ த் தான் குடிக்கிறது.  அப்போது அத்தாய்அதற்குப் பேசும் முறைகளைக் கற்றுத் தருகிறாள். அவளால் கற்றுத் தரப்படும்அம்மொழி தான் ‘தாய்மொழி’ எனப்படும்.  அம் மொழியோடு அதற்கு உணவூட்டி,தாலாட்டி, சீராட்டி, ஆடல், பாடல்களோடு தன் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தருகிறாள்.அது தான் பண்பாடு, கலாச்சாரம், கலை என்றாகிறது.  ஆகவே ஒரு மொழி தான் -அதுவும் ‘ தாய்மொழி’ தான் ஒருவனை உருவாக்குகிறது, சமுதாயத்தை உருவாக்குகிறது; நாட்டை உருவாக்குகிறது.  ஆகவே, ஒருவனை உலகுக்கு இன்னார் என்று அறிமுகப்படுத்துவது அவனது மொழியே.  ஆக மொழி வாழ்க!