வாழ்க்கையில் / தொழிலில் வெற்றியாளர் ஆவது எப்படி?

confidentவாழ்வில் நாம் அனைவரும் மேலும் மேலும் முன்னேறி வெற்றியடைய விரும்புகிறோம். அதுவும், நிலையாக, இடையறாது முன்னேற வேண்டும் என முயற்சிப்போம். இந்த நினைவு ஒவ்வொருவரையும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்யத் தூண்டுகிறது.

நாம் வாழும் வாழ்க்கை சாதாரணமானது அல்ல; செய்யும் தொழிலும் அதுபோலத் தான் Š மிக வேகமாகப் போட்டி, பொறாமைகள் நிறைந்தது. இந்த வேகத்தில் செல்லும் போது, என்னென்ன முயற்சிகளை, என்ன குணங்களை நம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதலில், வெற்றி பெறத் தேவையான 3 C க்கள் என்ன என்பதை அறிவோம்:-
3 C ’S COURAGE (தைரியம்), CONFIDENCE (நம்பிக்கை)CONVINCING (திருப்திபடுத்தும் திறன்)முதல் C COURAGE (தைரியம்)தைரியத்தை வளர்த்துக் கொள்ள மிகச் சரியான வழி கற்பனையான தைரியத்தைக் கனவு காண வேண்டும் (IMAGINATION). எதைக் கூற விரும்பினாலும், தைரியமாக உரத்த குரலில், தெளிவாகக் கூற வேண்டும்.இரண்டாவது C-CONFIDENCE (நம்பிக்கை)நம்பிக்கை வெற்றிக்குத் தோழன். ஒரு செயலை நிச்சயமாக என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மனதில் இருந்தால் நிச்சயம் வெற்றிக் கனியை எட்டலாம். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, தினமும் கண்ணாடி முன் நின்று, நம்மைப் பார்த்து நாமே சொல்லிக் கொள்ள வேண்டியவை: “என்னால் முடியும் ICAN”. “நான் நிச்சயம் வெல்வேன் I WILL SURELY WIN;”“நான் தைரியசாலி – I AM COURAGEOUS”“நான் நம்பிக்கை உள்ளவன் – I AM CONFIDENT”“நான் சாதனையாளன் – I AM SUCCESSFUL” – போன்ற வாக்கியங்களை இடைவிடாது தினமும் மனதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.மூன்றாவது CCONVINCING ABILITY (திருப்திபடுத்தும்திறன்)எப்பொழுது ஒரு செயலைத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் செய்கிறோமோ, அப்பொழுது நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களைத் திருப்திப்படுத்தும்.  புன்னகையை நாம் அணிந்திருந்தால் எதையும், நாடித்தேடி நாம் அலைய வேண்டியதில்லை.  அவை தானே நம்மைத் தேடி வரும்.வெற்றிச் சக்கரம்எடுத்த காரியம் கைகூட வேண்டும் என்பது பொதுவாக நாம் அனைவரும் எதிர்பார்ப்பதுதான்.  சரியான முயற்சி எடுத்தால் வெற்றி பெற முடியும்.  சரியான முடிவைச் சரியான நேரத்தில் எடுத்தால் Š நிச்சயம் வெற்றி பெற முடியும்.“திட்டமிட்டு முயற்சித்தால், வெற்றியில் நிச்சயம் ஜொலிக்கலாம்”. வாழ்க்கையில் வெற்றி பெற மேலும் தேவைப்படும் விச­யங்கள்:- உண்மை, நேர்மை, பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருப்பது, பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தல்.வெற்றி என்பது பல்வேறு பொருள் கொண்டது.  சிலருக்கு வெற்றி என்பது நிறைய பணம் சம்பாதிப்பது.  வேறு சிலருக்கு வெற்றி என்பது ஒரு நல்ல மரியாதையான வேலையில் சேர்வது,

table

மேலும் சிலருக்கு வெற்றி என்பது நன்றாகப் படித்து, எல்லோர் மத்தியிலும் புகழ் பெற்று இருப்பது. ஏதாவது ஒரு நேரத்தில் வெற்றியடைவது வெற்றி அல்ல.  தொடர்ந்து நிலையான வெற்றியைத் தன் சொந்த முயற்சியில் பெறுவதே உண்மையான வெற்றி.

வாழ்க்கையில் ஒரு வேலையில் முழு ஈடுபாட்டோடு சுறுசுறுப்பாகச் செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும்.  வெற்றி பெற்ற மனிதர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் சாதாரணமாக நாம் எல்லோரும் செய்யும் செயல்களைத்தான் வித்தியாகமாகச் செய்கிறார்கள். அதே போல், காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.எனவே, வெற்றிப்பாதையில் செல்வோம்;  சாதனைப் படிகட்டுகளை எட்டிப் பிடிப்போம்.