வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளச் சில வழிமுறைகள்

CB07_SHOPPING_1261172fநாம் கடைகளில் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்னால் நம்மைக் கண்காணிக்கச் சேல்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் நாம் அந்த வியாபாரத்தில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு விளக்கம் கடைகளில் வாடிக்கயாளரைக் கண்காணிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதை கேமரா, பார்கோட் போன்ற முறைகளில் செய்தால் எத்தனையோ முறை நமக்கு அந்தப் பொருட்களைப் பொறுமையாகப் பார்த்து, சிந்தித்து சுதந்திரமாக வாங்க முடியும். இதனால் அந்த வியாபாரத்தை நம்மால் பலமுறை செய்யாமல் போக வேண்டியுள்ளது.  அதற்கு மாறாக ஒரு சிறிய இடைவேளை கிடைத்தால் நம்மால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும். நமக்கு அந்தப்பொருளைப் பார்க்கவேண்டும் எனில் அங்கு உள்ள சேல்ஸ்மேனை அழைத்து அதை நமக்குக் காட்டும் படி கேட்கலாம். இதனால் கடையில் உள்ளவரும் வாடிக்கையளர்களை நன்கு கவனித்து வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சேவை சார்ந்த வணிக மேம்பாடு:

வாடிக்கையாளர்கள் சேவையைத் தேடி வரும் போது அவர்கள் அந்தச் சேவையை முழுமையாகப் பெற செய்யும் தொழில்களில் உள்ள நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ள நபர்களுக்கு மக்களைச் சந்தித்துப்பேச அவர்களிடம் உள்ள தேவையைப் பூர்த்தி செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட நபர்களை மட்டுமே அப்பணியில் அமர்த்த வேண்டும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய ஆர்வம் கொண்டவர்களை ஆரம்ப காலத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த சிறந்த ஊழியர்களின் கீழ் சிறிது காலம் சேவை புரிவதில் நல்ல ஒழுக்கமும், ஆர்வமும் உள்ளதா என்று அறிந்து அந்தப் பணியை அந்தப் புதிய நபரிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

அவர் அந்த வேலையை முழுமையாகச் செய்யும் திறன் வாய்ந்து உள்ளவரா என்று கண்டு அறியஅவர்களின் சேவையில் ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளரின் நேர்முகக் காணல் உதவும். அவ்வப்போது காலத்திற்கேற்ற விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்கள் பற்றி அவர் தெரிந்து இருக்க வேண்டும். வாடிக்கையளரை நன்கு அறிந்து அவர்கள் தேவையை முதற்கண் கேட்டறிந்து தீர்வுகளைத்தர வேண்டும். அந்தத் தீர்வைத்தர முடியாமல் போகும் சமயத்தில் அவர்களிடம் நேர்மையான விளக்கத்தைக் கூறி அந்த தேவையை மேலிடத்தில் தகவல் அளிக்கும் பங்கும் அந்த நபருக்கு இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரைக் காக்க வைக்க நேரிட்டால் அவர்களிடம் அதைத் தெளிவாகக் கூறி எனக்கு 10 நிமிடம் வேண்டும் சார். தயவு செய்து சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று கூற வேண்டும். மேலும் சேவையைப் பற்றி முறையாக அறிந்து புதியதாக உள்ள பொருட்களைப் பற்றிக் கூறும் போது கால அவகாசம் வேண்டி, கேட்டு அதைக் கவனித்து மீண்டும் அத்தேவை எழும்போது அதற்கு அந்தத் தீர்வை அளிக்க வேண்டும். கட்டணம் பெறும் போது, கட்டண விவரம் அந்த பில்லில் தெளிவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அதில் உள்ள விவரத்தைப் புரிந்து கொண்டார்களா என்று தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு வியாபாரம் கொடுக்கும் நபரின் தேவையை இயன்ற வரை பூர்த்தி செய்தால் நம் வளர்ச்சியில் நாம் கற்பனை செய்யாத அளவுக்கு வளர்ந்து விடலாம் என்பது காலம் கண்ட உண்மை என்பதை அறியலாம்.

வாடிக்கையாளர் அணுகுமுறைப் பயிற்சி :

எல்லாத் தொழில்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் விற்றது பொருளா அல்லது சேவையா என்று நன்கு அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.  உதாரணமாக வாடிக்கையாளர்கள் ஒரு பம்புசெட் கேட்டு வரலாம், அந்த நேரம் பம்புசெட் பற்றி அவருக்கு எடுத்து உரைக்கும் முன் அவர் பம்பை வைத்து என்ன செய்ய நினைக்கிறார் என்று கேட்க வேண்டும் ஏற்கனவே என்ன பம்பை உபயோகிக்கிறார் எனத்தெரிந்து கொள்ள வேண்டும். என்ன பிரச்சனை இப்போது உள்ளது எனக் கண்டறிய வேண்டும். அவர் புதிய பம்பை வாங்க வேண்டும் என்றால், பம்பு பயன்படப்போகும் இடத்தில் உள்ள அமைப்பைக் கேட்டு அதற்கு ஏற்பப் பம்பு நம்மிடம் உள்ளதென்றால் அதற்குண்டான நிலையையும் மற்றஉத்திரவாதத்தைப் பற்றியும் கூறி அந்த வியாபாரத்தை முடிக்க முயல வேண்டும். அதே சமயம் உத்திரவாதத்தில் என்னவெல்லாம் அடங்கும் என்று தெளிவாகக் கூற வேண்டும்.

சேவைப் பணி என்பது சாமான்யமானதல்ல, ஒவ்வொருவர் தேவை வேறுவேறானது. அதனால் அதை இரண்டு பகுதியாகப் பிரித்து நம் நிறுவனம் அளிக்கும் சேவையைதான் அவர்கள் நாடி உள்ளார்களா என்று அறிந்த பின்னர் நம் சேவைகளில் எது அவர்களுக்கு உகந்ததோ அதை அவர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் நம்மிடம் வியாபாரம் செய்ய முன்வருவதோடு மட்டுமின்றி மற்றவரிடம் பரிந்துறை செய்வார்கள். இப்பரிந்துறைமுறை மூலம் கிடைக்கக்கூடிய வியாபாரமே ஒரு தொழிலுக்கு மிக சிறந்தது.

இதற்கு நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை விற்பனைக்கு முன்பு மட்டும் அல்லாமல், அதன் பின்பும் கவனமாகக் கூர்ந்து சேவை புரிந்தால் சேவை புரிபவர்க்கு நல்ல ஊதியமும், நிறுவனத்திற்குக் கூடுதல் வாடிக்கையாளரும் நல்ல லாபமும் ஈட்டித் தரும்.